🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 15/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
✍️ *ஜூலை* -15
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5573
22 K தங்கம்/ g. : ₹ 6804
24 K தங்கம்/g : ₹ 7423
வெள்ளி /g : ₹ 99.90
✍️ *ஆம்ஸ்ட்ராங்கை கழுத்தில் வெட்டிக் கொன்ற பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை*
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம், நேற்று சென்னையில் போலீசாரின் எதிர்தாக்குதலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கள்ளத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி திருவேங்கடத்தை, புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் அதிகாலை நேரத்தில் போலீசார் சுட்டனர். காயம் அடைந்த திருவேங்கடத்தை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்தார்.
✍️ *பல ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய 40 வயது கல்யாண ராணி அதிரடி கைது*
பல ஆண்களை நகை, பணத்திற்காக திருமணம் செய்து ஏமாற்றிய ‘கல்யாண ராணி’ சத்யாவை பாண்டிச்சேரியில், தாராபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஏமாந்த வாலிபரின் தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
✍️ *நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்*
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
✍️ *மகாராஷ்டிரா முதல்வருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு*
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் சூழல், பொருளாதாரம் குறித்து அவர்கள் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *ஆடி மாத பூஜை சபரிமலையில் நடைதிறப்பு*
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று (15ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
✍️ *மழை குறைவாக பெய்துள்ளதால் காவிரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் தான் திறக்க முடியும்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்*
தமிழகத்துக்கு ஜூலை இறுதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட இயலாது. காவிரி படுகையில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, நீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது . தினமும் 1 டிஎம்சி விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ’ என்றார்.
✍️ *அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: காதை துளைத்து சென்றது தோட்டா காயத்துடன் உயிர் தப்பினார்*
அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தோட்டா அவரது காதை துளைத்துச் சென்றதால் ரத்த காயத்துடன் தப்பினார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
✍️ *நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி தேர்வு முகாம்: சென்னை, மதுரையில் இன்று நடக்கிறது*
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், எச்.சில்.எல். நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி தேர்வு முகாமை நடத்தவுள்ளது. இதற்கான தேர்வு, சென்னை மற்றும் மதுரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
✍️ *3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார், தினசரி 2.23 லட்சம் மாணவர்கள் பயன் பெற உள்ளனர்*
தமிழ்நாடு முழுவதிலும் 3,995 உள்ள அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் இன்றுமுதல் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
✍️ *நேபாள பிரதமராக சர்மா ஒலி இன்று பதவி ஏற்பு*
நேபாள பிரதமராக பதவியேற்க சர்மா ஒலிக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேபாள பிரதமராக 3ம் முறையாக கே.பி.சர்மா ஒலி பதவி ஏற்க உள்ளார்.
✍️ *தமிழக எல்லையோர மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலி, பொது சுகாதாரத்துறை உத்தரவு*
கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
✍️ *பாம்பன் புதிய பாலத்தில் சோதனை ஓட்டம்*
பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் 2.1 கி.மீ.,ல் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் 1.6 கி.மீ.,ல் பாலம் பணி 100 சதவீதம் முடிந்த நிலையில் ஜூலை 12ல் இரு ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
✍️ *ஜிம்பாப்வே அணியுடனான கடைசி டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றி அசத்தல்*
✍️ *டிஎன்பிஎல் டி20 திருச்சி சோழாஸ் அபார வெற்றி*
✍️ *அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*