28/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 28/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

✍️ *ஆகஸ்ட்*- 28
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25017.75
பேங்க் நிப்டி : 51278.75
சென்செக்ஸ் : 81711.76

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5476
22 K தங்கம்/ g. : ₹ 6693
24 K தங்கம்/g   : ₹ 7303
    வெள்ளி    /g   : ₹ 93.60

✍️ *முதலீடுகளை ஈர்க்க 19 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்: உலகின் முன்னணி தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்*

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 19 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.17 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்கிறார். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன் என்று முதல்வர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

✍️ *சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் பேட்டி; 1 டிரில்லியன் டாலர் இலக்கை 2030க்குள் அடைவோம்*

அரசுப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்து விட்டு, வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடைய பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. மூன்றாண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி இதன் மூலமாக, 18 லட்சத்து 89 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நம்முடைய இலக்கு விரைவாக எட்டப்படும்.

✍️ *குவியும் பலாத்கார புகார்கள் எதிரொலி மலையாள நடிகர்கள் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா: நிர்வாகிகள் கூண்டோடு பதவி விலகியதால் பரபரப்பு*

திருவனந்தபுரம்: நடிகர்கள் மீது நாளுக்கு நாள் பலாத்கார புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

✍️ *தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தர வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்*

சென்னை: தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

✍️ *தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி நேரில் ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு*

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

✍️ *பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் விழுந்து 3 மாணவர்கள் காயம்*

ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலை பள்ளி துவங்கும் முன்பே வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வகுப்பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மூவரும் காயமடைந்தனர்.

✍️ *இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்களை பறித்த கடற்கொள்ளையர்கள்*

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். நாகை மீனவர்களை கடற்கொள்ளையர் தாக்கி ரூ.4 லட்சம் பொருட்களை பறித்து சென்றனர்.

✍️ *மணல் குவாரி தொடர்பான வழக்கு; தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு : வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்*

புதுடெல்லி: மணல் குவாரி தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கத்தை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

✍️ *பெண் டாக்டர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகைகுண்டு வீச்சு*

கொல்கத்தா: பெண் டாக்டர் கொலை விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி கொல்கத்தாவில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற மாணவர் அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

✍️ *தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான ரூ.573 கோடியை நிறுத்திவைத்தது மத்தியஅரசு*

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்
கீழ் தமிழகத்திற்கான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

✍️ *எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வு: 30ம் தேதி வரை நடக்கிறது*

✍️ *தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது: துரை வைகோ கண்டனம்*

✍️ *போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு சென்னை நகர பாதுகாப்புக்கு 3 அம்ச திட்டம்: கமிஷனர் அருண் அறிவிப்பு*

✍️ *நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது எடப்பாடி மீதான கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்*- *அண்ணாமலை பேட்டி*

✍️ *டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்*

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரான கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தனி நீதிபதியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

✍️ *என்எஸ்ஜிக்கு புதிய இயக்குநர் நியமனம்*

என்எஸ்ஜியின் புதிய இயக்குநராக 1992 பேட்ச் பீகார் கேடர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீனிவாசனை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, என்எஸ்ஜி தலைவராக சீனிவாசன் பதவியேற்க உள்ளார்.

✍️ *ஆவடி மாநகராட்சியில் இதுவரை 10 பேர் பாதிப்பு டெங்கு உற்பத்தி கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை*

ஆவடி: ஆவடி மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில், மேயர் ஜி. உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஆவடி சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் மழைநீர் வடிகாலை ஆழமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், பொத்தூர், ஆரிக்கம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் திருமுல்லைவாயில், குளக்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே, குளக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும், பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள், நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், மாநகராட்சியில் புதிதாக தெரு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்றனர். இந்த கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி அளித்த பேட்டியில் கூறுகையில், ஆவடி மாநகராட்சியில், 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு செய்த பிறகு கொசு புழுக்கள் உற்பத்தியானால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கு முன், வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

✍️ *பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னரில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா பறிமுதல்: டிரைவர் கைது, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரம்*

பூந்தமல்லி: கர்நாடக மாநிலத்திலிருந்து கன்டெய்னர் லாரியில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

✍️ *பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது கடற்கரை – எழும்பூர் 4வது பாதையில் அக்டோபரில் ரயில்கள் இயக்கப்படும்: சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்*

சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து, வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

✍️ *பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது கடற்கரை – எழும்பூர் 4வது பாதையில் அக்டோபரில் ரயில்கள் இயக்கப்படும்: சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்*

சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து, வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

✍️ *திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1100 வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி திறப்பு*

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்த வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), நேற்று திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் சதீஷ் பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

✍️ *தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கீடு*

நடப்பாண்டு இத்திட்டத்திற்கு, 5,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள 27 மாவட்டங்களில், சாலைகளை அகலப்படுத்துதல், புதுப்பித்தல், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

✍️ *கொடியில் யானை சின்னம்: விஜய் மீது பகுஜன் புகார்*

'விஜய் தன் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்றாவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்' என, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

✍️ *பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது*

சென்னை : பாஸ்போர்ட் சேவை இணையதளம், நாளை இரவு முதல் செப்டம்பர் 2 வரை இயங்காது என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

✍️ *சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி*

சென்னை : சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார்.

✍️ *18 மாநில தலைமை செயலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்*

புதுடில்லி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஊதியம் குறித்து இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து, தமிழகம் உட்பட, 18 மாநிலங்களின் தலைமை செயலர்கள் மற்றும் நிதித்துறை செயலர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

✍️ *சென்னை, மதுரை, கோவையில் சிறப்பு வார்டு; 200 டாக்டர் ரெடி*

சென்னை : ''சென்னை ராஜிவ் காந்தி, கோவை, மதுரை, திருச்சி அரசு மருத்துவமனைகளில், குரங்கம்மை பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

✍️ *சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து*

✍️ *ஊதிய பேச்சுவார்த்தையில் காலதாமதம்: துறைமுக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்*

✍️ *ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்*

✍️ *சென்னை சென்டிரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments