2/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 2/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,710 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,320 (1 கிராம்) ஆகவும் வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 98 ஆகவும் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*

✍️ மக்களவை தேர்தல் நிறைவுபெற்றது கடைசிக்கட்டத்தில் 60% வாக்குப்பதிவு: 

பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் நேற்று நடந்த கடைசிக்கட்ட மக்களவை தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவியது. இத்துடன் நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்த மக்களவை தேர்தல் நிறைவடைந்தது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை, இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடத்தைபடி, தபால் ஓட்டுகளை எண்ணும் பணி முதலில் தேர்தல் அதிகாரி மேஜையில் தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் முதல் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ சட்டப்பேரவை தேர்தல் அருணாச்சல், சிக்கிமில் இன்று ஓட்டு எண்ணிக்கை

சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்த அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: சோனியா, ராகுல், சரத்பவார், கெஜ்ரிவால் பங்கேற்பு

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்

நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி திட்டம் தீட்டியதாக பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேரை மும்பை அருகே போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.9 கோடி மோசடி

பங்கு வர்த்தகம் செய்வதற்கான வாட்ஸ் அப் ஆலோசனைக் குழுவில் இணைந்த நொய்டா தொழிலதிபரிடம் ரூ.9 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ சென்னையிலிருந்து புறப்பட்ட மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறங்கியதால் பீதி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ 7 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை: கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் குறைவு

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!

போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில், மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன் வேதாந்த் அகர்வாலின் தாய் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டார். விபத்தில் தொடர்புடைய தனது மகனின் ரத்த மாதிரியை மாற்றி வைத்து, தனது மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக சான்று பெற்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஜெரால்டு நேற்று பிற்பகல் தனது பாட்டிக்கு உணவு கொடுப்பதற்காக சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டின் வெளியே வந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த நாய் திடீரென்று ஓடிவந்து ஜெரால்டை துரத்திச் சென்று முகம், காது, மூக்கு என உடல் முழுவதும் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த ஜெரால்டு வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு வந்த ஜோஸ்வா, ஜெரால்டை மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐசிசி டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்: முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல்; 20 அணிகள் பங்கேற்பு

பேனாமுள் பத்திரிகை செய்திகள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments