28/7/2024 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 28/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

✍️*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

✍️ *ஜூலை* -28
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5296
22 K தங்கம்/ g. : ₹ 6465
24 K தங்கம்/g   : ₹ 7053
    வெள்ளி    /g   : ₹ 89

✍️ *மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பால் மக்கள் கொந்தளிப்பு பாஜ பதில் சொல்லியே தீர வேண்டும்: மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை*

நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை புறக்கணித்த மாநிலங்களை, மக்களை பழிவாங்கும் பட்ஜெட்டாகத்தான், மத்திய  நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கை அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

✍️ *அரசு போக்குவரத்து கழகங்களில் பொது மேலாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்*

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 5 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

✍️ *பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்*

பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர். சென்னையில் 2 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

✍️ *நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு சம்பவம்*

பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது மைக் அணைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து பங்கேற்ற ஒரே தலைவரான மம்தாவும் கூட்டத்தை பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

✍️ *பெங்களூரு விடுதியில் கொடூரம் இளம் பெண்ணை கொன்ற குற்றவாளி போபாலில் கைது*

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்த 24 வயதான பீகாரை சேர்ந்த கிருத்தி குமாரி என்ற இளம்பெண் கடந்த 23ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். விடுதியின் 3வது மாடியில் இருந்த கிருத்தி குமாரியின் அறை கதவை தட்டி, வெளியே வந்த அவரை கத்தியால் கழுத்திலும் வயிற்றிலும் குத்தி கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பியோடினான். கொலையாளி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

✍️ *மாநில காவல் துறையில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு: ராஜஸ்தான், அருணாச்சல் அறிவிப்பு*

காவல்துறை உள்ளிட்ட பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராஜஸ்தான், அருணாச்சல பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

✍️ *எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு பாக். தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ராணுவ வீரர் பலி: கேப்டன் உட்பட 4 பேர் காயம்*

காஷ்மீரில் இந்த ஆண்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 22 பேர் பலியாகி உள்ளனர்.

✍️ *ஆந்திராவில் ஏடிஎம்களில் நிரப்ப வேண்டிய ரூ.2.20 கோடி பணத்துடன் தலைமறைவான ஊழியர்: அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடிப்பு, 12 மணிநேரத்தில் பிடித்து கைது செய்த போலீசார்*

ஆந்திராவில் ஏடிஎம்களில் நிரப்ப வேண்டிய ரூ.2.20 கோடி பணத்துடன் தலைமறைவான ஒப்பந்த ஊழியரை 12 மணிநேரத்தில் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

✍️ *மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: 13 குழந்தைகள் உள்பட 54 பேர் மீட்பு*

குடியிருப்பு வளாகம் நேற்று காலை 4.50 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 54 பேரை பத்திரமாக மீட்டனர்.

✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது*

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5வழக்கறிஞர்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

✍️ *ஆசிரமம் நடத்தி போதை காளான், கஞ்சா விற்பனை: போலி சாமியார் கைது*

உசிலம்பட்டி வடகாடுபட்டியைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான தன்ராஜ் (34) என்பவர் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி போலி சாமியாராக மாறி, ஆசிரமம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து போலி சாமியாரான தன்ராஜை கைது செய்தனர். இதைதொடர்ந்து ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

✍️ *காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பெண்ணிடம் தொடர்ந்து பேசிய வாலிபர் சரமாரி குத்திக்கொலை: பிரியாணி கடையில் புகுந்து 4 பேர் கும்பல் வெறிச்செயல்*

தர்மபுரி: காதல் விவகாரத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கும்பல், அங்கு பணியில் இருந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.

✍️ *சரிவை சந்தித்து வந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம்*

சென்னை: அதிரடியாக சரிவை சந்தித்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது.

✍️.*ஈவிகேஎஸ்.இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் மோதல்: முற்றுகிறது வார்த்தை போர், வருத்தத்தில் மூத்த தலைவர்கள்*

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்- கார்த்தி சிதம்பரம் இடையே எழுந்துள்ள வார்த்தை போர் முற்றிய நிலையில் காங்கிரசார் மத்தியில் கோஷ்டி பூசல் உருவாகுமோ என்ற அச்சம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

✍️ *தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது அந்தமான் விமானம்*

விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. ஆனால் அந்தமானில் வானிலை சீரடைய வில்லை. உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதையடுத்து விமானத்தை மீண்டும், சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே, ஏர் இந்தியா விமானம், அந்தமானில் இருந்து நேற்று மதியம் சென்னைக்கு திரும்பியது.

✍️ *தினமும் அடி வாங்கிய 10 வயது சிறுமி சிறுநீரகம் செயலிழந்து பரிதாப மரணம்: கொடூர தாய் சிறையில் அடைப்பு*

கோவை: பெற்ற மகளை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் தாய். உள்காயம் காரணமாக சிறுநீரகம் பழுதாகி மரணமடைந்தார் 10 வயது சிறுமி. பிரேத பரிசோதனை அறிக்கையில் இத்தகவல் தெரிந்ததையடுத்து, தாயை போலீசார் சிறையில் அடைத்தனர்.

✍️ *அக். 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்*

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்திய ரயில்வே பொறியாளர்கள் வானில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

✍️ *துண்டு துண்டாக வெட்டி நகைக்காக மூதாட்டி கொலை*

மொபைல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், பார்த்திபனும், அவரது மனைவி சங்கீதாவும் விருதுநகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் விருதுநகர் விரைந்து 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி அடையாற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

✍️ *கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து*

சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 45 மணி முதல் இரவு 7 45 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

✍️ *2வது டி20 போட்டி: இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்*

✍️ *மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்*

✍️ *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து*

✍️ *இது உங்கள் சொத்து... அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்*

கர்னூல் : ஆந்திரா ஓட்டுநரான தரகையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பஸ்சை ஓட்டி செல்வது என முடிவு செய்திருக்கிறார். அரசு பஸ்சில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார். ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பஸ்சை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, தரகையாவை போலீசார் கைது செய்தனர்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments