1/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 1/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

✍️ *ஆகஸ்ட்*- 01
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24951.15
பேங்க் நிப்டி : 51553.40
சென்செக்ஸ் : 81741.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5260
22 K தங்கம்/ g. : ₹ 6421
24 K தங்கம்/g   : ₹ 7005
    வெள்ளி    /g   : ₹ 91.10

✍️ *வயநாட்டில் குவியல் குவியலாக சடலங்கள் மீட்பு; நிலச்சரிவு பலி 270 ஆக உயர்வு*

திருவனந்தபுரம்: வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை பகுதியில் மட்டும் 350க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டாற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 250 பேரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

✍️ *நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 6ம் தேதி வரை மழை நீடிக்கும்*

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

✍️ *தமிழ்நாடு அரசு சார்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ரூ5 கோடி நிதியுதவி: அமைச்சர் எ.வ.வேலு நேரில் வழங்கினார்*

சென்னை: வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ5 கோடி நிதியை அமைச்சர் எ.வ.வேலு, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.

✍️ *இயற்கை பேரிடர் ஏற்படக்கூடும் என 7 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு எச்சரிக்கை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்*

புதுடெல்லி: கேரளாவில் இயற்கை பேரிடர் ஏற்படலாம் என 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும் அப்போதே அரசு உஷார் ஆக இருந்திருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்கலாம் என மத்திய அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

✍️ *மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை தரவில்லை அமித்ஷா பொய் சொல்கிறார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி*

திருவனந்தபுரம்: நிலச்சரிவு குறித்தோ, அதிக மழை குறித்தோ மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை தரவில்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறுகிறார் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

✍️ *ஆயுள், மருத்துவ காப்பீடு மீதான 18சதவீத வரியை திரும்ப பெற வேண்டும்: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம்*

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுவதற்கான பரிந்துரையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்

✍️ *சர்ச்சையில் சிக்கிய பூஜாவின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது யுபிஎஸ்சி: வரும் காலங்களில் தேர்வெழுதவும் தடை*

புதுடெல்லி: சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சியை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வெழுதவும் அவருக்கு தடை விதித்துள்ளது.

✍️ *தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல்*

கேரள மாநிலம், வயநாட்டிற்கு நேற்று உதகமண்டலம் மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களின் மூலம் 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அனுப்பி உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

✍️ *அரசு போக்குவரத்து கழகங்களின் 5 மேலாண் இயக்குநர்கள் பணியிட மாற்றம்*

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 5 பொது மேலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

✍️ *நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; துறை செயலாளர்கள், கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: தமிழ்நாடு அரசு தகவல்*

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் பல்துறை செயலாளர்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு*

இந்த வழக்கில் போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் தேவைப்படுவதால் வழக்கில் முக்கிய நபர்களான பொன்னை பாலு, அருள், ராமு என்ற வினோத், ஹரிதரன், சிவா ஆகிய 5 பேரை மீண்டும் செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

✍️ *ரூ100 கோடி நில அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர், இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு*

கரூர்: ரூ100 கோடி நில அபகரிப்பு, கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம், சிபிசிஐடி அலுவலகம், வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

✍️ *ஆசிரியர் போராட்டம் விரைவில் நல்ல முடிவு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்*

காரைக்குடி: ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

✍️ *கோயம்பேடு முதல் ஆவடி வரை ரூ80.48 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து: மெட்ரோ ரயில்வே நிறுவனம் தகவல்*

சென்னை: மெட்ரோ ரயில்வே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் RITES நிறுவனத்திற்கு ரூ80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது.

✍️ *மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*

சென்னை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற 9ம் தேதி கோவையில் தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

✍️ *வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரியை சேர்ந்தவர் குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு*

சென்னை: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

✍️ *அடுத்த பிறவியிலும் காவல்துறையில் பணியாற்ற விரும்புகிறேன்: ஓய்வு பெற்ற டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் கண்ணீர்மல்க பேச்சு*

சென்னை: அடுத்த பிறவியிலும் நான் காவல்துறையிலேயே பணியாற்ற அந்த இறைவன் எனக்கு வரம் கொடுக்க வேண்டும் என்று டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பணி ஓய்வு பெற்ற நாளில் கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஓய்வு பெற்றார்.

✍️ *நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களின் தகுதி பட்டியல் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு*

தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.00 மணி வரை www.tnmedicalselection.org என்கின்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றலாம்.

✍️ *கர்நாடக அணைகளில் 2.20 லட்சம் கனஅடி வௌியேற்றம் மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு*

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், நேற்று இரவு 8மணியளவில் வெளியேற்றப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

✍️ *ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு*

சென்னை: ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

✍️ *நில உரிமையாளரிடம் அசல் ஆவணம் தர ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் கைது*

✍️ *வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண்: சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் தேடல்*

✍️ *சென்னை வளசரவாக்கத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் கைது*

✍️ *இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை*

பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி., எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வரும், அக்., 31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.

கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பாஸ்டேக் வாங்கியவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பாஸ்டேக் வாங்கியிருந்தால், அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் போன் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.

✍️ *25,000 தொழில் நிறுவனங்களில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தம்*

சென்னை:தமிழக மின்வாரியம், 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், 'சிம் கார்டு' வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

✍️ *ஒலிம்பிக் திருவிழா 2024: டேபிள் டென்னிசில் அகுலா அமர்க்களம்*

✍️ *ஒலிம்பிக் ஹாக்கியில் இன்று இந்தியா – பெல்ஜியம் மோதல்*

✍️ *காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து, சென் முன்னேற்றம்: பேட்மின்டனில் பதக்க நம்பிக்கை*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments