23/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 23/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

✍️ *ஆகஸ்ட்*- 23
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24811.50
பேங்க் நிப்டி : 50985.70
சென்செக்ஸ் : 81053.19

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5472
22 K தங்கம்/ g. : ₹ 6680
24 K தங்கம்/g   : ₹ 7287
    வெள்ளி    /g   : ₹ 92

✍️ *நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உட்பட கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமை தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

✍️ *அரசு பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்*

சென்னை:சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத ஓதுக்கீட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது.

✍️ *கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்*

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார்; கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

✍️ *120 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை*

சென்னை:ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் 120 மாணவர்களுக்கு, மாதந்தோறும், 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

✍️ *பள்ளி மாணவர்கள் ஹாங்காங் பயணம்*

இந்தாண்டுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோரில், 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மற்றும் ஒரு அலுவலர் என, 22 பேர் நேற்று ஹாங்காங்கிற்கு கல்வி சுற்றுலா அனுப்பப்பட்டனர்.

✍️ *அக்., 31க்குள் பட்டமளிப்பு விழா கவர்னர் அறிவுரை*

சென்னை:பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ்கள் வழங்கும்படி, கவர்னர் ரவி அறிவுறுத்தி உள்ளார்.

✍️ *தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு*

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 6,680 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, 53,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

✍️ *கவர்னரை சந்தித்தார் தலைமை செயலர்*

சென்னை:புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றுள்ள முருகானந்தம், கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடனிருந்தார். சிறப்பாக பணியாற்ற, முருகானந்தத்திற்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.

✍️ '*தனியார் பங்களிப்பால் 10 ஆண்டில் விண்வெளி துறையில் நல்ல வளர்ச்சி!'*

சென்னை:''முந்தைய காலங்களில் விண்வெளியை சிலருக்கு மட்டுமே சொந்தமானதாகக் கருதினர். இன்று அப்படியில்லை. விண்வெளி துறையானது தனியார் பங்களிப்பால், 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது,'' என, கவர்னர் ரவி பேசினார்.

✍️ *விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்*

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

✍️ *பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பு முயற்சி - பெண் செவிலியர் கைது*

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் செவிலியரை போலீசார் கைது செய்தனர்.

✍️ *இன்று அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்*

✍️ *வார்சாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி*

✍️ *தமிழக வெற்றிக் கழக கொடி மங்களகரமாக உள்ளது - தமிழிசை*

✍️ *வாட்ஸ்அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்*

ஆங்கிலம், குரல் பதிவாக அனுப்பபடும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளது. இந்திய பயனர்களுக்காக, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✍️ *காசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயா்வு*

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

✍️ *தேசிய அறிவியல் விருதுகள் வழங்கினார் முர்மு தமிழகத்தின் பத்மநாபனுக்கு 'விஞ்ஞான் ரத்னா'*

புதுடில்லி, :தமிழகத்தைச் சேர்ந்த பிரபல உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு, நாட்டின் உயரிய அறிவியல் விருதான 'விஞ்ஞான் ரத்னா' விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.

✍️ *கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் டாக்டர்கள் போராட்டம் வாபஸ்: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பணிக்கு திரும்பினர்*

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களை வாபஸ் பெற்று டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.

✍️ *வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கழிவறையில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு*

சுமார் 7.30 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்ட விமானத்தின் பைலட், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எழுதப்பட்ட ஒரு துண்டு பேப்பர் கழிப்பறையில் கிடப்பதாக கூறியுள்ளார்.உடனடியாக விமானத்தை தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பைலட்டிடம் கூறினர். தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டனர். அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பின்னர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

✍️ *அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து*

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் போது சுவாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் வருவார்கள். எனவே, அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பல ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

✍️ *உதவி தோட்டக்கலை அலுவலர் பணி 158 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் வழங்கினார்*

✍️ *குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடக்கிறது*

✍️ *சென்னை எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்*

✍️ *மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சென்னை டு மெட்ராஸ் புகைப்பட ஓவிய நூல்: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்*

✍️ *கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி காலப்பேழை புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்*

✍️ *நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது: அமைச்சர் உதயநிதி பேசினார்*

✍️ *பழனியில் நாளை தொடங்க உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு அனுமதி இலவசம்*

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை (ஆக. 24) மற்றும் நாளை மறுதினம் (ஆக. 25) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

✍️ *விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை*

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது.

✍️ *மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு வரவு-செலவு வித்தியாச தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு*

சென்னை: உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

✍️ *மோசடியை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்: இணையதளம் மூலம் பட்டா வரைபடம் பெற இனி செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.- தமிழக அரசு அறிவிப்பு*

✍️ *ரேஷன் கடைகளில் விரைவில் ஆவின் பொருட்கள் கிடைக்கும் தீபாவளிக்கு விதவிதமான இனிப்பு வகைகளை விற்பனை செய்ய திட்டம்*

✍️ *போலியாக என் சி சி முகாம் நடத்தி இன்னொரு பள்ளியிலும் மாணவியை பலாத்காரம் செய்த சிவராமன் மீண்டும் போக்சோ வழக்கு பாய்ந்தது*

✍️ *அமெரிக்காவில் பிரமாண்ட 90 அடி உயர அனுமன் வெண்கல சிலை திறப்பு*

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல அனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 'ஒன்றிணைப்பு சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தசிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான அனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை ஆகும்.

✍️ *இந்தியா - போலந்து இடையே ஐந்தாண்டு செயல் திட்டம்*

ராணுவம், வர்த்தகம், வேளாண் தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் எனப்படும் மாசில்லா தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள், மருந்து தயாரிப்பு, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இதற்காக, 2024 - 2028 வரையிலான ஐந்தாண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது.

✍️ *துரந்த் கோப்பை காலிறுதி மோகன் பகான் -பஞ்சாப் பலப்பரீட்சை: பெங்களூர், கேரளா மோதல்*

✍️ *இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments