🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 10/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்
✍️ *ஜூலை* -10*
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24433.2
பேங்க் நிப்டி : 52568.8
சென்செக்ஸ் : 80351.64
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5546
22 K தங்கம்/ g. : ₹ 6770
24 K தங்கம்/g : ₹ 7385
வெள்ளி /g : ₹ 98.90
✍️ *விக்கிரவாண்டியில் இன்று ஓட்டுப்பதிவு*
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவு பெறும்.
✍️ *ஆஸ்திரியா சென்றடைந்தார் மோடி*
ரஷ்யா பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
✍️ *ரஷ்யாவின் உயரிய விருது : மோடிக்கு வழங்கி கவுரவித்தார் புடின்*
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
✍️ *பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்: புடினை சந்தித்த பின் பிரதமர் மோடி பேச்சு*
'பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்ப்போம்' என ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய பின், பிரதமர் மோடி தெரிவித்தார்.
✍️ *மிகப்பெரிய ஏமாற்றம்': புடின் - மோடி சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அதிருப்தி*
பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு, மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
✍️ *ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு*
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம், அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.
✍️ *இந்தோனேஷியா நிலச்சரிவு: 17 பேர் பலி*
ஜகர்த்தா,இந்தோனேஷியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர்.
✍️ *சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு*
தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
✍️ *செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை*
குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டவர் காங்.கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை என பா.ஜ., மாநில தலைவர் அண்ணமாலை குற்றம்சாட்டியுள்ளார்.
✍️ *உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்*
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள், எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை, ஆம்ஸ்டிராங் கொலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங் குடும்பத்தினரை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., ஆறுதல் கூறினார்.
✍️ *கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி*
தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி ஆறுதல் தெரிவித்தார்.
✍️ *ரவுடி பட்டியலில் எனது பெயரா?: ஆதாரத்தை காட்ட அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்*
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு, '' நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?'' என செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
✍️ *தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு;*
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகவுள்ளது
✍️ *அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு*
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும், நான்கு வாரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்*
தமிழகம் முழுதும் 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
✍️ *அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இந்திய மாணவர் பலி*
நியூயார்க்: அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 26 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
✍️ *ஜூன் மாத எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.21,000 கோடியை கடந்தது*
மியூச்சுவல் பண்டுகளில், சீரான முறையில் முதலீடு செய்ய வழிவகுக்கும் எஸ்.ஐ.பி., முறையில், கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத வகையில், சாதனை உச்சமாக 21,262 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
✍️ *3வது டி20 போட்டியில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்*
✍️ *ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்*
✍️ *புதிய பயிற்சியாளர் காம்பிர் * மூன்று ஆண்டுக்கு நியமனம்*
✍️ *மதுரை அணி ஏமாற்றம் * திருச்சி அணி வெற்றி*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*