1/7/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்தி
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 01/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பெட்ரோல்விலை*-100.75
       *டீசல் விலை*-92.34

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5475
22 K தங்கம்/ g. : ₹ 6684
24 K தங்கம்/g   : ₹ 7292
    வெள்ளி    /g   : ₹ 94.40

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்*

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்தது தொடர்பாக, ஐந்து மாவட்டங்களில், 10 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நீர்வளத்துறையில் புதிய முதன்மை பொறியாளர் நியமனம்*

நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளராக மன்மதன், மாநில நீர்வள மேம்பாட்டு முகமை தலைமை பொறியாளராக கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக தயாளகுமார், கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சிவகங்கையில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய ஓட்டு வீடு*

சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருந்த தோட்டத்து வீடு திடீரென வெடித்துச்சிதறியது. அவற்றை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார்*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை*

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4-வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *இந்தியா நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம்*

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி*

மத்தியபிரதேசத்தில் ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிவிங்கி புலிகளை பாதுகாக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆன்டி எக்டோ பாரசைட் மெடிசன் என்ற தைலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்*

ஜம்மு: இமயமலையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழுவினர் நேற்று அமர்நாத் புறப்பட்டு சென்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

.✍️ *பிரான்சில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்கு பதிவு: வலது சாரிகள் வெற்றிபெற வாய்ப்பு*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு*

தேர்தலுக்கு பின் புதிய அரசு பொறுப்பேற்றதும், ஜூன் 11ல், இந்திய ராணுவ ஜெனரல் உபேந்திர திவேதியை புதிய தளபதியாக நியமித்து ராணுவத்துறை அறிவித்துஇருந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு: பிரதமர் மோடி*

'தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வெங்கையா நாயுடு. அவரது வாழ்க்கை பயணம், பல்வேறு அனுபவங்களால் நிறைந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நெகிழ்ச்சி*

பிரிட்டன் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ''ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்; அதுவே என்னை வழிநடத்துகிறது,'' என்று குறிப்பிட்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கும்மிடியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள்:  பிடித்த போலீசார்*

கும்மிடிப்பூண்டி கோழி பண்ணையில் பதுங்கியிருந்து, மாடு திருடிய வடமாநில கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *வெற்றியுடன் விடை பெற்றார் டிராவிட்*

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார் டிராவிட்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து*

சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து இந்தியாவின் ரோகித், ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றனர்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments