6/7/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 04/07/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 71
 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஜூலை* -06*
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24323.85
பேங்க் நிப்டி : 52660.35
சென்செக்ஸ் : 79996.6

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5537
22 K தங்கம்/ g. : ₹ 6760
24 K தங்கம்/g   : ₹ 7375
    வெள்ளி    /g   : ₹ 97.70

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - 8 பேர் சரண்*

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரண்டைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு*

துராபள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்*

ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது என்று மாயாவதி கூறியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது*

கூடலூர் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*✍️ பா.ஜ., கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்*

சமூக நீதிக்கு துரோகம் செய்கிறார்கள் விக்கரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா ஜனதா கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள் மு க ஸ்டாலின் வீடியோமூலம் வாக்கு சேகரித்தார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பணிகளை முடிக்காமல் ரூ.42 லட்சம் மோசடி திரைப்பட இயக்குனர் பார்த்திபன் புகார்*

பணத்தை பெற்றுக்கொண்டு பணிகளை முடித்து தராமல் சிவப்பிரசாத் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் வாயிலாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசாரிடம் நேற்று முன்தினம் பார்த்திபன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *16 வயது சிறுமிக்கு குழந்தை சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு*

விழுப்புரம்: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்த வழக்கில் 17 வயது சிறுவன் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *நில ஆவணங்கள் 'ஆன்லைன்' சேவை வெளியீடு*

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம், நத்தம் பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள, https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்கிருந்தும் எந்நேரத்திலும், eservices.tn.gov.in என்ற இணையவழி சேவையை பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா, சிட்டா, 'அ' பதிவேடு, புலப்படம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ரேஷன் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்*

'ரேஷன் கடைகளில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பிரிட்டன் தேர்தலில் வீசியது...ஸ்டாமர் புயல்! ரிஷி சுனக் கட்சி படுதோல்வி*

நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து பழனிசாமி 10 நாள் ஆலோசனை*

லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு*

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று மாலை, வினாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது*

பஞ்சாப்பில் பைக்கில் சென்ற சிவசேனா பிரமுகரை வழிமறித்து வாளால் நிஹாங்க் சீக்கியர் வெட்டிய சம்பம் நடந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ '*நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு எதிர்ப்பு*

'முறைகேடு நடந்ததாக கூறி, ஏற்கனவே நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது, நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *மின் கட்டணம் செலுத்த 'லிங்க்' எதையும் தொடாதீங்க!*

'இன்றே கடைசி தேதி, கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்; பணம் கட்டுவதற்கு 'லிங்க்'யை, கிளிக் செய்யவும், என்று வரும் எஸ்.எம்.எஸ்.,யை நம்பி ஏமாறாதீர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்*

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *இந்தியா- ஜிம்பாப்வே தொடர் துவக்கம்*

✍️ *கோவை முதல் வெற்றி * வீழ்ந்தது சேப்பாக்கம்*

✍️ *இந்திய பெண்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்க அணி வெற்றி*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments