🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 11/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
✍️ *ஆகஸ்ட்*- 11
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5280
22 K தங்கம்/ g. : ₹ 6445
24 K தங்கம்/g : ₹ 7031
வெள்ளி /g : ₹ 88.10
✍️2023 - 2024ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு
*"ராக்போர்ட் டைம்ஸ்" சார்பில் பாராட்டு விழா* (Excellence Award Function For School Students) *"ராக்போர்ட் டைம்ஸ்" இதழின் ஆசிரியர் திரு.எஸ்.ஆர்.லெட்சுமி நாராயணன்* அவர்கள் தலைமையில் 11.08.2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.
"ராக்போர்ட் டைம்ஸ்" வார இதழ் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பாராட்டு விழாவை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. விழா சிறக்க *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் வாழ்த்துகள்..
✍️ *தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்*
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
✍️ *15 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை: ஐந்து மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்'*
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
✍️ *ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்*
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
✍️ *சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து*
பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் - தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி*
வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் அழைத்து பேசினார்.
✍️ *வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி*
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
✍️ *ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்சேவை*
ராமநாதபுரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
✍️ *சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் பெட்டிகள் 4ல் இருந்து 6ஆக அதிகரிப்பு: புதிதாக 28 ரயில்கள் கொள்முதல்*
சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
✍️ *சிலை கடத்தல் குற்றவாளிகளுக்கு ஆதரவு என குற்றச்சாட்டு மாஜி ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு*
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை வழக்கில் சிக்க வைத்ததாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், மாஜி ஐஜி பொன்.மாணிக்கவேலின் பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக நேற்று காலை முதல் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.
✍️ *சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை: மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு*
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் ேஹம்நாத்தை விடுதலை செய்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
✍️ *தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்: சென்னையில் 18ம் தேதி வெளியீடு*
சென்னை: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
✍️ *புதன்கிழமை தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார் சென்னை கமிஷனர் அருண்*
சென்னை: புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்திய பி.இ. பட்டதாரி பெண் கைது: 15 மணி நேரத்தில் மீட்பு*
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய இன்ஜினியரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
✍️ *தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 3 நாட்களில் சவரன் ரூ.920 உயர்ந்தது*
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,445க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,560க்கும் விற்கப்பட்டது.
✍️ *கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை*
கொல்கத்தா: கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 2 வீரர்கள் பலி, 4 பேர் படுகாயம்*
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.
✍️ *தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை கவலை*
ஈரோடு: ''தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பிற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது,'' என்று, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.
✍️ *காரில் பதுக்கிய ஐம்பொன் சிலை மீட்பு ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற 7 பேர் கைது*
தஞ்சாவூர் மாவட்டம், திருவிழாப்பட்டியில், சந்தேகத்திற்கிடமாக நின்ற காரையும், இரண்டு பைக்குகளையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, காரில் மறைத்துக்கொண்டு வரப்பட்ட, 2.5 அடி உயர ஐம்பொன் பெருமாள் சிலையை போலீசார் கைப்பற்றினர்.
✍️ *தங்கப் பதக்கம் வென்றார் ‘பாலின’ சர்ச்சை வீராங்கனை*
✍️ *காலிறுதியில் தோற்றார் ரீத்திகா ஹூடா*
✍️ *நான் நலமுடன் இருக்கிறேன் - உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி*
✍️ *நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்*
✍️ *முதல் டெஸ்ட் போட்டி; 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 154 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா*
✍️ *தங்கப் பதக்கம் வென்றார் ‘பாலின’ சர்ச்சை வீராங்கனை*
✍️ *காலிறுதியில் தோற்றார் ரீத்திகா ஹூடா*
✍️ *நான் நலமுடன் இருக்கிறேன் - உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி*
✍️ *நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்*
✍️ *முதல் டெஸ்ட் போட்டி; 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 154 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*