🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 20/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
✍️ 🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
✍️ *ஆகஸ்ட்*- 20
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24572.65
பேங்க் நிப்டி : 50368.35
சென்செக்ஸ் : 80424.68
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5456
22 K தங்கம்/ g. : ₹ 6669
24 K தங்கம்/g : ₹ 7276
வெள்ளி /g : ₹ 90.90
✍️ *உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் பாஜவுடன் ரகசிய உறவுக்கு அவசியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்*
சென்னை: பாஜவுடன் ரகசிய உறவுக்கு அவசியமில்லை.எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.
✍️ *அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க முயற்சி பாஜக அரசின் சதி திட்டத்தை இந்தியா கூட்டணி முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்*
சென்னை: அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்க முயற்சிக்கும், பாஜக அரசின் சதி திட்டத்தை இந்தியா கூட்டணி முறியடிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
✍️ *அமலாக்கத்துறை வழக்கு சிபிஐ கோர்ட்டில் ஆ.ராசா ஆஜர்*
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராஜா நேற்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
✍️ *எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு மாநில அளவில் 10 பேர் முதலிடம்: அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விழுப்புரம் மாணவர் முதலிடம்*
பட்டியலில் மாநில அளவில் 10 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த மாணவர் ரஜனீஷ் 720 புள்ளிகள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
✍️ *சுசீந்திரம் அருகே குடிசையில் சுற்றிவளைப்பு எஸ்ஐயை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு: காலில் குண்டு காயத்துடன் பிடித்து சிகிச்சை*
நாகர்கோவில்: எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
✍️ *குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் விழா: செப்டம்பர் 9 வரை நடைபெறுகிறது*
திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 86, சி அண்டு டி – 2வது பிரதான சாலை என்ற முகவரியில் உள்ள திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா நேற்று தொடங்கியது. இது செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
✍️ *வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரைகள் விளக்கு கண்டெடுப்பு*
3ம் கட்ட அகழாய்வில் இதுவரை 1,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
✍️ *செப்டம்பர் 10ம்தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: 4ம் தேததி முதல் ஆன்லைன் முன்பதிவு*
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதால் இணையதள முன்பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *சென்னை விமான நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்பு 780 நட்சத்திர ஆமைகள், இ-சிகரெட்கள் பறிமுதல்: 4 பயணிகள் சிக்கினர்*
சென்னை: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பு இ-சிகரெட்கள் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி கைது*
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளநிலையில், கூலிப்படைக்கு பண உதவி செய்த ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
✍️ *வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு மதுராந்தகம் வழியாக பாதயாத்திரை*
மதுராந்தகம்: வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு மதுராந்தகம் வழியாக பாத யாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர்.
✍️ *கட்சி அலுவலகத்தில் புது கொடி: பவுர்ணமியில் ஏற்றினார் விஜய்*
சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி தலைமை அலுவலகத்தில், பவுர்ணமி நாளான நேற்று, கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி,விஜய் அழகுபார்த்துள்ளார்.
✍️ *விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: பிரேமலதாவை சந்தித்தார்*
நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கோட் படத்தில் நடிகர் விஜய்காந்த், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் விஜய், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
✍️ *2,000 லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு சிறை*
திருவள்ளூர்: மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
✍️ *10ம் வகுப்பு முடித்தோருக்கு 29ல் 'மார்க் சீட்'*
10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
'தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்' என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
✍️ *ராணுவ முன்னாள் தளபதி பத்மநாபன் காலமானார்*
சென்னை: முன்னாள் ராணுவ தளபதி பத்மநாபன், 83, நேற்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரின் உடலுக்கு கவர்னர் ரவி, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
✍️ *சென்னை - புதுச்சேரி உட்பட 11 ரயில்களின் சேவையில் மாற்றம்*
புதுச்சேரி - விழுப்புரம் காலை 8:05 மணி, விழுப்புரம் - புதுச்சேரி மாலை 5:50 மணி, திருவாரூர் - விழுப்புரம் காலை 5:10 மணி பயணியர் ரயில்கள், செப்., 1ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன
ஆந்திர மாநிலம் காக்கிநாடா போர்ட் - புதுச்சேரி மதியம் 2:30 மணி ரயில், செப்., 1ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்
காச்சிகுடா - புதுச்சேரி மாலை 5:00 மணி விரைவு ரயில், செப்., 1ல் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்
ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி - மன்னார்குடி மாலை 4:10 மணி விரைவு ரயில், வரும் 29ம் தேதி விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்
எழும்பூர் - புதுச்சேரி காலை 6:35 மணி ரயில், வரும் 31, செப்., 1ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே செல்லும்
திண்டுக்கல் - விழுப்புரம் காலை 5:00 மணி ரயில், வரும் 31, செப்., 2ம் தேதியில் விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும்
திருப்பதி - புதுச்சேரி காலை 4:00 மணி ரயில், வரும் 31, செப்., 2ம் தேதிகளில், விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படும்
காட்பாடி - விழுப்புரம் காலை 5:15 மற்றும் 6:45 மணி ரயில்கள், செப்., 1ம் தேதி வெங்கடேசபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்
புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா, புதுச்சேரி - காக்கிநாடா போர்ட் விரைவு ரயில்கள், செப்., 2ம் தேதி செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்.
✍️ *23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி*
அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார்.
✍️ *சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பினார் பாடகி பி.சுசீலா*
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
✍️ *கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை*
அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
✍️ *கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்- சீமான்*
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
✍️ *பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை*
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
✍️ *சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெர் சாம்பியன்*
சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*