🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 25/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 23537.85
பேங்க் நிப்டி : 51703.95
சென்செக்ஸ் : 77341.08
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5489
22 K தங்கம்/ g. : ₹ 6701
24 K தங்கம்/g : ₹ 7311
வெள்ளி /g : ₹ 96.10
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
பதிவு
25/6/2024
*புழல் மின்வாரிய அதிகாரிகள் பார்வைக்கு*
மண்டலம் -2,சென்னை புழல்,வார்ட் -23 ,காந்தி 2 வது தெரு என்ற விலாசம் அருகே உள்ள E B போஸ்டர் பழுதடைந்து மிக மோசமாக உயிர்பலி வாங்க காத்திருக்கும் நிலையில் உள்ளது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள்.
🌹 *பேனாமுள் செய்திகள்**🌹
✍️ *நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது மோடி, புதிய எம்பிக்கள் பதவியேற்பு: அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி எதிர்க்கட்சிகள் முழக்கம்; நீட் எதிர்ப்பு கோஷங்களால் அவையில் பரபரப்பு*
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி பதவியேற்றபோது அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் முழக்கமிட்டனர்.அதே போல், மத்திய கல்வித் துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்றபோது நீட் தேர்வு முறைகேடு குறித்து கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15 கோடியில் ‘ரோபோட்டிக் லேப்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு*
மாவட்டந்தோறும் தலா ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (ரோபோட்டிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 59 ஆனது விஷ சாராய வழக்கில் மேலும் 7 பேர் கைது: 9 பேரை காவலில் விசாரிக்க நடவடிக்கை*
பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.7 பேரை கைது செய்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்மூலம் 21 பேர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
🌹🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு*
✍️ *நில தகராறில் பயங்கரம்; நள்ளிரவில் தலை துண்டித்து முதியவர் கொடூர கொலை: மைத்துனர் மகன் அதிரடி கைது*
✍️ *நண்பரின் எதிரியை வெட்ட சென்ற வாலிபர் படுகொலை*
✍️ *தகாத உறவை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரிப்பு: கல்லூரி மாணவருடன் மருமகள் கைது*
✍️ *நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி தொழிலில் பார்ட்னராக சேர்ந்த பெண்ணிடம் ரூ2.5 லட்சம் பறிப்பு: ஓட்டல் உரிமையாளர் கைது*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம்*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *அரிய நாணயங்களை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி*
'அரிய நாணயங்களை பாதுகாக்க வேண்டியது வரலாற்றுக்கு அவசியம்,'' என, சென்னை அருங்காட்சியக முன்னாள் காப்பாளரும், ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு கல்வியக இயக்குனருமான ஜெயராஜ் கூறினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *குல தெய்வ வழிபாடு தகவல்: கவர்னர் அலுவலகம் விளக்கம்*
'குல தெய்வ வழிபாடு குறித்து, கவர்னர் கூறியதாக பரவும் உண்மைக்கு மாறான தகவலை நம்ப வேண்டாம்' என, கவர்னர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி: பாசி, கண்ணாடி மணி கண்டெடுப்பு*
சிவகங்கை மாவட்டம் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ '*ஆல்கஹால் அளவை பதிவு பண்ணுங்க!': தமிழக சுகாதாரத்துறை*
காயம் அல்லது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நபர்களிடம், ரத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அவர்களிடம், மது வாசனை வீசினால், ஆல்கஹால் அளவு குறித்து உரிய பதிவேடுகளில் குறிப்பிடப்படுவது அவசியம்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சபாநாயகருக்கு எதிரான புகார்: முதன்மை நீதிபதிக்கு உத்தரவு*
புகாரை கோப்புக்கு எடுத்து, சட்டப்படி நடவடிக்கையை தொடர, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்
🌹 *பேனாமுள் பத்திரிகை (விளையாட்டு)*🌹
*அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ரோகித் சர்மா விலாசல்*
✍️ *சுப்மன் புதிய கேப்டன்: இந்திய அணி அறிவிப்பு*
✍️ *அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா * வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*