4/6/2025 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 4/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 23263.9
பேங்க் நிப்டி : 50979.95
சென்செக்ஸ் : 76468.78

✒️ *பேனாமுள் செய்திகள்*🌹

ஆவடி பருத்திப்பட்டு 48 வது வார்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை காரணமாக மாற்று டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி இன்று நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள்

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,665 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,271 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 97.20 ஆகவும் உள்ளது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

ஓட்டு எண்ணிக்கையின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, மாநிலம் முழுதும் முக்கிய இடங்களில், தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு செயல்தலைவர் நியமனம்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான விஜய பாரதி சயானி, அந்த அமைப்பின் செயல் தலைவரானார்.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (6ம் தேதி) காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மாவட்டம் முழுவதும் கலைஞர் 101வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: 

மெரினா கடற்கரையில் பார்க்கிங் கட்டண ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க கூடாது, என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ குடும்ப தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை தற்கொலை

போரூரில் குடும்ப தகராறில் பெற்ற மகனை ஏரியில் வீசிய தந்தையை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ மருந்து குடோனில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்: 

அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருந்து குடோனில் வணிக ரீதியாகவும் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால் மற்றும் தாய்பால் பவுடரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக கே. பெஜி ஜார்ஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: 

திருவாரூர் அருகே நேற்று மாலை டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் லாரி பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ காக்களூர் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: தமிழ்நாடு அரசு சார்பில் கலெக்டர் வழங்கினார்
 
🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

காசிநாதபுரம் கூட்டு சாலையில் பட்டப்பகலில் ரவுடிகள் மூவர் கைகளில் பட்டா கத்திகள் வைத்துக் கொண்டு அவ்வழியாக சென்று வந்த பொதுமக்களை பார்த்து அபாச வார்த்தைகளால் பேசியும், கத்தியை கட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி நகர் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ சென்னை ரயில்வே கோட்டத்தில் 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் மிஷின்

🇮🇳 *பேனமுள் செய்திகள்*🇮🇳

✍️ தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

வெகுநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, மின்சாரம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்டோரை அங்கு வரவழைத்தனர். அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அப்பகுதியில் மின்சாரம் கொடுக்கப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண வல்லுநர்களுடன் ஆலோசனை: 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு, நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக அனைத்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தைகள் திடீர் ஏற்றம்

✍️ ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்தது

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உலகக்கோப்பையில் ஓமனுக்கு எதிராக சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி

✍️ சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments