12/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 12/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

✍️ *ஆகஸ்ட்*- 12
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5279
22 K தங்கம்/ g. : ₹ 6444
24 K தங்கம்/g   : ₹ 7030
    வெள்ளி    /g   : ₹ 88.00

✍️ *அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்*

புதுடெல்லி: அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததை அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம், அதானி குழுமத்துக்கும் செபி தலைவருக்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
                     ---------------------------
https://youtube.com/shorts/_qh6rFYKGik?si=wYqpTRUlU37dDufk 

பல வருடங்களாக 
தேவர் நகர் மற்றும் குமரன் நகர் மக்களுக்கு ரோடு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது

சென்னை, பாடி, குமரன் நகரில் இருந்து தேவர் நகர் செல்லும் வழி முழுக்க மெட்ரோ வாட்டர் வேலை காரணமாக பல வருடங்களாக ரோடு இல்லாமல் இருந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் உயர் அதிகாரியிடம் பேனாமுள் பத்திரிகை சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இம்மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் தேவர் நகரில் அம்மன் கோவில் அருகில் இருக்கும் பள்ளத்தை சரி செய்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு என்ஓசி வழங்கி விடுவோம் என்று சம்பந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் உயர் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள் 
மெட்ரோ வாட்டர் நிர்வாகம் என்ஓசி கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி நமது தேவர்நகர் மற்றும் குமரன்நகர் மெயின் ரோட்டிற்கு தார் சாலை அமைத்துக் கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.


✍️ *கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ரூ.86 லட்சத்தில் நவீன மருத்துவமனை: கட்டுமான பணிகள் தீவிரம்*

அண்ணாநகர், ஆக.12: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி, ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

✍️ *ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்: கடற்கொள்ளையர்களும் ஆயுதங்களால் தாக்கியதில் 4 பேர் படுகாயம்*

ராமேஸ்வரம்: கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. இதனால் மீன்பிடிக்க முடியாமல் கரைதிரும்பிய மீனவர்கள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

✍️ *ஒரே இரவில் 22 செ.மீ. மழை கொட்டியது; வெள்ளக்காடானது விழுப்புரம் நகரம்: ஓடையில் விழுந்து ஒருவர் பலி; தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு*

விழுப்புரம்: ஒரே இரவில் 22 செ.மீ மழை கொட்டி தீர்த்ததால் விழுப்புரம் நகரம் வெள்ளக்காடானது.

✍️ *தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும்*

சென்னை: தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *திருத்தணி அருகே கோர விபத்து லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல் 5 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி*

சென்னை: திருத்தணி அருகே லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

✍️ *யார்டு சீரமைப்பு பணியால் வரும் 15, 16, 17 தேதிகளில் தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது: மாம்பலத்தில் கூடுதல் நேரம் நிறுத்தம், தெற்கு ரயில்வே அறிவிப்பு*

சென்னை: தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணி காரணமாக வரும் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

✍️ *முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 2.28 லட்சம் பேர் எழுதினர்: நாடு முழுவதும் 500 மையங்களில் நடந்தது*

சென்னை: பல்வேறு குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நேற்று நடந்தது.

✍️ *ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி பாடம் வாரியான தேர்வு இன்று தொடக்கம்*

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான பாடம் வாரியான தேர்வு இன்று தொடங்குகிறது. 118 இடங்களுக்கு 13,143 பேர் பங்கேற்கின்றனர்.

✍️ *அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து பரவும் தகவல் முற்றிலும் வதந்தி: தமிழ்நாடு அரசு விளக்கம்*

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தியே என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

✍️ *கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்*

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

✍️ *78வது சுதந்திர தின கொண்டாட்டம் சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார், கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார்*

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றி வைத்ததும், விழா மேடையில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும்.

✍️ *சென்னை : பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் பலி: அதிகாரிகள் நேரில் ஆய்வு*

✍️ *சென்னை: மாவட்டம் செவித்திறன் பாதிக்கப்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்: 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*

✍️ *திருவொற்றியூர்: மாதவரத்தில் 150 ஏக்கரில் அமைய உள்ள ஹைடெக் சிட்டிக்கு விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளது. இதையொட்டி, டிட்கோ முதற்கட்ட ஆய்வு பணிகளை முடித்துள்ளது.*

✍️ *சென்னை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்படுவதை கண்காணிக்க ரூ.48 லட்சம் செலவில் 3 ஏடிவி நவீன ரோந்து வாகனங்களை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.*
               ---------------------------------
பதிவு
11/8/2024

🙏நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏

*சென்னை,அம்பத்தூர்,பாடிக்கு உட்பட்ட முகப்பேர்,ஜெ ஜெ நகர் மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி*

சென்னை,அம்பத்தூர் , பாடி,M.G ரோடு,குமரன் நகர் டாஸ்மாக் கடை அருகில் உள்ள மின் ஒயர்கள் செல்லும் சிமெண்ட் போஸ்டர்கள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்பு கூடாக  உள்ளது என்று 8/8/2024 அன்று பேனாமுள் பத்திரிகை மூலமாக தகவல் தெரிவித்திருந்தோம் செய்தியை அறிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

✍️ *ராஜஸ்தானில் கொட்டியது கன மழை; 20 பேர் பரிதாப பலி; பள்ளிகள் மூடல்*

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொட்டிய கன மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். இன்று(ஆகஸ்ட் 12) பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

✍️ *9 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு*

மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று(ஆக.,12) கனமழை பெய்வதற்கான மஞ்சள், 'அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

✍️ *மூவர்ணக்கொடியை ஏந்திய மனுபாகர், ஸ்ரீஜேஷ்! வண்ணமயமான விழாவுடன் நிறைவு பெற்றது பாரிஸ் ஒலிம்பிக்*

பாரிஸ்: 17 நாள் உலகை கட்டிப் போட்ட பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா, வண்ணயமான விழாவுடன் நிறைவுபெற்றது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூசின் சாகச சண்டை காட்சிகள், ஸ்னுாப் டாக், பில்லி எலிஷ் உள்ளிட்ட உலகின் முன்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா களை கட்டியது.

✍️ *நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு*

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று(ஆக.,11) மாலை திறக்கப்பட்டது. இன்று(ஆக.,12) காலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் பூஜை நடைபெறும்.

✍️ *வயநாட்டில் மீண்டும் தொடங்கிய தேடுதல் பணிகள்*

பிரதமர் மோடி வருகையையொட்டி வயநாட்டில் நிறுத்தப்பட்ட தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கியது.

🏏 *நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அமண்டா அனிசிமோவா*

🏏 *தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் 'டிரா'*

🏏 *பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 33வது ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது*

🏏 *இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரம் அபினவ் பிந்த்ரா  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) சார்பில் பெருமைமிகு ‘ஒலிம்பிக் ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments