🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 29/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
✍️ *ஜூலை* -29
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5295
22 K தங்கம்/ g. : ₹ 6464
24 K தங்கம்/g : ₹ 7052
வெள்ளி /g : ₹ 88.90
✍️ *டெல்டா பாசன சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நீர்மட்டம் 110 அடியை தாண்டியதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு*
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 91வது ஆண்டாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
✍️ *சென்னையில் போலி இறப்பு சான்றிதழ் பெற்று கள்ளக்காதலியின் ₹20 கோடி சொத்தை அபகரித்த காதலன்: போலீசில் தாய் கண்ணீர் புகார்*
ஜோலார்பேட்டை: போலி இறப்பு சான்றிதழ் பெற்று சென்னையில் ₹20 கோடி மதிப்பிலான சொத்துகளை மகளின் கள்ளக்காதலனும் அவரது மகனும் அபகரித்ததாக திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் 85 வயது மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
✍️ *ஊட்டியில் 50 மரங்கள் விழுந்தன: மஞ்சூர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு*
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த மழை முற்றிலும் குறைந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டு கொடுத்த 3 பேர் கைது: மனைவியுடன் வெளிநாடு தப்பிய வழக்கறிஞர் குறித்து விசாரணை*
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்ற வழக்கறிஞர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
✍️ *காவிரியிலிருந்து நீர் திறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை*
இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன் என கூறினார்.
✍️ *836 இன்ஜினியரிங் இடங்கள் நிரம்பின: பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்*
பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கி ஆக.10ம் தேதி வரை நடக்கிறது.
✍️ *வீடியோகாலில் தோழியிடம் பேசிய மாணவன் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலி: வடபழனியில் நண்பர் வீட்டில் ஏற்பட்ட விபரீதம்*
சென்னை: வடபழனியில் நண்பர் வீட்டிற்கு படிக்க வந்த போது, வீடியோ காலில் தோழியுடன் பேசிய போது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து 8ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *வேளாண் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீடுக்கு நாளை நேரடி கலந்தாய்வு*
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நாளை (30ம் தேதி) நடக்கிறது.
✍️ *விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பேர் திரண்டனர்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்*
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
✍️ *பெண் கவுன்சிலரின் கணவர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை: பிரபல ரவுடி கும்பலுக்கு வலை*
குலசேகரம்: திருவட்டார் அருகே முன் விரோதத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி தலைமையிலான கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
✍️ *எம்ஜிஆர் நகரில் மூதாட்டியை கொன்று துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டினர் 9 நாட்களுக்கு பிறகு அடையாறு ஆற்றில் உடல் மீட்பு*
சென்னை: எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டியை 2 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்திக்காக கொடூரமாக கொன்று, உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி அடையாறு ஆற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். 9 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
✍️ *இணையத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது: மதுரையைச் சேர்ந்தவர் திருவனந்தபுரத்தில் சிக்கினார்*
ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக இவர் போலீசில் சிக்கினார். மதுரையை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
✍️ *பட்டாக்கத்தியால் வெட்டுவது போல ரீல்ஸ் 5 சிறுவர்கள் கைது*
சென்னை: காசிமேடு பகுதியில் சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து பட்டாகத்தியை வைத்து ஒரு சிறுவனை வெட்ட முயற்சிப்பது போலவும், அதற்கு அந்த சிறுவன் ‘வெட்டாதீங்க..வெட்டாதீங்க..’ என்று கெஞ்சுவது போலவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதன் அடிப்படையில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் 5 சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
✍️ *கடலூர் அதிமுக நிர்வாகி புதுச்சேரியில் படுகொலை: பழிக்குப்பழியா? என போலீஸ் விசாரணை*
பாகூர் அருகே இருளன்சந்தை வாட்டர் டேங்க் அருகே பின்னால் காரில் வந்த கும்பல், பைக்கின் மீது வேகமாக மோதி அவர்களை கிழே தள்ளியது.உடனே காரில் இருந்த இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது.
✍️ *திருவண்ணாமலையில் ₹70 லட்சம் கடனுக்காக நகைக்கடை உரிமையாளரின் 2 மகன்கள் காரில் கடத்தல்*
திருவண்ணாமலையில் ₹70 லட்சம் கடனை வசூலிப்பதற்காக நகைக்கடை உரிமையாளரின் 2 மகன்கள் காரில் கடத்தப்பட்டனர். அவர்களை ஒன்றரை மணி நேரத்தில் மீட்ட போலீசார், பெங்களூரு கூலிப்படையினர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
✍️ *மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது மத்திய அமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி*
நிருபர்களிடம் குமாரசாமி பேசினார். அப்போது குமாரசாமியின் ஒரு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. குமாரசாமி, அதை துடைத்த போது ரத்தம் வேகமாக வரத்தொடங்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரது மகன் நிகில், ஜெயநகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரசாமியை அழைத்து சென்று அனுமதித்தார்.
✍️ *மழைநீர் கால்வாய் உடைந்தது டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் பலி: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது*
✍️ புதுடெல்லி: மத்திய டெல்லியில் உள்ள பழைய ரஜிந்தர் நகரில் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்கிருந்த மழைநீர் கால்வாய் உடைந்து தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரை தளத்திற்குள் மழை நீர் நேற்று முன்தினம் புகுந்தது. இதில், சிக்கி 3 மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
✍️ *முதல்வர்களுடன் 2வது நாளாக பிரதமர் ஆலோசனை*
நேற்று நடந்த 2ம் நாள் கூட்டத்தில் மபி முதல்வர் மோகன் யாதவ்,உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
✍️ *ஜெர்மனியில் ஏவுகணைகள் நிறுத்தினால் ரஷ்யா ஆயுதங்களை குவிக்கும்: அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை*
அதிபர் புடின் நேற்று பேசுகையில்,‘‘ அமெரிக்கா இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், எங்கள் கடற்படையின் கடலோர படைகளின் திறன் அதிகரிக்கப்படும். இடைநிலை மற்றும் குறைந்த தூர தாக்குதல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச தடையிலிருந்து விடுபடுவோம். இதற்கு பதிலடி கொடுப்பதற்கான ஆயுதங்கள் தயாரிப்பு திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது’’ என்றார்.
✍️ *இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் பலி*
✍️ *சீனாவில் தொடர் மழையால் நிலச்சரிவு; 11 பேர் உயிரிழப்பு: 6 பேர் படுகாயங்களுடன் தப்பினர்*
✍️ *வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்*
பெரம்பூர் பெரியார் நகர் 70 அடி சாலை பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக வந்த வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர், காவலர் சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.மேலும், சுற்றிப் போக முடியாது எனக் கூறி ஆட்டோவை எடுத்து வேகமாக காவலர் சரஸ்வதி மீது மோதினார். இதில், அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற காவலர் சரஸ்வதி இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
✍️ *பதக்க வேட்டையை தொடங்கிய மானு பாக்கர்; மகளிர் டேபிள் டென்னிஸ் மனிகா வெற்றி தொடக்கம்*
✍️ *இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி*
✍️ *மகளிர் துப்பாக்கி சுடுதலில் சாதனை ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெண்கலம் வென்றார் மனு பாக்கர்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*