🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 18/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள்: 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்
✍️ *ஜூலை* -18
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5670
22 K தங்கம்/ g. : ₹ 6921
24 K தங்கம்/g : ₹ 7550
வெள்ளி /g : ₹ 100.60
✍️ *கர்நாடகாவில் கன மழை காவிரியில் 55,500 கன அடி திறப்பு: நீர் தர கர்நாடக அரசு மறுத்துவந்த நிலையில் இயற்கையே உதவியது*
காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க மறுத்த நிலையில், இயற்கை அன்னையின் கருணையால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி வரை உயர்ந்துள்ளதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
✍️ *பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்*
நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் தேதி (சனிக்கிழமை மற்றும் பவுர்ணமி), ஜூலை 21ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
✍️ *தமிழகத்தில் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்*
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✍️ *தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் டெங்குவால் 568 பேர் பாதிப்பு*
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
✍️ *ஆடி மாதத்தில் தொடங்கினார் அதிமுக கொடியுடன் சசிகலா சுற்றுப்பயணம்*
ஆடி முதல் நாளான நேற்று அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கா சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய வேனில் தொடங்கினார்.
✍️ *இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று கள்ளக்காதலனுடன் சேர்ப்பதாக ரூ.10.50 லட்சம் பறித்த கும்பல்*
கோவை: கள்ளக்காதலனுடன் சேர்ப்பதாக இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று ரூ.10.50 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
✍️ *பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வக்கீல் அணி நிர்வாகிகள் உள்பட மேலும் 3 பேர் கைது: லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம்; தேடப்படும் குற்றவாளியாக பாஜ பெண் தலைவர் அறிவிப்பு*
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, தமாகா வக்கீல் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவியாக இருந்த அஞ்சலை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
✍️ *தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது*
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.90ம், ஒரு சவரனுக்கு ரூ.720ம் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஒரு சவரன் ரூ.55000 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
✍️ *அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு கொலை முயற்சிக்கான நோக்கத்தை அறிய முடியாமல் எப்பிஐ திணறல்: ஈரான் மீதான சந்தேகத்தால் பரபரப்பு*
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரின் நோக்கம் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் எப்பிஐ திணறி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரானின் சதி இருப்பதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
✍️ *அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா*
ஜோ பைடன் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலையொட்டி லாஸ் வேகாஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்றினை உறுதி செய்தனர்.
✍️ *பொய் தகவலுடன் வழக்கு ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்*
பொய் தகவலுடன் வழக்கு தொடர்ந்த, போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுனருக்கு, 50 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு*
கனமழை எதிரொலியாக நீலகிரியில் இன்று 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு*
வீடுகளுக்கு மதுபானம் டெலிவரி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
✍️ *நார்டியா ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் நடால்*
✍️ *இன்று முதல் இங்கிலாந்து வெஸ்டிண்டிஸ் 2வது டெஸ்ட்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*