🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 04/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஜூலை* -04*
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24286.5
பேங்க் நிப்டி : 53089.25
சென்செக்ஸ் : 79986.8
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5485
22 K தங்கம்/ g. : ₹ 6696
24 K தங்கம்/g : ₹ 7305
வெள்ளி /g : ₹ 96.10
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*தமிழக முதல்வர் பார்வைக்கு*
*ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் டம்மியாக இருக்கும் டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்க வேண்டி*
தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் ஆவடிக்கு உட்பட்ட மின்வாரியம் யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் செயல்படும் ஆவடிக்கு உட்பட்ட மின்வாரியம் சம்பந்தப்பட்ட ஆவடி E E ,பட்டாபிராம் AD, பருத்திப்பட்டு AE ஆகியோர்களிடம் தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பணத்தை எதிர்பார்த்து நிருத்தி நிறுத்தி வைத்திருப்பார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்
பலமுறை டிரான்ஸ்பார்மர் வைக்க நெட்டுக்கும் போல்டுக்கும் ஜேசிபிக்கும் பணம் வேண்டும் என்று கேட்டு வந்தார்கள் இதற்கும் ஆதாரங்கள் இருக்கிறது என்றும் பலமுறை பணமும் கொடுத்திருக்கிறோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்
19/6/2024 ஆம் தேதி ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டியில் டிரான்ஸ்பார்மரை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் ஆனால் இது நாள் வரை அந்த ட்ரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்காமல் ஆவடி பருத்திப்பட்டு லஷ்மி கிரீன் சிட்டிக்கு உட்பட்ட மின்வாரியம் இருந்து வருகிறது
2 வருடங்களுக்கு மேலாக ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் உள்ள மக்கள் மின் பற்றாக்குறை காரணமாக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் வீணாகிக் கொண்டே இருக்கிறது (பழுதாகிறது) என்று தகவல் தெரிவித்து வந்தனர்
ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை மின்வாரியம்
நான்கு மாதத்திற்கு முன்பு பத்திரிகைகள் மூலமாக செய்திகள் வெளியிட்ட பின் தொடங்கப்பட்ட வேலை ஆமை வேகத்தில் நடந்து 19/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் பொருத்தி திறக்கப்பட்டது அதிலிருந்து தொடர்ந்து இன்று 4/7/2024 வரை ஆவடி மின்வாரியம் அந்த டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது ஏன் என்றும் தெரியவில்லை முன்னால் அமைச்சர் அவர்கள் ஆவடி பருத்திப்பட்டு கிரீன் சிட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்த இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டும் அன்றிலிருந்து இன்று வரை டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் இல்லாமலேயே டம்மியாக இருந்து வருகிறது மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இது போல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக திறந்து வைத்த டிரான்ஸ்பார்மருக்கு இது நாள் வரை மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது ஆவடி மின்வாரியம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆவடி E E அவர்களிடமும் AD அவர்களிடமும் பலமுறை தகவல் தெரிவித்தும் இது நாள்வரை எந்த நடவடிக்கையும் இல்லை
இதற்கு
மேல் உள்ள மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் உள்ள மக்களுக்கு இந்த டிரான்ஸ்பாமர் டம்மியாக இல்லாமல் மின்சாரம் லைன் கொடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகவே உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ '*ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு*
'ஆன்லைன்' வாயிலாக மருந்து விற்பனை நடப்பது குறித்து, மத்திய அரசு விரைந்து கொள்கையை இறுதி செய்து வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *டி-20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் இன்று மோடியுடன் சந்திப்பு*
உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் இன்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். பின்னர் மும்பையில் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலம் செல்ல உள்ளனர். வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடக்க உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *வாரம் 4 நாட்கள் 'வந்தே பாரத்' இயக்கம்*
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரம் நான்கு நாட்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இலக்கிய படைப்புகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்*
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், ஆண்டுதோறும், 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதை வெளியிட, 1 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், tn.gov.in/forms என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி நாள்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மின்சாரம் மூலம் இயக்கப்படும் 23 ரயில்வே கேட்டுகள்*
மதுரை கோட்டத்தில் 23 ரயில்வே கேட்டுகள் மின்சாரம் மூலம் இயக்கப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா*
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு*
தமிழகத்தில் ஜிகா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்*
பெரம்பலூரில் கணவர், மகள் இறந்த துக்கத்தாலும், நோயாலும் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து இறந்தார். அவரது மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சைக்கோ போல பூட்டிய வீட்டில் தாய்க்கு திதி கொடுத்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது*
பெண் புகார் கூறியதால் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் வந்து சூர்யாவை அடித்து உதைத்துள்ளார். தப்பி ஓடிய சூர்யா, நண்பர்களுடன் பைக்கில் நள்ளிரவு 12 மணியளவில் மளிகை கடைக்கு வந்து, கடைமுன் 3 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியுள்ளார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.இதையடுத்து நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்*
கரூர்: பிளஸ் 2 மாணவிக்கு பள்ளியில் மாணவன் தாலி கட்டி திருமணம் செய்த வீடியோ வைரலானது. இதற்கு உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *74000 பேர் பனிலிங்க தரிசனம்*
அமர்நாத் யாத்திரை தொடங்கி 5 நாட்களில் 74000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஊட்டி, கொடைக்கானலும் மாநகராட்சி ஆகிறது*
தற்போது, மாநகராட்சியை தரம் உயர்த்துவதில், மக்கள் தொகை, ஆண்டு வருமானத்துக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவை தரம் உயர்த்தப்படும். அதேபோல், ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1:
முதல் இந்திய வீரராக சாதனை
✍️ விம்பிள்டன் டென்னிஸ்
2வது சுற்றில் மாயா
✍️உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்
✍️ யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*