17/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 17/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

✍️ *ஆகஸ்ட்*- 17
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24541.15
பேங்க் நிப்டி : 50516.90
சென்செக்ஸ் : 80436.84

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5373
22 K தங்கம்/ g. : ₹ 6566
24 K தங்கம்/g   : ₹ 7163
    வெள்ளி    /g   : ₹ 89.10

✍️ *ஆவடியில் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கிய பேனாமுள் பத்திரிகை ஆசிரியர்*

2024 ஆகஸ்ட் 15 தேதி 78 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேனாமுள் பத்திரிகை ஆசிரியர் பாடி பா.கார்த்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆவடி, பருத்திப்பட்டு, லட்சுமி கிரீன் சிட்டியில் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார் லட்சுமி கிரீன் சிட்டி சங்க நிர்வாகிகள் இந்த சுதந்திர தின விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேனாமுள் பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிருபர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது விழாவை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த தலைவர் : ஜெயகுமார்
துணை தலைவர் : முருகேசன்
செயலாளர் : கண்ணன்
துணை செயலாளர் : சந்தோஷ்
பொருளாளர் : பிரமோத் ,பாலமுருகன், ஐயப்பன்,சுரேஷ் ஆகியோருக்கு பேனாமுள் பத்திரிகை சார்பாக நன்றிகளையும் தெரிவித்தனர்


✍️ *சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல்: அரியானாவில் அக்.1ல் வாக்குப்பதிவு*

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் அக்டோபர் 1ம் தேதியும் ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

✍️ *கலைஞர் 100 ரூபாய் நாணயம் நாளை வெளியீடு; தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.*

கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் ஒன்றிய அரசின் சார்பில் நாளை மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறார்.

✍️ *3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்*

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பின் காரணமாகவும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனால் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், 20ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு*

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

✍️ *எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள்: ஏவப்பட்ட 13 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது; கரகோஷம் எழுப்பி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி; இஸ்ரோ தலைவர் பாராட்டு*

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

✍️ *நகைக்கடை உரிமையாளரை வெட்டி 25 சவரன், ₹50 ஆயிரம் கொள்ளை*

திருமுல்லைவாயல்: 
கடையில் தனியாக இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 4 பேர், கடைக்குள் புகுந்து, ரமேஷ் குமாரிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்து கூச்சலிட்டதால், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்தியால் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதையடுத்து, கடையில் வைத்திருந்த 25 சவரன் நகைகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.

✍️ *நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம்*

நண்பகல், 12.20 மணிக்கு, 44 பயணியருடன் புறப்பட்ட கப்பல் மாலை இலங்கை காங்கேசன்துறையை சென்றடைந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு காங்கேசன்துறையில் புறப்பட்டு மதியம், 2:00 மணிக்கு கப்பல் நாகை வந்தடைகிறது.

✍️ *செந்தில் பாலாஜி வழக்கு சாட்சிகள் விசாரணை துவக்கம்*

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அமலாக்கத் துறை பதிவு செய்த சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், நேற்று சாட்சிகள் விசாரணை துவங்கியது.

✍️ *அத்திக்கடவு- அவினாசி திட்டம்: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்*

அத்திக்கடவு- அவினாசி திட்டம் இன்று நனவாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

✍️ *நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்*

பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.

✍️ *70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன்'*

சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகளை 'பொன்னியின் செல்வன் 1' அள்ளியுள்ளது.

✍️ *ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு*

சபரிமலை: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி பொறுப்புகளை மூத்த தந்திரி ராஜீவரருவின் மகன் பிரம்மதத்தன் மேற்கொண்டார்.

✍️ *முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு*

வாஷிங்டன்: உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எக்ஸ் வலைதள உரிமையாளரும், பெரும் பணக்காரருமான எலான் மஸ்கிற்கு அயர்லாந்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

✍️ *பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: கவர்னர் அறிவிப்பு*

சென்னை: இந்திய அரசியல்அமைப்பு தின விழா மற்றும் பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டிகளை கவர்னர் ரவி அறிவித்து உள்ளார்.

✍️ *திமுகவின் பவள விழா ஆண்டு சென்னையில் செப்.17ல் முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்*

சென்னை: திமுகவின் பவள விழா ஆண்டில் சென்னையில் செப்டம்பர் 17ல் முப்பெரும் விழா கொண்டாடுவது என்றும், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

✍️ *மத்திய அரசு அதிரடி சுகாதாரம், பாதுகாப்பு செயலர்கள் மாற்றம்*

புதுடெல்லி: மத்திய அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

✍️ *கொல்கத்தாவை போன்று உபியிலும் ஒரு சம்பவம் நர்ஸ் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை: ராஜஸ்தான் மாநிலத்தில் கொலையாளி கைது*

கடந்த மாதம் 30ம் தேதி பணிக்கு சென்ற அந்த பெண் வீடு திரும்பவில்லை.இது குறித்து அவரது செல் போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 8ம் தேதி உ.பியின் டிப்டிபா கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய முகம் அடையாளம் தெரியாத அளவு சிதைந்த நிலையில் காணப்பட்டது.இந்த நிலையில் கொலை தொடர்பாக, உபி மாநிலம் பரேலியை சேர்ந்த தர்மேந்திரா என்பவனை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர்.

✍️ *பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை கொல்கத்தாவில் மம்தா கண்டன பேரணி: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை*

கொல்கத்தா: பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன பேரணி நடந்தது.

✍️ *வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி*

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச அரசின் தலைமை ஆலோசகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நிலவும் சூழல் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அவர் உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

✍️ *சீனர்கள் தொடர்புடைய சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி வழக்கில் தமிழக இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை*

புதுடெல்லி: சீன நாட்டினரின் தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

✍️ *சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி*

✍️ *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா*

✍️ *ஐ.பி.எல்.: பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வரும் பி.சி.சி.ஐ? சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

பாடி பா.கார்த்திக
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
Comments