27/7/2204 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்தி
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 27/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

✍️ 🌷*பேனாமுள் பத்திரிகைசெய்திகள்*🌷
குறள்: 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

✍️ *ஜூலை* -27
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5254
22 K தங்கம்/ g. : ₹ 6414
24 K தங்கம்/g   : ₹ 6997
    வெள்ளி    /g   : ₹ 88.90

✍️ *பாரிஸ் நகரில் கோலாகலம் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது: ‘சென்’ ஆற்றில் படகுகளில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; இந்தியா உள்பட 206 நாடுகள் பங்கேற்பு*

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

✍️ *கொலையாளிகளுக்கு ரூட்டு போட்டுக்கொடுத்து வரவழைத்த மாஜி ஊர்க்காவல்படை வீரர் கைது*

இப்ப வந்தா… அண்ணனை போடலாம் என்று ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூட்டு போட்டுக் கொடுத்து, கொலையாளிகளை வரவழைத்த முன்னாள் ஊர்க்காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

✍️ *பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்: சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது*

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது.

✍️ *தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு*

இனிவரும் காலங்களில் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதற்கு பிறகே தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

✍️ *மேற்கு திசை காற்று மாறுபாடு வரும் 31ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்*

மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக 31ம் தேதி வரை மழைநீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ல் அமெரிக்கா பயணம்*

அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். சில தொழிற்சாலைகளை நேரடியாகவும் சென்று பார்வையிடுகிறார். அமெரிக்காவில், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

✍️ *திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள்: 17 பேர் மட்டுமே முதல் இடம்*

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இவற்றில் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

✍️ *விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி*

சென்னை: விஷச்சாராயம் அருந்தி உயிரை மாய்த்து கொள்பவர்களுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை அரசு வழங்க கூடாது என்று உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

✍️ *தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

✍️ *உயிர்விடும் முன்பு குழந்தைகளை காப்பாற்றிய உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் நேரில் வழங்கினார்*

காங்கயம்: வெள்ளகோவிலில் நெஞ்சுவலியால் உயிர்விடும் முன்பு பள்ளி வேனை சாலையோரம் நிறுத்தி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

✍️ *ஆம்னி பஸ், டிரைவர் கிளீனரை தாக்கிய வழக்கு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலை; 5 பேர் கைது*

டிரைவர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் உட்பட 8 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முத்துக்குமார், முருகேசன், செல்வம், சக்தி, சோலை ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான நிறுவன உரியமையாளர் ராஜசேகர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

✍️ *தெருக்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றியதுபோல் அரசு பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்*

தெருக்களில் உள்ள சாதி பெயரை அகற்றியதுபோல் அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரை அகற்றுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

✍️ *தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு*

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

✍️ *கர்நாடக அணைகளில் 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை*

கர்நாடக அணைகளில் இருந்து 1.50 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

✍️ *அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு*

அறிஞர்கள், படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2024ம் ஆண்டுக்கான 5 வகை விருதுகள் மற்றும் தூயதமிழ் பற்றாளர் பரிசுக்கு தகுநிறை தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

✍️ *பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்*

திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை காதலி ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் பதிவிட்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

✍️ *தொடர்ந்து தங்கம் விலை சரிவு 9 நாளில் சவரனுக்கு ரூ.3,920 குறைந்தது*

✍️ *ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு அண்ணாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்*

சென்னை: அண்ணாநகர் 2வது நிழற்சாலையில் நாளை ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 2வது நிழற்சாலையில் புளூஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை மற்றும் 3வது பிரதான சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

✍️ *மாநகர போக்குவரத்து கழகத்தில் 2 பேருந்துகளின் தடம் எண் மாற்றம்: மேலாண் இயக்குநர் தகவல்*

சென்னை: கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.104 சி கட் பேருந்து, தடம் எண்.104 சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பேருந்து, தடம் எண்.104சி.எக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.

✍️ *டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை*

சென்னை: டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாத விரக்தியில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

✍️ *முதல் - டி20 போட்டி: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்*

✍️ *டி.என்.பி.எல்.: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ்*

✍️ *நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31-ம் தேதி வரை போலீஸ் காவல்*

✍️ *அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு*

✍️ *கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
Comments