18/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 18/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

✍️ *ஆகஸ்ட்*- 18
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5457
22 K தங்கம்/ g. : ₹ 6670
24 K தங்கம்/g   : ₹ 7277
    வெள்ளி    /g   : ₹ 91.00

✍️ *கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை: கலைஞர் நினைவிடத்தையும் பார்வையிடுகிறார்*

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் இன்று மாலை வெளியிடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

✍️ *62வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வாழ்த்து*

சென்னை: திருமாவளவன் தனது 62வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

✍️ *வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை*

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

✍️ *சிவகங்கை அருகே வாகன சோதனையின்போது எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த இன்ஸ்பெக்டர்*

காளையார்கோவில்: வாகன சோதனையின்போது எஸ்ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.

✍️ *நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்*

பட்டுக்கோட்டை மாணவன் தற்கொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியும் அலட்சியப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தனார்.

✍️ *பிரதமர் வீட்டுவசதி திட்ட நிதியில் முறைகேடு செய்த 13 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்*

சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

✍️ *ரூ.1,916 கோடி செலவில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்*


சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று காலை தொடங்கி வைத்தார்.

✍️ *நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பயங்கரம் அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை*

திசையன்விளை: கோயில் கொடை விழா தகராறில் அண்ணன், தம்பி சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இதில் படுகாயமடைந்த மற்றொரு சகோதரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

✍️ *தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் ரூ.840 எகிறியது*

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, மீண்டும் சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

✍️ *கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்*

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.

✍️ *கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன: பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை*

கான்பூர்: கான்பூர் அருகே அதிகாலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

✍️ *10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை: டி.ஜி.பி.,*

ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். போலீஸ் உதவி கமிஷனர், ஆர்.டி.ஓ., அல்லது துணை கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும்

தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம்

ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்ற விபரத்தையும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்

விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்க கூடாது

இதர மதத்தை சேர்ந்த மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது

விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது.

✍️ *கட்சி கொடியை ஆக. 22ல் அறிமுகம் செய்கிறார்  விஜய்*

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, ஆக., 22ம் தேதி சென்னை பனையூரில் நடிகர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

✍️ *வேளாங்கண்ணிக்கு மதுரை வழியாக ரயில்*

திருவனந்தபுரத்தில் இருந்து ஆக., 21, 28, செப்.,4ம் தேதிகளில் மதியம் 3:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதுரை வழியாக மறுநாள் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். வேளாங்கண்ணியில் 22, 29, செப்., 5ல் இரவு 7:10 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை 6:55 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.

✍️ *மருத்துவமனையில் பாடகி பி.சுசீலா*

சென்னை:திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

✍️ *கர்ப்பிணியருக்கு உதவ '102' மருத்துவ சேவை துவக்கம்*

சென்னை:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் கர்ப்பிணியருக்கான, '102' என்ற எண்ணில் செயல்படும் மருத்துவ சேவை மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

✍️ *அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கல்லுாரிகளுக்கு தடை*

சென்னை: 'அரசு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்கும் மாணவ - மாணவியரிடம், கட்டணம் வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

✍️ *கயானா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்து வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது.*

✍️ *சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார்.*

✍️ *லண்டன்: இலங்கை அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments