🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 24/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
✍️ *ஆகஸ்ட்*- 24
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24823.15
பேங்க் நிப்டி : 50933.45
சென்செக்ஸ் : 81086.21
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5455
22 K தங்கம்/ g. : ₹ 6659
24 K தங்கம்/g : ₹ 7264
வெள்ளி /g : ₹ 91.60
✍️ *மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு கணவர் வசிக்கும் மாவட்டத்தில் பணிமாறுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
சென்னை: பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
✍️ *பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்*
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
✍️ *கவர்னர் ஆா்.என்.ரவி இன்று டெல்லி பயணம்*
இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆா். என்.ரவி டெல்லி செல்கிறார்.
✍️ *உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி*
உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது.
என கூறினார்.
✍️ *பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: அமெரிக்கா கருத்து*
மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம்.
✍️ *பள்ளியில் மாணவர்கள் மோதல்; ஒருவர் பலி*
நாமக்கல்: பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பலாத்கார வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி திடீர் சாவு: சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை*
சேலம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
✍️ *டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை கால தாமதமின்றி உடனடியாக வெளியிட நடவடிக்கை: புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கே.பிரபாகர் உறுதி*
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடத்தவும், தேர்வு முடிவுகளை கால தாமதமின்றி உடனடியாக வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
✍️ *இன்ஜினியரிங் 2வது சுற்று கலந்தாய்வு நிறைவு: 39% இடங்கள் நிரம்பின*
இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் தற்போது 71 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 2 சுற்றுகள் முடிவில், மொத்த இடங்களில் 39 % இடங்கள் நிரம்பி உள்ளன.
✍️ *காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் 20 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்*
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 20 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
✍️ *மூடிக்கிடந்த தொழிற்சாலையில் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: போலீசார் விசாரணை*
அம்பத்தூர்: அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மூடிக்கிடந்த தனியார் தொழிற்சாலைக்குள் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
✍️ *பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு*
தண்டல்கழனி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் செல்லும் போது, திடீரென பேருந்து முன் பக்கத்தில் தீப்பற்றியது. இதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தில் வந்த அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினார்கள்.இதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
✍️ *பைனான்ஸ் தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை: தேனி அருகே சோகம்*
தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து ரகசிய பயிற்சி: 6 பேரிடம் விசாரணை*
சென்னை: ரகசிய பயிற்சி மையம் நடத்தி, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, கெமிக்கல் இன்ஜினியர் உட்பட ஆறு பேரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
✍️ *இந்தியா - அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின*
வாஷிங்டன் :ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவத் துறையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.
✍️ *பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது*
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புதிய திராவிட கழகம் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
✍️ *திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது*
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
✍️ *ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: அருவிகளில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி*
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 37 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
✍️ *முதல் டி20 போட்டி; பூரன் அதிரடி ஆட்டம்... தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்*
✍️ *பார்முலா4 கார்பந்தயம் இன்று தொடக்கம்*
✍️ *இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்