30/7/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 30/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

✍️ *ஜூலை* -30
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24836.10
பேங்க் நிப்டி : 51406.25
சென்செக்ஸ் : 81355.84

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5254
22 K தங்கம்/ g. : ₹ 6414
24 K தங்கம்/g   : ₹ 6997
    வெள்ளி    /g   : ₹ 89.60

✍️ *வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்கள் முதுகில் குத்திய மோடி அரசு: பாஜவின் சக்கரவியூகத்தை எதிர்க்கட்சிகள் தகர்க்கும்; மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு*

மக்களவையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி அரசு வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்களின் முதுகில் குத்தி விட்டது’ என ஆவேசமாக கூறினார். மேலும், பாஜவின் சக்கரவியூகத்தை இந்தியா கூட்டணி உடைத்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், சாதிவாரி கணக்கெடுப்பையும் உறுதி செய்யும் என அனல்தெறிக்க கூறினார்.

✍️ *இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு*

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

✍️ *குமரி சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்*

2024ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

✍️ *பிளஸ் 2 தேர்வு மறுகூட்டல் மதிப்பெண் சான்று விநியோகம்*

மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றுகளையும் அல்லது மதிப்பெண் பட்டியல்களையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

✍️ *மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு*

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

✍️ *பள்ளியில் விளையாட்டு பயிற்சி தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு*

வடலூரில் விளையாட்டு பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு அடைந்தான்.

✍️ *ஆன்லைன் திட்டத்துக்கு அமோக வரவேற்பு வீடு கட்ட தொடங்கிய பிறகும்கூட விண்ணப்பித்து அனுமதி பெறலாம்*

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற திட்டத்திற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வீடு கட்ட தொடங்கிய பிறகும்கூட ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

✍️ *புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது: 2ம்தேதி பட்ஜெட் தாக்கல்*

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆக.2ம்தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

✍️ *குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு தனியார் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதிப்பு*

சுற்றுலா பயணிகள் கண்ணுபுளிமெட்டு பகுதியில் உள்ள தனியார் அருவிகளுக்கு படையெடுத்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்துஆர்டிஓ லாவாண்யா தலைமையில் வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றி தனியார் அருவிகளுக்கு செல்லாதவாறு குண்டாறு அணையின் கீழ் பகுதியில் நுழைவாயில் கேட்டிற்கு பூட்டு போட்டனர்.

✍️ *வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்*

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

✍️ *மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதே முதல் பணி: எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு*

மத்திய அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான், அப்போது தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கொலையாளிகள் சொத்துகளை முடக்க முடிவு: போலீசார் அதிரடி*

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கவும், கொலைக்காக வழங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

✍️ *தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்து பெண் உள்பட 3 பேர் படுகாயம்*

தாம்பரம்: தாம்பரம் அருகே கோயில் தீமிதி திருவிழாவின்போது, அக்னி குண்டத்தில் தவறி விழுந்து தாம்பரம் மாநகர அதிமுக பொருளாளர், அவரது மனைவி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

✍️ *இரு தரப்பு கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் காஞ்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: ஆணையரிடம் கடிதம் வழங்கப்பட்டது*

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தினை இரு தரப்பு கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது.

✍️ *சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்*

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

✍️ *சென்னை விமான நிலைய வருகை பகுதியில் இயங்கிய வாகனங்கள் பிக்அப் பாயின்ட் பார்க்கிங் பகுதிக்கு திடீர் மாற்றம்*

சென்னை விமான நிலைய வருகை பகுதியில் இயங்கிய வாகனங்கள் பிக்அப் பாயின்ட், மல்லடி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதால், மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

✍️ *யானைக்கவுனி மேம்பால பணிகள் நிறைவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்*

யானைக்கவுனி மேம்பால பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

✍️ *முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு*

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான உடனடி மாணவர் சேர்க்கை, நாளை (31ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

✍️ *கோயம்பேடு மார்க்கெட் வாகன நிறுத்த பகுதியில் அனுமதியின்றி மதில்சுவர்: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்*

வியாபாரிகளுக்கு பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நேற்றுமுன்தினம் திடீரென்று பூங்கா கட்டுவதற்கு சுவர் எழுப்பியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வியாபாரிகள் அங்கு திரண்டு, ‘’பார்க்கிங் ஏரியாவில் சுவர் எப்படி கட்டலாம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்து, கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் அங்கு வந்து, சுவர் எழுப்புவதை நிறுத்தினர்.

✍️ *மாணவர்கள் தகராறு தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு*

திருச்சி: திருச்சி சிங்கர் கோவில் தெருவில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த ஆசிரியர் சிவக்குமார், தகராறை தடுக்க சென்றார். இதில் ஆசிரியரை தலையிலும், ஒரு மாணவரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடி விட்டனர்.

✍️ *பாஜ நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்ற வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்*

ஒரு வாளை எடுத்த வசந்தகுமார், திடீரென எஸ்ஐ பிரதாப்பின் இடது கை தோள்பட்டையில் வெட்டி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வசந்தகுமாரின் இடது கால் மணிக்கட்டுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார்.

✍️ *சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை பல் டாக்டர் சிக்கினார்*

புதுக்கோட்டை:  12ம் வகுப்பு மாணவி தாயுடன் சிகிச்சைக்கு சென்றார். தாயை மெடிக்கல்லில் மருந்து வாங்கி வரும்படி அனுப்பிவிட்டு மாணவியிடம் டாக்டர் அப்துல் மஜித் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்த புகாரின்படி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அப்துல் மஜித்தை நேற்று காலை கைது செய்தனர்.

✍️ *போலீசிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடி கால்கள் முறிந்தன*

கோவை: போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்த பிரபல ரவுடியின் கால்கள் முறிந்தன.

✍️ *திருவேற்காடு அயனம்பாக்கத்தில் இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் கொள்ளை: முகமூடி ஆசாமிக்கு வலை*

சென்னை: சென்னை அருகே கட்டுமான நிறுவன இன்ஜினியர் வீட்டில் புகுந்து 100 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

✍️*சென்னையில் ஒரு வாரத்தில் 16 பேருக்கு குண்டாஸ்*

சென்னையில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ைகது செய்து வருகின்றனர்.

✍️ *தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்தது*

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

✍️ *தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி*

சென்னை: குழந்தை பிறந்தது முதல், 10 வயது வரை செலுத்தப்பட வேண்டிய, 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

✍️ *ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா – அர்ஜென்டினா டிரா*

✍️ *சென்னையில் முதல் முறையாக இரவு நேர கார் பந்தயம்: ஆக. 30ல் தொடக்கம்*

✍️ *ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: டிராவிட் விருப்பம்*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments