8/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 8/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

பதிவு 
8/6/2024

*தமிழக முதல்வர் அவர்கள் பார்வைக்கு ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களாக லோ வோல்டேஜ் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது அதற்கு மின்சாரத்தை அதிகபடுத்த ட்ரான்ஸ்பார்ம் பொருத்தி மின்சாரத்தை சரி செய்ய வேண்டி பலமுறை தகவல் தெரிவித்தும் ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை*

 தொடர்ந்து மின்சாரத்திற்காக போராடிவரும் ஆவடி, பருத்திப்பட்டு, 48 வது வார்டில் உள்ள பகுதியில் மின் பற்றாக்குறை குறித்து மக்கள் கூறியது போல் இரண்டு வருடங்களாக வந்து வேலை செய்யாத மின்சார வாரியம் இப்போதா வந்து செய்யும் என்று கூறினார்கள்
 
அந்த மின் பற்றாக்குறை குறித்து பல தடவை 
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபடபோவதாகவும் தகவல் தெரிவித்தார்கள் தெரிவித்த மறுநாளே சம்பந்தப்பட்ட மின்வாரிய A D அவர்கள் நேரில் வந்து இதுகுறித்து பேசி சமாதானம் செய்து மறுநாளே டிரான்ஸ்பார்மர் வேலை தொடங்கப்படும் என்று அறிவித்தார் 
ஆனால் இதுவரை அந்த பகுதியில் ஒரு குண்டூசி கூட அந்த இடத்தில் அசைக்கப்படாமல் இருக்கிறது 
இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டாலும்  தொலைபேசியை இந்நேரம் வரை எடுக்கவே இல்லை சம்மந்தப்பட்ட மின்வாரிய A D 

அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து மின்பற்றாக்குறை காரணமாக எங்க வீட்டு பொருள்கள் அனைத்தும் வீணாகி கொண்டே தான் இருக்கிறது 
இதற்கு மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு போராட்டம் செய்தால்தான் அவர்கள் உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தாதவாறு  உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 23290.15
பேங்க் நிப்டி : 49803.2
சென்செக்ஸ் : 76693.36

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,841 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,463 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 100.60ஆகவும் உள்ளது.
 
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி: உலக தலைவர்கள் வருகை

தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவரை புதிய பிரதமராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் வருகிறார்கள்.
 
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பாஜவுக்கு ஆதரவாக வேலை செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: எடப்பாடி அதிரடி முடிவு; சேலத்தில் இன்று முக்கிய ஆலோசனை

இன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புதுச்சேரி கூட்டணி அரசில் விரிசல் அமைச்சரவையில் இருந்து வெளியேற பாஜ முடிவு? தேர்தல் தோல்வி, என்.ஆர்.காங்கிரஸ் மீது அதிருப்தியால் விரக்தி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: புதிய எம்பிக்கள் கூட்டமும் நடக்கிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 10ம் தேதி பதவி ஏற்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்

அதிவேகத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பயணி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி பின்புறமாக பேருந்து கதவு மீது சாய்ந்தார். இதனால் கதவு திறந்து அந்த நபர் கீழே விழு இருந்தார். அப்போது சுதாரித்து கொண்ட கண்டக்டர் ஒரு கையால் அவரைப் பிடித்து மேலே இழுத்தார். பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆந்திர முதல்வராக சந்திரபாபு வரும் 12ம் தேதி பதவியேற்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: 

பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ பி.இ மாணவர் சேர்க்கைக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்

நடப்பாண்டு பி.இ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வீட்டில் மனைவியின் பிறந்த நாளை கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்த இளம் தொழிலதிபர் பரிதாப பலி: திருமணமான 8 மாதத்தில் நேர்ந்த சோகம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: 11ம் தேதிக்கு பிறகு வெப்பம் அதிகரிக்கும்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை அரசு தலைமை காஜி அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ரயில்வே, வங்கி பணிகளுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ‘நான் முதல்வன் ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிட பயிற்சியை’ துவங்க உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ செல்போன் பறித்து தப்பிய 2 பேர் பலி

செல்போன் பறித்து தப்பிய 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்று பெற்று ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற காதல் மனைவி கைது

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வெளிநாட்டிற்கு சென்ற கணவர் பெயரில் போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்று 8 ஏக்கர் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்பனை செய்த காதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கோவில்பட்டியில் பயங்கரம் 2 பேர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியில் தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் 2 நாளில் ரூ.920 உயர்ந்தது: சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை

✍️ பாகிஸ்தானை பந்தாடி அமெரிக்கா அமர்க்களம்

✍️ 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

பேனாமுள் பத்தரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments