🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 08/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஜூலை* -08*
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5585
22 K தங்கம்/ g. : ₹ 6819
24 K தங்கம்/g : ₹ 7439
வெள்ளி /g : ₹ 99.20
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஐகோர்ட் உத்தரவுப்படி பொத்துாரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்*
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்துாரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி ஊர்வலம் நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. பவுத்த மத முறையில், அவரது உடலை அடக்கம் செய்ய, கர்நாடகாவில் இருந்து வந்த ஏழு புத்த பிட்சுகள், இறுதி காரியங்களை முன்னின்று நடத்தினர்.
நேற்று இரவு உடல் அடக்கம் நடந்தது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ '*கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்'*
உண்மையான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். அதுவே, தலித் மக்களுக்கு கிடைக்கும் நியாயமாக இருக்கும்.
இந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். கட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.
கட்சித் தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ '*மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு*
போலி ஆவணம் வாயிலாக, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என எட்டு இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பட்டா மாறுதல் விபரம் அறிய புது வசதி; மோசடியை தடுக்க வருவாய் துறை முயற்சி*
சென்னை : சொத்து பரிமாற்றத்தில் மோசடியை தடுக்க, சர்வே எண் வாரியாக, பட்டா மாற்றம் தொடர்பான முந்தைய விபரங்களை தொகுத்து அளிக்கும் புதிய வசதியை, வருவாய் துறை அறிமுகப்படுத்த உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழக வாலிபர்கள் சித்ரவதை; சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு*
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று, 'ஆன்லைன்' மோசடியில் ஈடுபடச் சொல்லி சித்ரவதை செய்வது தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்*
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. அதனால், தலைவர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்.*🌹
✍️ *மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை*
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று காரணமாக உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தண்ணீர் தேங்கிய, மாசுபட்ட நீர்நிலைகள், நீச்சல் குளங்களில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
.✍️ *18.59 லட்சம் குட்டீசுக்கு ரூ.31 கோடியில் சீருடை*
நடப்பாண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்க, 31.89 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பெரிய எழுத்தில் வெளியிட உத்தரவு*
பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில், அதில் உள்ள சத்துக்கள் தொடர்பான விபரங்கள் பெரிய எழுத்தில் இடம்பெற வேண்டும் என்ற திருத்தத்துக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *குஜராத் கட்டட விபத்து பலி எண்ணிக்கை உயர்வு*
குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி கிராமத்தில் ஆறு மாடி கட்டடம், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை*
6-12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்வழங்க அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஜூன்-08) விசாரணைக்கு வர உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை: இ.பி.எஸ்., மீண்டும் சாடல்*
துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். அவர் பச்சோந்தி போல் அவ்வப்போது நிறம் மாறுபவர் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள்: சொல்கிறார் சீமான்*
தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி*
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை*
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை*
இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். இன்றும், நாளையும் அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி, அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*பா ம க பிரமுகரை வெட்டிய வழக்கில் 8 பேர் கைது*
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் என்கின்ற சிவசங்கர்(43).கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இவர் பா.ம.க. பிரமுகர். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருந்த போது பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்புடைய குற்றவாளிகள் திருப்பாதிரிபுலியூர், எஸ்என் சாவடி, சின்ன பொண்ணு நகரைச் சேர்ந்த முருகன் சதீஷ்(27), எஸ்.என் சாவடி, ஐய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (28), கம்மியம்பேட்டை, கெடிலம் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கெளசிக் (18), கடலூர் மஞ்சக்குப்பம், தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த முருகன் மகன் முகிலன்(19), கடலூர், செம்மண்டலம், தீபன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ராஜ்கிரண்(34) ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து தனி இடத்தில் வைத்து போலீசார் ஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கடலூர் எஸ்என் சாவடியை சேர்ந்த மகலிங்கம் மகன்கள் சிவசங்கர், விஜய்பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சிவங்கரின் தம்பி விஜய்பிரபுவை(35) , சதீஷ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கடந்த 29.02.2021ம் தேதி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழங்கில் சிவசங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட வாலிபர்கள்*
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்*
✍️ *தமிழக வீரர் ஜெஸ்வின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*