🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 04/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 74
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஜூலை* -09*
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24320.55
பேங்க் நிப்டி : 52425.80
சென்செக்ஸ் : 79960.38
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5569
22 K தங்கம்/ g. : ₹ 6799
24 K தங்கம்/g : ₹ 7417
வெள்ளி /g : ₹ 99.60
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்*
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை*
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் நேற்று பிற்பகல் பதவியேற்றுக்கொண்டார்.
ரவுடிகளுக்கு எந்த மொழி புரிகிறதோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம் என கூறினார்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
பதிவு
9/7/2024
*மெட்ரோ வாட்டர் நிர்வாகமே ? மெட்ரோ வாட்டர் நிர்வாகமே? அம்பத்தூர், பாடி,குமரன் நகரில் இருந்து தேவர்நகர் செல்லும் வழி பல வருடங்களாக முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்துவருகிறது இந்த பகுதி மக்கள் பிரச்சனையை செவி கொடுத்து கேளு மெட்ரோ வாட்டர் நிர்வாகமே*
சென்னை அம்பத்தூர் பாடி மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் தொடர் பிரச்சினையாக இருந்து வரும் பள்ளத்தை சரி செய்ய வேண்டி மெட்ரோ வாட்டர் உயர் அதிகாரிகள் பார்வைக்கு*
சென்னை அம்பத்தூருக்கு உட்பட்ட 88வது வார்ட், பாடி,குமரன் நகரில் இருந்து தேவர் நகர் செல்லும் மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் மற்றும் TVS மெயின் ரோடு முழுக்க பல இடத்தில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்கிறார்கள்
மறுபடியும் பள்ளம் ஏற்படுகிறது சரி செய்கிறார்கள்
திரும்பவும்
பள்ளம் ஏற்படுகிறது
கிட்டத்தட்ட பல வருடங்களாக
மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இதை தான் செய்து வருகிறது
இம்முறை மறுபடியும் தேவர்நகர் கருமாரி அம்மன் கோவில் அருகில் சரி செய்கிறோம் என்று சரி செய்ய ஆரபித்தனர் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் தோட்டிய பள்ளம் ஆமை வேகத்தில் வேலை நடைபெற ரோட்டை முழுமையாக மூடி
வழியில்லாமல் நடைபாதைபோல் சிறிய வழு இருக்கிறது இந்த வழியாக காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து சென்ற போது குடும்பத்தோடு வந்த ஒரு குடும்பம் பள்ளத்து அருகில் விழுந்து நூல் அளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றார்கள் ஒரு ஒரு முறையும் இந்தப் பள்ளம் ஏற்படுகிறது இதில் மழை வேறு வந்து சர்க்கஸ் போல் சறுக்கி செல்கிறார்கள்
அதை எவ்வளவோ பொருள் செலவு செய்து சரி செய்து பள்ளத்தை மூடுகிறார்கள்
மறுமுறையும் சிறிது நாட்களிலேயே பள்ளம் ஏற்படுகிறது அப்பகுதியாக செல்லும் அரசு பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் மறித்து மாற்றுப்பாதையில் திருப்பி விடுகிறார்கள்
நீண்ட வருடமாக ரோடும் போடாமல் இருந்து வருகிறது பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் இங்கு ஏற்படும் தொடர் பள்ளத்தை சரி செய்தால் மட்டுமே அப்பகுதியில் ரோடு போட முடியும் என்றும் அதையும் மீறி ரோடு போட்டால்
மறுபடியும் பள்ளம் ஏற்பட்டு அனைத்து பொருட்செளவிலும் ரோடு போட்டது வீணாகிவிடும் என்று கூறுகிறார்கள்
மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஏன் 7 வருடங்களுக்கு மேல் இதனை நிரந்தரமாக சரி செய்ய முடியவில்லை என்று
அப்பகுதி மக்களின் தொடர் வேண்டுகோளாகவே இது மாறிவிட்டது
உடனடியாக சம்பந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
பதிவு
8/7/2024
*பெருநகர சென்னை மாநகராட்சி,மண்டலம் -9 க்கு உட்பட்ட 144 வது வார்ட்,பொது கழிப்பிடம் 144/04 பொது பணித்துறை பில்டிங் எதிரே கடற்கரை சர்வீஸ் ரோட்டில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசி அருவருக்கத் தக்க செயலில் ஈடுபடும் இப்பேற்பட்ட பெண்கள் மீது பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடற்கரைக்கு வரும் மக்களின் வேண்டுகோள்.*
இந்தியாவிலேயே மிகப்பெரிய கடற்கரை நமது மெரினா கடற்கரை இந்த கடற்கரைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நமது சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் முக்கியமாக பெண்கள் ஏராளமானவர்கள்
தினம் தினம் வந்து செல்கிறார்கள் கடற்கரையில் விளையாடிவிட்டு இயற்கையை ரசித்து விட்டு வரும் பெண்கள் அவர்களுடைய ஆடைகளை மாற்றுவதற்கு பொது கழிப்பறையை பயன்படுத்த கழிப்பறைக்கு வரும் பெண்களை உள்ளே வரவிடாமல் பணம் கேட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாசமாக பேசி துரத்தி அடிக்கிறார்களாம் இந்த பெண்கள்
இன்று சென்னைக்கு அருகே உள்ள ஒரு மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர் அந்த பொதுகழிப்பிடத்தை பயன்படுத்துவதற்காக சென்று இருக்கிறார்கள் அவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து பணம் கேட்டு தராததால் உள்ளே துணி மாற்றிய பெண்களை மாற்ற விடாமல் தகாத வார்த்தையில் திட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்கள்
இந்த பிரச்சனை 8/7/2024 ஆம் தேதி இன்று மாலை 4.30 மணியளவில் அந்த இடத்தில்
சிறு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு வந்த இருவர் நாங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிகிறோம் என்று கூறி பேசினார்களாம்
அதில் ஒருவர் நான் சென்னை மாநகராட்சி மண்டலம் 114 வது வார்டில் மேனேஜராக பணிபுரிகிறேன் என்று கூறினாராம் சம்பந்தப்பட்டவர்கள் மேனேஜர் என்று யாரும் இல்லையே என்று கூறியதற்கு மூக்கில் வெட்டு தழும்போடு வந்த ஒருவர் உங்களுக்கு என்ன பிரச்சனை அதை கூறுங்கள் என்று கூறினாராம்
பாதிக்கப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டு நீங்கள் யார் என்று தெரியாமல் நாங்கள் உங்களிடம் பேசமுடியாது என்று கூறி
பெருநகர சென்னை மாநகராட்சி தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மண்டலம் 9 அதிகாரிகளிடம் பேசி நடந்த தகவலை கூறியிருக்கிறார்கள் அவர்கள் உடனே 144 வது வாரட் AE அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்
சம்பந்தப்பட்ட 144 வது வார்டு AE அவர்களிடம் நடந்த தகவலை கூறிய போது
நான் என்ன என்று பார்க்கிறேன் என்று கூறி தொலைபேசியில் பேசியிருக்கிறார் அவர் பேசியதை பார்த்தால் ஏதோ கடமைக்கு பதில் கூறியது போல் இருக்கிறது என்றும்
அவர் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க மாட்டார் என்று நினைக்கிறோம் எங்களுக்கு நடந்தது இனி எந்த பெண்களுக்கும் நடக்கக்கூடாது என்று கூறி நம்மிடம் தகவல் தெரிவித்தார்கள்
சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொதுக் கழிப்பிடத்திற்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிக்கும் முயற்சியில் ஆடைகள் மாற்றிக் கொட்டிருந்த பொண்களை பாதியிலேயே அப்படியே வெளியே துரத்திய இப்பேற்பட்ட பெண்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்*
விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண், களிமண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இணையதளம் வழியாக விண்ணப்பித்து இலவசமாக பெறலாம்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் - அதிபர் புதின் புகழாரம்*
பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அமித்ஷாவிடம் தமிழக பா.ஜனதா இன்று மனு*
அண்ணாமலை, "தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் 134 கொலை நடந்துள்ளது. மிகவும் அபாயகரமான சூழலில் நாம் இருக்கிறோம். தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் அரசியல் தலைவர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று முன்னெடுத்துள்ளோம் என கூறினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து*
சென்னை தாம்பரம் அடுத்துள்ள திருநீர்மலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடோனில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி பின்னர் தீயானது மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மாணவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது*
ராமேஸ்வரம்: மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஒரே குடும்பத்தில் 3 பேர் கழுத்தறுத்துக் கொலை - தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்து பயங்கரம்*
லக்னோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், தூங்கிக்கொண்டிருந்தபோது கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஜம்மு பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு*
ஜம்முவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு*
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *குழந்தைகள் மருத்துவமனை உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தாக்குதல் - 36 பேர் பலி*
குழந்தைகள் மருத்துவமனை உள்பட உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை: பழனிசாமி காட்டம்*
'தமிழகத்தில், காவல்துறைக்கு சுதந்திரம் கிடையாது என்பதால், ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *விக்கிரவாண்டியில் பிரசாரம் நிறைவு; வெளியேறிய தமிழக அமைச்சர்கள்*
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில், இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, ஏப்ரல் 6ல் உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சசிகலா சுற்றுப்பயணம் தென்காசியில் 17ல் துவக்கம்*
அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க உள்ளதாக கூறி, வரும் 17ம் தேதி முதல் சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *செந்தில் பாலாஜி காவல் 44வது முறையாக நீட்டிப்பு*
ஓராண்டாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 44வது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சு தொடங்கியது*
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு*
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த தரவரிசை பட்டியல், நாளை இன்ஜினியரிங் கமிட்டியின், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மாவட்ட ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி சாம்பியன்*
✍️ *ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் ஸ்பெயின் - பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை*
✍️ *டி.என்.பி.எல்.: திண்டுக்கல்லை வீழ்த்தி சேலம் அபார வெற்றி*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ '*கூலிப்படைகளின் தலைநகரமாகும் சென்னை*
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்தில் இருப்பதால், கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்



