🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 6/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22620.35
பேங்க் நிப்டி : 49054.6
சென்செக்ஸ் : 74382.24
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை - ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,724 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,335 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 96.10 ஆகவும் உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டை முன்னிட்டு 15/6/2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அயப்பாக்கம் மெயின் ரோடு பருத்திப்பட்டு VGN Plantina சென்னை - 600077 அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..*
பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டு நிகழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.
அனைவரும் வருக! வருக!! என வரவேற்கும்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
பதிவு
6/6/2024
ஆவடி பருத்திப்பட்டு 48 வது வார்ட்ல் உள்ள லஷ்மி கிரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை காரணமாக 4/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெறும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ஆனால் இது வரை வேலை எதுவும் நடைபெறவில்லை மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது இன்று 6/6/2024 நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள்.
*🌹பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக: 8ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி: தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் முடிவு
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நீட் தேர்வில் 720க்கு 720 பெற்று முதலிடம் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை
நீட் நுழைவுத்தேர்வில், திருவண்ணாமலை மாணவி, ராமநாதபுரம் மாணவன் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், தமிழ்நாட்டில் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர்களிடம் இன்று குறைகள் கேட்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்களின் குறைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை கேட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லைக்குட்பட்ட காவலர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று குறைகளை கேட்கிறார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ செங்கல்பட்டு அருகே பாளூரில் அரிகண்டம் சிற்பம் கண்டெடுப்பு
செங்கல்பட்டு மாவட்டம், பாளூரில், போர் வீரன் தன் தலையை கத்தியால் வெட்டி பலி கொடுக்கும் அரிகண்டம் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லாததால் எப்படி இருந்த பாஜ… இப்படி ஆயிடுச்சே… உதயகுமார் கிண்டல்
அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லாததால், ‘எப்படி இருந்த பாஜ, இப்படி ஆயிடுச்சே’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் காட்டமாகக் கிண்டலடித்து உள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் போபண்ணா ஜோடி: ரைபாகினாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து: இந்தியா – குவைத் இன்று மோதல்
*இரங்கல் செய்தி*
தீக்கதிர் நாளிதழ் சென்னை மாவட்ட செய்தியாளர் தோழர்.எஸ்.கவாஸ்கர் அவர்களின் தந்தை திரு.T.செல்வம் (67) அவர்கள் 5-.6-.2024 அன்று காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்வு எண்.15/20 கமலா நேரு நகர் 2வது தெரு, சூளைமேடு, சென்னை.94 அவரது இல்லத்திலிருந்து 6-.6-.2024 காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது.
அன்னாரது ஆத்மா இறைவன் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
வருத்தத்துடன்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*