🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 25/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
✍️ *ஆகஸ்ட்*- 25
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5478
22 K தங்கம்/ g. : ₹ 6695
24 K தங்கம்/g : ₹ 7304
வெள்ளி /g : ₹ 93
✍️ *பழனியில் இரண்டு நாள் நிகழ்ச்சி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது: காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்*
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
✍️ *மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு*
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித் துள்ளது.
✍️ *புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வினியோகம்*
சென்னை: 'ரேஷன் கார்டு வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் புதிய கார்டு விரைந்து வழங்கப்படும்' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
✍️ *திரும்பி வந்தது 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கை*
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில், சில மாறுதல்கள் செய்து தரக்கோரி, மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
✍️ *இன்று மஹாராஷ்டிரா, ராஜஸ்தானில் லட்சாதிபதி சகோதரி திட்டம்: மோடி பங்கேற்பு*
மும்பை: லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட இன்று மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் வருகை தர உள்ளார் பிரதமர் மோடி.
✍️ *ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதி*
ஜெய்ப்பூர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை ராஜஸ்தான் அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
✍️ *குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி*
மயிலாடுதுறை: குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
✍️ *வெடி விபத்து பலி 2 ஆக உயர்வு*
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிப்பு கூடம் நேற்று மதியம் திடீரென வெடித்து சிதறியது.
✍️ *எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு*
விழாவுக்கு வந்து, என்னை ஊக்கப்படுத்தும் வகையில், ரஜினி கூறிய அறிவுரையை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
✍️ *மறுபயன்பாட்டுக்கு உதவும் தொழில்நுட்பத்தின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'மிஷன் ரூமி'*
சென்னை:சென்னையைச் சேர்ந்த, 'ஸ்பேஸ் சோன் இந்தியா' நிறுவனம் உருவாக்கிய, மீண்டும் பயன்படும் ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுவே, இந்தியாவின் முதலாவது மீண்டும் பயன்படும் ராக்கெட்.
✍️ *1,000 டன் எடையில் பிரமாண்ட 'சூர்யா' ராக்கெட் வடிவமைக்கும் பணியை துவங்கியது 'இஸ்ரோ'*
சென்னை:முப்பதாயிரம் கிலோ எடை உள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், 93 மீட்டர் உயரத்தில், 1,000 டன் எடை உடைய பிரமாண்ட ராக்கெட் வடிவமைக்கும் பணியை 'இஸ்ரோ' துவக்கியுள்ளது.
✍️ *கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 451 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு*
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக எவ்வித நிபந்தனையுமின்றி 451 நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
✍️ *குடியிருப்பில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வனக்காவலர் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம்*
கம்பம்: குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை தாக்கி வனக்காவலர் படுகாயம் அடைந்தார்.
✍️ *15வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வரும் 27ம் தேதி பேச்சுவார்த்தை*
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
✍️ *மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம்-வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்*
மக்கள் செல்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனராக எஸ்.ஆனந்த் நியமனம்: தமிழக அரசு உத்தரவு*
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனராக எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
✍️ *தீவுத்திடலில் ஆக.31, செப்.1ம் தேதி போக்குவரத்துக்கு இடையூறின்றி பார்முலா-4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்*
சென்னை: தீவுத்திடலில் வரும் 31ம், செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
✍️ *தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டி முன்பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு*
அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 2.9.2024 தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
✍️ *கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழப்பு!*
கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
✍️ *நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது*
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானப்படை விமானம் மூலமாக மகாராஷ்டிராவுக்கு கொண்டு வரப்பட்டது.
✍️ *மும்பை டூ ஐதராபாத் சென்றபோது தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 4 பேர் தப்பினர்*
மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் புனேவுக்கு அருகே வந்தபோது தீடிரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த கேப்டன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 பேர் உயிர் பிழைத்தனர்.
✍️ *எங்கள் செயல் திட்டங்களை ஏற்றுக்கொண்டால் காங்.-தேசிய மாநாட்டு கூட்டணிக்கு ஆதரவு: மெகபூபா முப்தி அறிவிப்பு*
ஸ்ரீநகர்: பிடிபி கட்சியின் செயல் திட்டங்களை ஏற்க தயார் என்றால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அனைத்து தொகுதிகளையும் விட்டு கொடுக்க தயார் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
✍️ *தென் ஆப்ரிக்காவுடன் முதல் டி20 பூரன் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி*
✍️ *மெக்சிகோவில் நடைபெறும் மான்டெர்ரி ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் பைனலில் விளையாட நியூசிலாந்து வீராங்கனை லூலு சுன் தகுதி பெற்றார்*
✍️ *இந்திய அணி நட்சத்திர வீரர் ஷிகர் தவான், சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*