30/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 30/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂


🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷


குறள் : 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பெட்ரோல்விலை*-100.75
       *டீசல் விலை*-92.34

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5476
22 K தங்கம்/ g. : ₹ 6685
24 K தங்கம்/g   : ₹ 7293
    வெள்ளி    /g   : ₹ 94.50

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா 2வது முறையாக சாம்பியன்: பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அபாரம் ரசிகர்கள் கொண்டாட்டம்*

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 20 ஓவர் உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி*

சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 3 அறைகள் தரைமட்டமாயின.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்*

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல் நடப்பதாக புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார் அளித்து உள்ளனர். அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்*

திருச்சியில் செல்போன் பறித்து தப்பிய திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *முன்னாள் காதலியிடம் பேசியதால் ஆத்திரம் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை : பாஜ மாநில துணை தலைவர் மகன் கைது*

துரைப்பாக்கத்தில் முன்னாள் காதலியிடம் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தன்னுடன் பணியாற்றி வந்த வெப்சைட் நிறுவன ஊழியரை அடித்துக்கொன்ற பாஜ மாநில துணை தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனமுள் செய்திகள்*🌹

✍️ *வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்*

பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளக்காடாக மாறி உள்ளது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள முகாமிற்கும் இடம் பெயர்ந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் என பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி : இருவர் கைது*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை*

திருவள்ளூரில்ரூ.2.53 கோடி மதிப்புள்ள கார்களை கடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 26 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *காவலரின் மண்டையை உடைத்த ஐடி ஊழியர் சிறையில் அடைப்பு*

கஞ்சா போதையில் இருந்த அஜித்குமார் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த அஜித்குமார், காவலர் சரவணன் தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பினார்.இதில், காவலர் சரவணன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அஜித்குமாருடன் வந்த அகிலேஷை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் நாவல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அகிலேஷ், பெருங்குடியில் ஐடி கம்பெனியில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும், அஜித்குமாருடன் சேர்ந்து கஞ்சா புகைத்தது தெரியவந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ '*லிப்ட்'டுக்குள் சிக்கியவரை மீட்கும் போது கால் தவறி லிப்ட் பாதையில் விழுந்து பலி*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கு ரத்து*

போலி ஆவணங்கள் தயாரித்து, நில மோசடி செய்ததாக, நடிகை குட்டி பத்மினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நாளை முதல் ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கை*

ஐ.டி.ஐ., நிறுவனங்களில், நாளை முதல் 15ம் தேதி வரை, நேரடி மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பள்ளிக்கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்*

பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதன் காரணமாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராமவர்மா, தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

.✍️ *குடிநீரில் கழிவுநீர் கலப்பு பழனிசாமி கண்டனம்*

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய, 11 வயது சிறுவன் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், ஒரு மாதத்தில் சுகாதாரமற்ற குடிநீரால், 10 பேர் பலியானதாக செய்திகள் வந்த நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை, அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என பழனிசாமி கூறினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு*

'தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மொபைல் சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்*

புதிய சிம் கார்டு வாங்கினால் அல்லது அது மோசடிக்காரர்களால் முடக்கப்பட்டிருந்தால், மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கான கால அவகாசம், 10 நாளில் இருந்து ஏழு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *21 ஆண்டுகளான ஆயுள் கைதிகளை உடனே விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு*

புதுச்சேரி சிறையில், 21 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக இருப்பவரை உடனடியாக விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி*

கேரளாவில், கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி ஊழலில் தொடர்புடைய பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சொந்தமான நிலம் மற்றும் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கி டிபாசிட்களை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *6 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் தாழ்தள பஸ்கள்*

இரண்டு புதிய தாழ்தள பேருந்துகள், ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமனைக்கு எடுத்து வரப்பட்டு உள்ளன. இவை, விரைவில் சென்னையில் இயக்கப்பட உள்ளன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ரூ.4.64 கோடியில் மெரினா கண்காணிப்பு திட்டம் சென்னை, புறநகரில் புதிய காவல் நிலையங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு*

சென்னை கொளத்துார், கேளம்பாக்கம், செங்குன்றம் பகுதியில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்படும்

கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் உருவாக்கப்படும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சிறுவனை கடிக்க வந்த நாய்கள்; வீடியோ வைரல்*

போத்தனூர் அடுத்த வெள்ளலூரில் ஒரு வீட்டின் முன் நிற்கும் சிறுவன் கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்கிறான். தொடர்ந்து அங்கு நிற்கும் பைக்கை தாண்டிச் செல்ல முற்படுகிறான், அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை நோக்கி ஓடி வருகிறது. தொடர்ந்து மேலும் மூன்று நாய்கள் வருகின்றன.

இதனை கண்ட சிறுவன் அச்சமடைந்து, பைக்கினை ஒட்டி மறைந்துகொள்ள முயல்கிறான். அப்போது வீட்டினுள் இருந்து ஒருவர் ஓடி வந்து சிறுவனை தூக்குகிறார். உடனே நாய்கள் திரும்ப ஓடிவிடுகின்றன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சைதையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு! வடமாநிலத்தவர் என்பதால் லஞ்சம் கேட்டு அடாவடி*

சைதாப்பேட்டையில் வாந்தி, பேதி ஏற்பட்டு, 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அவனது தங்கையான, 7 வயது சிறுமியும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், குடிநீர் மாதிரிகளை, உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது, வடமாநிலத்தவர் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அடாவடி செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கள்ளசாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள்தண்டனை, 10 லட்சம் அபராதம் தமிழகத்தில் புதிய சட்டம்*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments