5/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 5/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 21884.5
பேங்க் நிப்டி : 46928.6
சென்செக்ஸ் : 72079.05

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️பதிவு 
5/6/2024

ஆவடி பருத்திப்பட்டு 48 வார்டில் உள்ள லஷ்மி கிரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை காரணமாக 4/6/2024 நேற்று டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெறும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறி இருந்தார்கள் ஆனால் நேற்று வேலை ஏதும் நடைபெறவில்லை இன்று 5/6/2024 நடைபெறும் என்று கூறி இருக்கிறார்கள்.

*🌹பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,746 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,359 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 98.60 ஆகவும் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை பாஜ கூட்டணி ஆட்சியை பிடித்தது: 290 இடங்களை கைப்பற்றியது; காங்கிரஸ் கூட்டணி 235 இடங்களில் வெற்றி

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைக்க தகுதி பெற்றுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் மு.க.ஸ்டாலின் வெற்றியை முத்தமிழறிஞர் கலைஞருக்குச் சமர்ப்பிப்போம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொடர்ந்து 3வது முறையாக வெற்றி இது ஒரு வரலாற்று சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திமுக நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் 1 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பதவி என்பது மக்களுக்கு பணியாற்ற ஒரு பாதை தேர்தல் முடிவுகள் அதிமுகவை சோர்வடைய செய்யாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆந்திராவில் மாபெரும் வெற்றி சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வயநாடு, ரேபரேலியில் ராகுல் அட்டகாச வெற்றி

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஆனி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி சென்னையின் 3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் சென்னையின் 3 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக, என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி 8ம் தேதி வரை மழை நீடிக்கும்

தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழ்நாடு மாணவர்கள் 7 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை

கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 67 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்ைட சேர்ந்த மாணவ, மாணவியர் 7 பேர் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் பங்கேற்றனர். 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 சவரன், பிளாட்டினம் திருட்டு

*பேனாமுள் செய்திசெய்திகள்*

புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்குச்சந்தை கடும் சரிவு முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.31 லட்சம் கோடி இழந்தனர்

பாஜவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.31 லட்சம் கோடியை இழந்தனர்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இண்டியா' கூட்டம்: இன்று டில்லி செல்கிறார் ஸ்டாலின்

இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்கிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி!

தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கோவை லோக்சபா தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி

மாணிக்கம் தாகூர் மற்றும் விஜயபிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது.
கடைசி வரை போராட்டமாகவே இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியாக மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

சவுமியா கடைசிவரை போராடிய அவர், 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 ஓட்டுகள் பெற்று, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தி.மு.க., வேட்பாளர் மணி, 4 லட்சத்து 32,667 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இகா

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments