🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 30/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
✍️ *ஆகஸ்ட்*- 30
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25151.95
பேங்க் நிப்டி : 51152.75
சென்செக்ஸ் : 82134.61
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5499
22 K தங்கம்/ g. : ₹ 6714
24 K தங்கம்/g : ₹ 7324
வெள்ளி /g : ₹ 93.40
✍️ *பார்முலா 4 ரேசிங் போட்டியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை நடவடிக்கை*
பார்முலா 4 ரேசிங் போட்டியை முன்னிட்டு அண்ணாசாலை, காமராஜர் சாலையில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
✍️ *ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை*
ஆவடி மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.
✍️ *விநாயகர் சதுர்த்திக்கு எந்தெந்த நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி..? வழிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் தகவல்*
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
✍️ *கூரியர் நிறுவன ஊழியர் போரூர் ஏரியில் பிணமாக மீட்பு தற்கொலையா? போலீசார் தொடர்ந்து விசாரணை*
பூந்தமல்லி: காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
✍️ *கடைக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு 4 பேர் சிறையில் அடைப்பு*
கும்மிடிப்பூண்டி அருகே கடைக்குள் புகுந்து வாலிபரை வெட்டிய வழக்கில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
✍️ *ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது நடவடிக்கை கோரி அதிமுக சார்பில் புகார்*
ஆவடி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செய்லாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
✍️ *படம் தயாரிக்க பணம் பெற்ற விவகாரம் கடனை 18% வட்டியுடன் விமல் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*
சென்னை: பட தயாரிப்புக்காக பெற்ற 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *திருவேற்காடு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு*
திருவேற்காடு நகர திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டத்தில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று அறிவுரை வழங்கினார். திருவேற்காடு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளரும், நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.
✍️ *பிஎட் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கம்*
சென்னை: பி.எட். செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
✍️ *தமிழகத்தில மழை நீடிக்கும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது*
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்பும் உள்ளது. இது தவிர, 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
✍️ *இன்றும், நாளையும் 1,105 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்*
சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,105 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
✍️ *பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு*
சென்னை: பொங்கல் பண்டிகையை யொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
✍️ *புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிக பயணம்: மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்*
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
✍️ *வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு*
நாகப்பட்டினம்: விண்ணை முட்டிய ‘மரியே வாழ்க கோஷத்துடன்’ வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
✍️ *விதிகளை கடைப்பிடிக்க நீதிபதிகள் அறிவுறுத்தல் சென்னையில் நாளை பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதி*
சென்னையில் நாளை பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *இ-சேவை மையங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்த தற்காலிக தரவு உள்ளீட்டாளர்கள் மாற்றம்*
பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்க ஏதுவாக, சென்னை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் 44 அரசு இ-சேவை மையங்களைச் சார்ந்த தற்காலிக தரவு உள்ளீட்டாளர்களை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
✍️ *தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு*
தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சிக்கு, வரும் 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
✍️ *ரூ.175 கோடி பண மோசடி: எஸ்.பி.ஐ., மேலாளர் கைது*
ஹைதராபாதில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில், 175 கோடி ரூபாய் பண மோசடி நடந்த வழக்கில், வங்கி மேலாளர் மற்றும் அவரது கூட்டாளியான உடற்பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
✍️ *சீரடிக்கு விமான சேவை மீண்டும் துவக்கம்*
சென்னை - சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.
சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:30 மணிக்கு சீரடிக்கு வந்தடையும். சீரடியில் இருந்து மாலை 5:00 மணிக்குபுறப்படும் விமானம், இரவு 7:00 மணிக்கு சென்னை வந்தடையும்என, அந்நிறுவனம்தெரிவித்துள்ளது.
✍️ *கொள்ளையரை பிடித்த தனிப்படைக்கு பாராட்டு*
ஆந்திர மாநிலம் மற்றும் விருதுநகர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
✍️ *நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்*
நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
✍️ *மும்பையில் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி*
பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
✍️ *விரைவில் பாரத டோஜோ யாத்திரை: ராகுல் காந்தி அறிவிப்பு*
விரைவில் ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’ தொடங்கும் என்று வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.பா.கரா்த்திக்*