🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 31/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 93
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
✍️ *ஜூலை* -31
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24857.30
பேங்க் நிப்டி : 51499.30
சென்செக்ஸ் : 81455.40
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5229
22 K தங்கம்/ g. : ₹ 6384
24 K தங்கம்/g : ₹ 6964
வெள்ளி /g : ₹ 88.90
✍️ *கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் சிக்கி 125 பேர் பலி: சாலைகள், பாலங்கள், வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன*
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 125க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
✍️ *தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்*
சென்னை: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி ெசய்த விவகாரத்தில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொழிலதிபர் பாலாஜி, வங்கி அதிகாரி வீடு என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின.
✍️ *எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்*
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது.
✍️ *தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் இயக்குனர் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இன்றுடன் ஓய்வு: ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசரிப்பு விழா*
சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு காவல்துறை சார்பில் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசரிப்பு விழா நடக்கிறது.
✍️ *3 நாட்களுக்கு ரெட் அலர்ட் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு*
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 4ம் தேதி வரை, குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதால் இன்றும் (ஜூலை 31) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
✍️ *திருட்டுத்தனமாக மண் அள்ளி சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து மண் கொட்டியதில் 2 பேர் சாவு*
சந்திரநல்லூர் அருகே டிராக்டர் சென்ற போது, சாலையோர பள்ளத்தில் சக்கரம் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.இதில் டிராக்டரில் இருந்த சுதாகர், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மண் கொட்டியதில் இருவரும் மண்ணுக்குள் புதைந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
✍️ *ஊருணியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி*
பெரியகுளம்: தேனி மாவட்டம், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கட்டையன் ஊருணியில் 2 மாணவர்கள் குளிக்கச் சென்றனர்.நீண்ட நேரமாகியும் திரும்பாததால் பெற்றோர், உறவினர்கள் தேடினர். அப்போது ஊருணியில் மூழ்கி இரு சிறுவர்களும் இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
✍️ *கிணற்றை ஆழப்படுத்தியபோது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி*
விழுப்புரம்: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது, இரும்பு ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு*
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
✍️ *வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என புகார்: நெம்மேலி ஊராட்சியில் பரபரப்பு*
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே நெம்மேலி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் கிணற்றை காணவில்லை என மனு கொடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
✍️ *இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை: 3 பேருக்கு ஓராண்டு சிறை மூவருக்கு ரூ.40 லட்சம் அபராதம்*
நீதிபதி 26 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீதமுள்ள 6 பேரில் 3 மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை, மீதமுள்ள 3 மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்கள் என்பதால், அவர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
✍️ *வால்பாறையில் கனமழை வீட்டின் மீது மண் சரிந்து பாட்டி, பேத்தி உயிரிழப்பு: பொள்ளாச்சியில் சுவர் இடிந்து வாலிபர் சாவு*
வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறையில் மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்து பாட்டி, பேத்தியுடன் பலியானார். பொள்ளாச்சியில் சுவர் இடிந்து வாலிபர் இறந்தார்.
✍️ *தமிழக- கர்நாடக எல்லையில் 3 பேரை கொன்ற மக்னா யானை சிக்கியது: 8 கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.*
ஓசூர்: ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில், மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானையை, 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
✍️ *சென்னை, தாம்பரம் உள்பட 4 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு*
சென்னை: சென்னை, தாம்பரம் உள்பட 4 உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
✍️ *பள்ளிக்கல்வி செயலருடன் பேச்சுவார்த்தை போராட்டத்தை தொடர ஆசிரியர்கள் முடிவு*
போராட்டத்தில் ஈடுபடும் அமைப்பினருடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி நேற்று மதியம் பேச்சு வார்த்தை நடத்தினார்.இந்தபேச்சு வார்த்தையில் 243 அரசாணையின் பாதிப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டதில், ஆசிரியர்கள் தரப்பில் உள்ள நியாயமான கோரிக்கைளில் சிலவற்றை விரைவில் நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவித்தபடி போராட்டம் தொடரும் என்று டிட்டோஜாக் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
✍️ *மலேசியாவில் கட்டுமான தொழிலாளர் வெல்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்*
சென்னை: மலேசியாவில் கட்டுமான தொழிலாளர், வெல்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
✍️ *அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் மாற்றம்: நிர்வாக இயக்குநர் தகவல்*
வலைதளம் www.omcmanpower.com என்ற தனியார் களத்தில் இருந்து தமிழக அரசின் www.omcmanpower.tn.gov.in என்ற களத்தில் மாற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வளைதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
✍️ *கர்நாடகத்திலிருந்து 2,37,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 16 கண் மதகுகள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 81,500 கனஅடி திறப்பு*
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43வது முறையாக 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் நீர் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு படிப்படியாக 81 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
✍️ *திருச்சியில் தலைகள் சிதறும்’ எஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்: வாலிபர் கைது*
திருச்சி: தலைகள் சிதறும் என்று எஸ்பி படத்தை போட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
✍️ *ஆவடி காவல் ஆணையரகத்தில் 114 பேருக்கு குண்டாஸ்*
ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில், கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 68 ரவுடிகள், கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் 15 பேர், போதைப்பொருள் வழக்கில் 24 பேர், கள்ளச்சந்தை வழக்கில் 4 பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் 3 பேர் என இந்த ஆண்டு 114 பேர் மீது, கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டம் பாய்ந்தது.
✍️ *சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்*
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் ரூ.5 ஆயிரம் அபராதத்தை, ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.அதன்படி, சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ.15 ஆயிரம் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது.
✍️ *தங்கம் விலை தொடர்ந்து சரிவு 1 சவரன் ரூ.51,000க்கு விற்பனை*
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் சாதனை: வெண்கலம் வென்று அசத்தல்*
✍️ *ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் – 2024: ஹாக்கியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா*
✍️ '*சூப்பர் ஓவரில்' இந்தியா வெற்றி: கோப்பை வென்று அசத்தல்*
✍️ *டிஎன்பிஎல் வெளியேற்றுதல் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்