26/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 26/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

✍️ *ஆகஸ்ட்*- 26
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5477
22 K தங்கம்/ g. : ₹ 6694
24 K தங்கம்/g   : ₹ 7303
    வெள்ளி    /g   : ₹ 92.90

✍️ *லெபனான் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்*

ஜெருசலேம்: லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் நடந்த இந்த முழு வீச்சிலான தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

✍️ *லெபனான் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பதிலடி இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை வீச்சு: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்*

ஜெருசலேம்: லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் நடந்த இந்த முழு வீச்சிலான தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

✍️ *ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 7 கார்கள், 3 லாரிகள், பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து: ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்*

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை 4 மணி அளவில், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி மற்றொரு லாரி மீது ேமாதியது. அது மற்றொரு லாரி மீது மோதியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், கார்கள் மற்றும் அரசு பஸ் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கின.

✍️ *சென்னையில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான விதிமுறைகள்: மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டது*

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.

✍️ *முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து*

கலைஞரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள, அழைப்பு வந்தபோது, பல்வேறு பணிகளால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், முதல்வரை சந்தித்து கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.அத்துடன் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தையும், முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பயணத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

✍️ *பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை*

வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

✍️ *சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா*

தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். விஜயகாந்த் வாழ்வதற்காக ஆசையாக கட்டப்பட்ட இல்லம் வெகு விரைவில் திறக்கப்படும்.

✍️ *மெரினா, பெசன்ட்நகரில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்கி வைத்தார்*

அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனம் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சத்தில் 3 ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

✍️ *செப்.1ம் தேதி முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்*

சென்னை: தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✍️ *ஜீரோ இஸ் குட்’ விழிப்புணர்வு போட்டி சிறந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் படைப்பாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் பரிசுகள்*

சென்னை: ‘ஜீரோ இஸ் குட்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 3 படைப்பாளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நேற்று வழங்கினார்,

✍️ *சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்: புலம் பெயர்ந்த தமிழர்களையும் சந்திக்கிறார்*

தகவல்சென்னை: தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

✍️ *தனிநபர் மின்சார பயன்பாடு 1,792 யூனிட்டுகளாக அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்*

சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

✍️ *வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்: 2 பேர் கைது*

சென்னை: வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ஸ்அப் குழு மூலம் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

✍️ *காவிரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி*

நண்பர்களான இருவரும் நேற்று காலை காவிரி ஆற்று படித்துறையில் குளித்து கொண்டிருந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென இருவரும் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி தேடினர். புஷ்யமண்ட படித்துறை எதிரே காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

✍️ *திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் பரபரப்பு; பெண் டாக்டர் தலைமுடியை பிடித்து தாக்கிய நோயாளி*

திருமலை: திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் தலைமுடியை பிடித்து இழுத்து நோயாளி தாக்கியதை கண்டித்து, மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

✍️ *நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க ஐஜி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு*

நடிகைகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க ஒரு ஐஜி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை கேரள அரசு அதிரடியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

✍️ '*முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி': சேகர் பாபு பெருமிதம்*

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ''என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

✍️ *நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,772 கோடி ஒதுக்கீடு: 12 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு*

சென்னை: கட்டுமான திட்ட அனுமதியின் போது வசூலான, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டுக்கான நிதி, 6,772 கோடி ரூபாய், 12 துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

✍️ *கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்*

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

✍️ *கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்*

உ.பி.,யின் பிஜ்னோர் அருகே சக்ராஜ்மால் பகுதியில் நேற்று அதிகாலை ரயில் சென்றது.

அப்போது ரயிலின் 10 பெட்டிகள் தனியாக கழன்று சிறிது துாரம் ஓடி நின்றன. இதனால் பயணியர் பீதியடைந்தனர்.அந்த பெட்டிகளில் இருந்த பயணியர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

✍️ *2வது டி20; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி*

✍️ *முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறதது.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments