3/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 3/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 41 
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

🇮🇳*பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

✒️*பேனாமுள் செய்திகள்*✒️

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,709 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,319 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 97.90 ஆகவும் உள்ளது.

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அருணாச்சலில் மீண்டும் பாஜ ஆட்சி: சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அருணாச்சலில் பாஜ மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காலம் முடிந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று திகார் சிறையில் சரணடைந்தார்.

👍 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தடுமாறும் ஏர் இந்தியா வான்கூவர் விமானம் 22 மணி நேரம் தாமதம்: மீண்டும் மீண்டும் கோளாறு

டெல்லியிலிருந்து வான்கூவர் செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 22 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ 101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை:

கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்:

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் இடையே ரோப் கார் திட்டப்பணிகளை விரைவில் தொடங்க திட்டம்

சென்னை: மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் இடையிலான ரோப் கார் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் (பிரக்ஞானந்தா) வரவு நல்வரவாகட்டும், ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம்

தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் 5ம் தேதி வரை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று் எதிர்பார்க்கப்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் வரும் 9ம் தேதி குரூப் 4 தேர்வு 6,244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை

எழுத்து தேர்வு வரும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது.  தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ செல்போன், ஓட்டுநர் உரிமத்துடன் ஆஜராக யூடியூபர் வாசனுக்கு சம்மன்

மதுரை: செல்போன் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆவணத்துடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி யூடியூபர் வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ சின்னசேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 

சின்னசேலம் அருகே விவசாய தொழிலாளர்கள் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்

ஊட்டி ஜி1 காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மெயின் பஜார் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையிலும் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர்: வீடியோ வைரல்

கார், முன்னாள் சென்ற சில வாகனங்கள் மீது இடித்து சென்றது.இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து பார்த்தபோது, அந்த காரை ஓட்டி வந்தது ராமதுரை என்ற காவலர் என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம், இப்படி தாறுமாறாக போதையில் காரை ஓட்டுகிறீர்களே இது நியாயமா, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய நீங்களே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடலாமா, உங்கள் செயலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பேருந்தில் செயின் பறித்த பெண்கள் கைது: தப்பிய 2 பேருக்கு வலை

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் தீவிபத்து

அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகில் சி.டி.எச் சாலையையொட்டி யுவராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த விற்பனை நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த அனைத்துப் பொருள்களும் கொழுந்து விட்டு எரிந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் சிடிஎச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

*🌹பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நியூ கினியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

✍️ பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்: 2வது சுற்றில் போபண்ணா ஜோடி

*🌹பேனாமுள்செய்திகள்*🌹

✍️ கனடாவுடன் தொடக்க லீக் ஆட்டம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அபார வெற்றி: ஜோன்ஸ் கவுஸ் அதிரடி

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments