14/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்தி
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 14/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

✍️ *ஆகஸ்ட்*- 14
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24139.00
பேங்க் நிப்டி : 49831.85
சென்செக்ஸ் : 78956.03

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5378
22 K தங்கம்/ g. : ₹ 6565
24 K தங்கம்/g   : ₹ 7162
    வெள்ளி    /g   : ₹ 88.50

✍️ *ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 25 ஆயிரம் பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு*

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

✍️ *2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்*

சென்னை: இரண்டாவது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

✍️ *சென்னை மாநகராட்சியில் வருவாய்த்துறை சேவைகளுக்கு கியூஆர் கோடு அறிமுகம்*

சென்னை: சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வருவாய்த் துறையால் வழங்கப்படும் புதிய, மறு மதிப்பீடு, சொத்து வரி மதிப்பீடு, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் அறியும் வகையிலான விரைவு தகவல் குறியீடு (கியூஆர் கோடு) தொழில்நுட்பப் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✍️ *தாம்பரம் மாநகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு: அதிகாரிகள் ஆலோசனை*

தாம்பரம்: புறநகர் பகுதிகளான வேங்கைவாசல், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம், அகரம்தென், திருவஞ்சேரி, முடிச்சூர், கவுல்பஜார், மூவரசம்பட்டு, பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய 15 ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

✍️ *மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்*

சென்னை: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள், வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.

✍️ *தறிகெட்டு ஓடிய கார் மோதி 2 தூய்மைப் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் காயம்: எம்பிபிஎஸ் மாணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி*

ஆலந்தூர்: பல்லாவரம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (25). தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று காலை தனது காரில், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் சிக்னல் வந்தபோது பாலமுருகன் கார் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார்.இதனால், சீறிப்பாய்ந்த கார் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த 4 பள்ளி மாணவிகள், 2 தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. இதில் 6 பேரும் பலத்த காயமடைந்தனர். பொதுமக்கள், அவர்களை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த மருத்துவ மாணவனை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.

✍️ *சுதந்திர தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை*

சென்னை: சுதந்திர தினத்தை யொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

✍️ *சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை ரூ.10 குளிர்பான நிறுவனத்திற்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை*

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்து குளிர்பான மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

✍️ *சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு: மேயர் பிரியா தகவல்*

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

✍️ *ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 6 புதிய விமான சேவைகள் தொடக்கம்*

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் 6 புதிய விமான சேவைகளை நேற்று தொடங்கி உள்ளது.

✍️ *காற்றின் வேக மாறுபாடு தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு*

சென்னை: டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

✍️ *இஓஎஸ்-8 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி மாற்றம்: இஸ்ரோ தகவல்*

ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

✍️ *சோழவரம் அருகே பொன்வண்டு சோப்பு நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: பொக்லைன் மூலம் இடித்து அகற்றம்; வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை*

புழல்: சோழவரம் அருகே பொன்வண்டு சோப்பு நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

✍️ *பேருந்து கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை: போக்குவரத்து துறை விளக்கம்*

சென்னை: அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்து துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

✍️ *தங்கம் விலை ஒரே நாளில் ரூ.760 உயர்வு*

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.52,520க்கு விற்பனையானது.

✍️ *திருப்பதி கோயிலில் நவம்பர் மாத டிக்கெட் கோட்டா வெளியிடும் தேதி அறிவிப்பு*

நவம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம் ரூ. 300 டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் நவம்பர் மாதத்திற்கான அறைகள் அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர் திட்டத்தில் நவம்பர் மாதம் சேவை செய்ய 27 ம் தேதி காலை 11 மணிக்கும், ஏழுமலையானுக்கு வெண்ணைய் தயார் செய்யும் நவநீத சேவைக்கு 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவைக்கு 1 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

✍️ *செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது*

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்றைய விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

✍️ *நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் இன்று சுதந்திர தின உரை*

புதுடெல்லி: 78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.

✍️ *போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை துரத்தி சென்று சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.*

சென்னை:விசாரணையின் போது, போலீசாரை தாக்கி தப்பியோட முயன்ற ரவுடியை, துணிச்சலாக துரத்திச் சென்ற பெண் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

✍️ *சின்சினாட்டி ஓபன்; முதல் சுற்றில் டாமி பால் அதிர்ச்சி தோல்வி*

✍️ *ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்*

✍️ *சின்சினாட்டி ஓபன்; தகுதி சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments