🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 3/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
✍️ *ஆகஸ்ட்*- 03
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24717.70
பேங்க் நிப்டி : 51350.15
சென்செக்ஸ் : 80981.95
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5293
22 K தங்கம்/ g. : ₹ 6461
24 K தங்கம்/g : ₹ 7048
வெள்ளி /g : ₹ 90.90
✍️* *சென்னை,அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை*
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட ஆம்பிட் கம்பெனிக்கு எதிரே உள்ள கம்பேனி ரோட்டில் ஓரமாக இருக்கும் நடைபாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்து இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் ஏற்படுத்தி வைத்திருக்கிறது
இந்த ஆக்கிரமிப்பு இடத்திலேயே அந்த கப்பேனி கழிநீரையும் விடுகிறது என்று கூறுகிறார்கள் அப்பகுதியில் பணிபுரியும் பொதுமக்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தால் அங்கு பணிபுரியும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்
ஒரு தனிப்பட்ட கம்பெனி இப்படி ஆக்கிரமிப்பு செய்து கழிவு நீர் விடுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதுமாக இருந்து வருகிறது அந்த இடத்தில் மக்களுக்கு பயனுள்ளவாறு பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்
அப்பகுதியில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துக்காக ரோட்டிலேயே நிற்கும் அவலநிலையில் இருக்கிறது இதனால் மாலை நேரத்தில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது
அந்த வழியாகத்தான் மாதவரத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ்க்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆம்பிட் கப்பேனி அருகே தான் நின்று செல்கிறது ஆனால் பேருந்து நிலையம் இல்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.
✍️ *வரும் செப்டம்பர் 3 முதல் சென்னை-டாக்காவுக்கு நேரடி விமான சேவை: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது*
சென்னை: சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவையை வரும் செப்டம்பர் 3ம் தேதியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது. இந்த விமானம் திங்கள்கிழமை தவிர, வாரத்தின் மற்ற ஆறு நாட்களில், செவ்வாய்க்கிழமையில் இருந்து ஞாயிறு வரையில் தினமும் இயக்கப்படுகிறது. சென்னையில் இரவு 7 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது.
✍️ *கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து வசதி: மேலாண் இயக்குநர் தகவல்*
குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் செய்ய ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி www.tnstc.in மற்றும் 9445014402, 9445014424, 9445014463 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
✍️ *வருகிற 21ம் தேதி நெட் மறுதேர்வு: என்.டி.ஏ அறிவிப்பு*
வருகிற 21ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதி வரை கணினி வாயிலாக 83 பாடங்களுக்கு நடத்தப்பட உள்ளதாக மறுதேர்வு குறித்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு குறித்த விவரங்களை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். தேர்வு மையம், ஹால்டிக்கெட் வெளியீடு போன்ற கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ எனும் வலைத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
✍️ *இலங்கை கடற்படையை கண்டித்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மீட்கப்பட்ட மீனவர்கள், இறந்தவரின் உடல் இன்று ஒப்படைப்பு?*
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
✍️ *நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 2வது நாளாக குறுக்கு விசாரணை: செப்.9ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு*
விஷாலிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், மொத்தம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கு சாட்சி கூண்டில் நின்றவாறு சுமார் இரண்டரை நேரம் விஷால் பதிலளித்துள்ளார். குறுக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதிதள்ளிவைத்தார்.
✍️ *சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: 27ம் தேதி கடைசி நாள்*
சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கு நாளை முதல் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
✍️ *திருச்சி கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு அடித்து செல்லப்பட்ட மின் கோபுரங்கள்: தண்ணீரில் தத்தளித்த மின் ஊழியர் மீட்பு*
சாய்ந்த நிலையில் இருந்த ஸ்ரீரங்கம்-நெ.1 டோல்கேட் பகுதியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலம் அருகே ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 உயர் மின்னழுத்த ராட்சத கோபுரங்கள் அடித்து செல்லப்பட்டது. அப்போது, மின்கோபுரங்களை அகற்றும் பணியில் இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சாதிக் குல் இஸ்லாம் (25) என்ற ஒப்பந்த ஊழியர் ரோப் அறுந்து தத்தளித்தார். இதையடுத்து அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை கயிறு கட்டி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
✍️ *புதுச்சேரியில் மீண்டும் இலவச அரிசி, சர்க்கரை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000: பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு*
நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ஸ்மார்ட் பொதுவிநியோக திட்டம் மூலம் வழங்கப்படும்.
அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து இளநிலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
✍️ *காரின் மேற்கூரையை திறந்து மது அருந்தியபடி காதல் ஜோடி உலா: காதலன் கைது*
துரைப்பாக்கம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், சில தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்த காரின் மேற்கூரை திறக்கப்பட்டு, அதில், ஒரு காதல் ஜோடி நின்று கொண்டு, மது அருந்திக் கொண்டு ஜாலியாக சென்றது. இதில் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதவிட்டனர்.இது வைரலாக பரவியது. போலீசார் விசாரணையில், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சஞ்சய் (23), தனது காதலியுடன் மது அருந்தியபடி காரில் சென்றது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் சென்ற காரையும் பறிமுதல் செய்தனர்.
.
✍️ *இன்று முதல் 14ம் தேதி வரை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு*
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல், வரும் 14ம் தேதி வரை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
✍️ *காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு புதிய தேர் 277 கிலோ வெள்ளி கட்டிகள் கொண்டு தகடு வேயும் பணி தொடங்கியது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்*
✍️ *குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு சி.விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் செப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு*
✍️ *மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: முகாம்களில் உள்ள மக்களிடம் தொலைபேசியில் பேசினார்*
✍️ *பாதுகாப்பு, கண்காணிப்பு, பராமரிப்பில் அசத்தல் அயனாவரம் காவல்நிலையத்திற்கு விருது*
✍️ *கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறி, பூக்கள் விலை உயர்வு: கேரட் கிலோ ரூ.150க்கு விற்பனை*
✍️ *வயநாடு நிலச்சரிவில் 340 பேர் பலி; 275 பேரை காணவில்லை நவீன கருவிகளுடன் தேடும் பணி தீவிரம்: 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு*
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி விட்டது. 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. நவீன ரேடார்கள், லேசர் கருவிகள், டிரோன்கள் உதவியோடு காணாமல் போன 275 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. அவர்களை மீட்ட இந்திய ராணுவத்திற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
✍️ *கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை*
கோவையில் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
✍️ *கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள்*
✍️ *கஞ்சா விற்க சம்மதிக்காததால் மெக்கானிக்கை கொன்று ஏரியில் சடலம் வீச்சு: 5 பேர் கைது*
✍️ *ரேபிடோ புக் செய்து கஞ்சா விற்றவர் கைது*
✍️ *தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.90,041 கோடியாக அதிகரிப்பு: இயக்குநர் சிரஞ்சீவிராஜ் தகவல்*
✍️ *தங்கம் விலை 3 நாட்களில் சவரன் ரூ.600 வரை உயர்ந்தது*
✍️ *52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அசத்தல்*
பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில், 52 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது.
✍️ *முதல் ஒருநாள் போட்டி இந்தியா – இலங்கை ‘டை’*
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது.
✍️ *ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் – 2024: பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சென்*
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்திய வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றார். பரபரப்பான காலிறுதியில் தைபே வீரர் சோவ் டியன் சென்னுடன் நேற்று மோதிய லக்ஷயா 19-21 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி தோற்று பின்தங்கினார். பின்னர் அதிரடியாக விளையாடி தைபே வீரரை திணறடித்த சென் 21-15, 21-12 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*