5/7/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 04/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

*🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷*

குறள் : 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஜூலை* -05*
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24302.15
பேங்க் நிப்டி : 53103.7
சென்செக்ஸ் : 80049.67

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5538
22 K தங்கம்/ g. : ₹ 6761
24 K தங்கம்/g   : ₹ 7376
    வெள்ளி    /g   : ₹ 97.60

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *65 இறப்பிற்கு காரணமான மெத்தனால் பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கல்*

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு காரணமான மெத்தனால், பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்கில் பதுக்கி வைத்து கடத்தி சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து, பெட்ரோல் பங்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பூட்டி, தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!*

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். 8, 9, 10, 13-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்படும். 10-ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*

ஜூலை 11, 15-ல் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர், காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்*

 தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் வரும் 9ம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை 4 கட்டமாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*

கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். மனுதாரர், தன் கோரிக்கை குறித்து, அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து, அதுகுறித்து வருகிற 24-ம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துகூறலாம். என்று உத்தரவிட்டுள்ளார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு*

 காற்று மாசுவால் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் 12,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது*

சென்னை மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல்*

ஐடி அதிகாரிகள் போல நடித்து சென்னை, கோவை, உள்பட பல இடங்களில் பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு*

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள், 4 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியம் நிலுவைத் தொகை வழங்க கோரி வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *குற்றம் பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது*

பெரம்பூர், வியாசர்பாடியில் பணப்பறிப்பில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது*

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நிதிச்சுமையால் திண்டாட்டம்: வரிச்சலுகை கேட்கிறார் சந்திரபாபு*

புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு மாநிலத்திற்கு வரிச்சலுகை வழங்க வலியுறுத்தினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *கள்ளச்சாராயம் குடித்தவர் பலி வாங்கி வந்து கொடுத்தவர் கைது; திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு*

புதுச்சேரியில் கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து கொடுத்த கொத்தனாரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், சாராயத்தை குடித்த முதியவர் நேற்று அதிகாலை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஏற்றுமதிக்கான 'கூகுள்' போன் இந்தியாவில் தயாரிப்பு துவக்கம்*

'கூகுள்' நிறுவனம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அதன் 'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சோதனை முறையிலான தயாரிப்பு பணிகளை, கூகுள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சீறிப்பாயும் பங்கு சந்தைகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்*

சமீபகாலமாக, பங்குச் சந்தைகள் தினந்தோறும் புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், 'செபி' மற்றும் எஸ்.ஏ.டி., எனும் பங்குச்சந்தை மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்., சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளிகளுடன் போனில் பேச்சு அரசு உதவிகள் முறையாக வருவதாக கருத்து தெரிவித்தனர்*

🌹 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ *காமராஜர் பிறந்த நாள் விழா 2.20லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுதிட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் 15ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பிரதமர் மோடி ரஷ்யா ஆஸ்திரியா பயணம்*

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ *புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில முதல் மந்திரிகளை சந்திக்க திட்டம் வக்கீல் சங்கங்கள் அறிவிப்பு*

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *இன்று ஹத்ராஸ் வருகிறார் ராகுல்*

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., எம்.பி.யுமான ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ *கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா : சி.பி.ஐ, வழக்கில் இன்று விசாரணை*

மதுபான கொள்கை மோசடி வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மேற்குவங்கம்: தர்ணா செய்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி பிரமாணம்*

மேற்குவங்க சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணமுல் காங்., கட்சி இரு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ *என்.சி.சி.,யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி*

தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை*

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு*

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *டில்லி டூ மும்பை கொண்டாட்டம் * 'உலக' சாம்பியன்கள் உற்சாகம்... * இந்திய ரசிகர்கள் அமோக வரவேற்பு*

✍️ *டி.என்.பி.எல்., இன்று துவக்கம் * கோவை-சேப்பாக்கம் பலப்பரீட்சை*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

முக்கிய செய்திகள்
ஓடும் இரயிலில் லஞ்சம் வாங்கிய திதி TTE

தெலுங்கானா ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்த பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

பெங்களூருவில் சித்தி கல்லூரியில் நடந்த கொலை சிசிடிவி காட்சிகள்


கொண்டாட்டத்தின் போது சோகம்.. மின்சாரம் தாக்கி நபர் பலி

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் வெற்றி ஊர்வலத்திற்குகாக குவிந்த மக்கள் கூட்டம்

சிசிடிவி காட்சிகள் தெலுங்கனா:
அதிவேகத்தால் இளைஞர் பலி

இந்த தெய்திகளின் வீடியோக்களை பேனாமுள் யூடியூப் சேனலில் பார்க்கவும்

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments