🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 22/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள்: 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
✍️ *ஜூலை* -22
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5598
22 K தங்கம்/ g. : ₹ 6834
24 K தங்கம்/g : ₹ 7456
வெள்ளி /g : ₹ 95.90
✍️ *நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: பட்ஜெட் நாளை தாக்கல்*
நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், நீட் தேர்வு முறைகேடு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா?: பிரேமலதா கண்டனம்*
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் சம்மந்தம் இருப்பதாக சொல்வதா என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
✍️ *மதுரை மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தேடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மாஜி மனைவி குஜராத் லாட்ஜில் திடீர் தற்கொலை: தலைமறைவான ரவுடி காதலனை தேடும் போலீஸ்*
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி குஜராத்தில் உள்ள லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
✍️ *நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்: வீடியோ வைரல்; வாலிபர் கைது*
பெண்ணிடம் தகாத முறையில் நடந்த நபர், மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கண்ணன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
✍️ *டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்:*
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஒரு பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது.
✍️ *பி.இ, பி.டெக் கவுன்சலிங் இன்று தொடக்கம்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார்*
நடப்பாண்டு பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைக்கிறார்.
✍️ *தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைப்பு: தமிழக அரசாணை வெளியீடு*
தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1,581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
✍️ *அரிவாள் காட்டி செல்போன், பணம் பறிப்பு போலீசிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த ரவுடிக்கு எலும்பு முறிவு*
மன்னார்குடி: போலீசிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
✍️ *நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் சர்மா ஒலி வெற்றி: 188 பேர் ஆதரவு*
நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி பெற்றார்.
✍️ *கேரளாவில் வேகமாக பரவுகிறது நிபா வைரஸ் பாதித்த 14 வயது சிறுவன் பலி*
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்ததை தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் நேற்று மரணமடைந்தான்.
✍️ *82வது பிறந்த நாள் காங். தலைவர் கார்கேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து*
காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
✍️ *ஜனநாயகம் காக்க குண்டடிப்பட்டேன்: டிரம்ப் பரபரப்பு பேச்சு*
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு குண்டபடிப்பட்டேன் என்று முன்னாள் அதிபர் டிரப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு*
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்*
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
✍️ *ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை*
அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆறாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்ந்தது.
✍️ *விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலைப்பணி ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து*
'விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்க பணியை திட்டமிட்டபடி முடிக்காததால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
✍️ *வங்கதேசத்தில் பதற்றம்; தமிழகம் திரும்பிய 49 மாணவர்கள்*
வங்கதேசத்தில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், 49 மாணவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர்.
✍️ *தெற்கில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும்: ஸ்டாலின்*
இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்.
முதல்வர் கூறியுள்ளார்.
✍️ *சரவணன், சீசிங் ராஜா, செந்திலுக்கு வலை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்*
ஆம்ஸ்ட்ராங் கூட்டாளி பாம் சரவணனை தீர்த்துக்கட்ட, சீசிங் ராஜா, சம்போ செந்தில் என்ற இரு ரவுடிகள் தருணம் பார்த்து வருவதால், அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர்.
✍️ *அம்மன் உலோக சிலைகள் மீட்பு; பெண் உட்பட நான்கு பேர் கைது*
கோவில்களில் திருடி, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, இரண்டு அம்மன் உலோக சிலைகள் மற்றும் உடைவாள் ஒன்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
✍️ *நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறில்லை: நடிகர் விஷால் பேட்டி*
அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது, நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறில்லை என, நடிகர் விஷால் கூறினார்.
✍️ *பொது தேர்வில் தோற்றவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் பயிற்சி*
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, மீண்டும் அதே பள்ளிகளில் சேர்த்து, சிறப்பு பயிற்சி அளிக்கலாமா என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்திஉள்ளனர்.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, இந்த நடைமுறையை துவங்குவதற்கான கருத்துரு தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*