27/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 27/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

✍️ *ஆகஸ்ட்*- 27
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25010.60
பேங்க் நிப்டி : 51148.10
சென்செக்ஸ் : 81698.11

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5478
22 K தங்கம்/ g. : ₹ 6695
24 K தங்கம்/g   : ₹ 7304
    வெள்ளி    /g   : ₹ 92.90

✍️ *தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்*

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு தொழில் முதலீட்டாளர்கள், உலகின் முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளையும் முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.

✍️ *ரவுடியுடன் அமர்ந்து டீ குடித்த போட்டோ வெளியானது சிறையில் நடிகருக்கு சலுகை வழங்கிய 9 அதிகாரிகள் சஸ்பெண்ட்*

நடிகர் தர்ஷன் சிறை வளாகத்தில் உள்ள புல் தரையில் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்தபடி, சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானது. அவருக்கு அருகே ரவுடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளராக இருந்த நாகராஜ் ஆகியோரும் அவருடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில் 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

✍️ *கடும் நெருக்கடியில் மலையாள சினிமா நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக குவியும் பலாத்கார புகார்கள்: நடிகர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு*

திருவனந்தபுரம்: நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்களால் மலையாள சினிமா துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

✍️ *17 சுங்கச்சாவடிகளில் செப்., 1 முதல் கட்டண உயர்வு*

சென்னை: தமிழகத்தில் 17 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது.

✍️ *4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த கேரள நடிகை*

கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

✍️ *கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்*

கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

✍️ *ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு*

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

✍️ *நாய் மீது காரை ஏற்றியதை தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு அடி உதை*

வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அவ்வழியாக சென்ற கார் ஒன்று, தெருவில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.
இம்தியாஸ், கார் ஓட்டுநரிடம், வண்டியை பார்த்து ஓட்டிச் செல்லக்கூடாதா என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், இம்தியாஸை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

✍️ *கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி*

அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, 14 நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் நேற்று நீக்கினர். தடை நீக்கப்பட்டதால், கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியை சுற்றி பார்க்கவும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

✍️ *விநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்*

விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

✍️ *பாகிஸ்தான்: பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே மோதல்: 35 பேர் பலி*

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

✍️ *100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள்... உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்*

ரஷியாவின் நள்ளிரவு தாக்குதல் மற்றும் அதிகாலையிலும் தொடர்ந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

✍️ *வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.115 கோடியில் 6 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; ரூ.5.22 கோடியில் முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார்*

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.22 கோடி செலவில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

✍️ *சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் தங்கம், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு மோப்ப நாய் ஸ்குவாட்: ஏஐயூ அதிகாரியும் கூடுதலாக நியமனம்*

பூந்தமல்லி: சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் தங்கம், போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த ஏஐயூ எனப்படும் ஏர் இன்டெலிஜென்ட் யூனிட் அதிகாரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் ஸ்குவாஸ்ட் அதிக அளவில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

✍️ *ஆந்திராவில் பிஎஸ்சி, சென்னையில் எம்எஸ்சி முடித்த பெண்ணை அரசு பணிக்கு தகுதியானவராக கருத வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு*

சென்னை: ஆந்திராவில் பிஎஸ்சி படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடித்த பெண்ணை அரசு பணிக்கான தகுதியுள்ளவராக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

✍️ *துரைமுருகனுடன் நட்பு எப்போதும் தொடரும்: – ரஜினி*

மதிப்புக்குரிய துரைமுருகன், எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நமது நட்பு எப்போதுமே தொடரும் என்றார்.

✍️ *நகைசுவையை பகை சுவையாக மாற்றவேண்டாம் துரைமுருகன் பேட்டி*

காட்பாடியில் நேற்று அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எங்களது நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்’’ என்றார்.

✍️ *ரூ.1,535 கோடி ஒதுக்கீட்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: போக்குவரத்து துறை தகவல்*

2022-23ம் நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மீதமுள்ள 167 பேருந்துகள் நவ. 2024-க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

✍️ *லடாக்கில் 5 மாவட்டங்கள் உதயம்*

லடாக்கில் மேலும் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பாரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

✍️ *20 ஆண்டுகளாக சந்தித்த திருமணம் பற்றிய கேள்வியை இப்போது கடந்துவிட்டேன்: காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் கலகல உரையாடல்*

புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக சந்தித்து வந்த எப்போது திருமணம் என்ற கேள்வியை இப்போது நான் கடந்துவிட்டேன் என்று காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல்காந்தி தெரிவித்தார்.

✍️ *20 ஆண்டுகளாக சந்தித்த திருமணம் பற்றிய கேள்வியை இப்போது கடந்துவிட்டேன்: காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல் கலகல உரையாடல்*

புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக சந்தித்து வந்த எப்போது திருமணம் என்ற கேள்வியை இப்போது நான் கடந்துவிட்டேன் என்று காஷ்மீர் மாணவிகளிடம் ராகுல்காந்தி தெரிவித்தார்.

✍️ *மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்துக் கொலை: சகோதரர்கள் கைது*

திருவாரூர்: மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

✍️ *மேற்படிப்பு சீட் வாங்கித் தருவதாக பெண் டாக்டரிடம் ரூ.20 லட்சம் மோசடி; பேராசிரியை கைது: மற்றொரு டாக்டர் – தந்தைக்கு வலை*

நாகர்கோவில்: பெண் டாக்டருக்கு மருத்துவ மேற்படிப்பு சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு டாக்டர், அவரது தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

✍️ *கோவை வந்த சார்ஜா விமானத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்*

மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 1 கிலோ 399 கிராம் எடையிலான 12 தங்கக்கட்டிகள் இருந்தன. இவற்றின் தோராய மதிப்பு ரூ.1.02 கோடி. போலீசாரின் சோதனைக்கு பயந்து தங்கத்தை கடத்தி வந்த பயணி விமானத்திலேயே பார்சல் செய்து போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

✍️ *குடியிருப்பு பகுதியில் எறி வெடிகுண்டுகள் சகோதரர்கள் கைது*

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் – செந்துறை சாலை, கலைநகர் குடியிருப்பு பகுதி சாலையோர முட்புதருக்குள் சணலால் சுற்றப்பட்ட நிலையில் எறி வெடிகுண்டுகள் சிதறி கிடந்தன. தகவலறிந்து நத்தம் போலீசார் சென்று அங்கு கிடந்த 30 எறி வெடிகுண்டுகளை சேகரித்தனர். தடயவியல் அறிவியல் நிபுணர் சோதனை செய்தபோது, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு ரக எறி வெடிகுண்டு வகையை சேர்ந்தது என்பது தெரிந்தது.

✍️ *காதலியுடன் போதையில் உலா போலீஸ்காரை தள்ளிவிட்டு தப்பியோடிய ரவுடி கைது*

பைக்கில் வந்த ஒரு ஜோடி, சிக்னலில் நிற்காமல் வேகமாக சென்றபோது, எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க திரும்ப முயன்றதால், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.இதை பார்த்த போலீஸ்காரர் ஹரிஹரசுதன் அங்கு சென்று, கீழே விழுந்தவர்களை தூக்கிவிட்டு உதவி செய்தார். அப்போது, போதையில் இருந்த வாலிபர், போலீஸ்காரரின் ரிப்லெக்ட் ஜாக்கெட்டை பிடித்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபருடன் வந்த 19 வயது இளம்பெண்ணை, காசிமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

✍️ *வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்*

மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பேராலயம் சார்பிலும் போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான சாலை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

✍️ *இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 11வது சீசன் செப்.13ல் தொடங்குகிறது*

✍️ *தென் ஆப்ரிக்காவுடன் நடந்த 2வது டி20 போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments