🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 4/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
✍️ *ஆகஸ்ட்*- 04
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5284
22 K தங்கம்/ g. : ₹ 6450
24 K தங்கம்/g : ₹ 7036
வெள்ளி /g : ₹ 90.90
✍️ *ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!*
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.
✍️ *ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு*
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.
✍️ *வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 357 ஆக உயர்வு- 6 வது நாளாக தொடரும் மீட்பு பணி*
இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது
✍️ *கூடுதல் படையை அனுப்பும் அமெரிக்கா... ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரிப்பு*
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
✍️ *தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு*
இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
✍️ *சொத்து தகராறு: தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்*
மூத்த மகனுடன் சேர்ந்து வீட்டை விற்க முயற்சித்து வந்த தந்தையை இளைய மகன் கொன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *மதுபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்துக்கொன்ற பெண்: மதுரையில் பரபரப்பு*
மதுரையில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை மனைவியே கல்லால் அடித்துக்கொலை செய்தார்.
✍️ *5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை... லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது*
தான் ஒரு போலீஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
✍️ *சென்னை டூ- வாலாஜா சோதனை ஓட்டம்: 110 கி.மீ., வேகத்தில் ஓடிய 'வந்தே மெட்ரோ!'*
சென்னை: சென்னை கடற்கரை --- வாலாஜா இடையே, முதல், 'வந்தே மெட்ரோ' ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. காட்பாடி வரை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தலின்படி, வாலாஜா வரை இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
✍️ *தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை 3063 ஆக உயர்வு: யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு*
2024 ஆம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.
✍️ *ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்*
வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டுரூ.30 கோடி செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
✍️ *ஆடிப் பெருக்கையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: கனகாம்பரம் கிலோரூ.1000க்கு விற்பனை*
✍️ *ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் ; காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை: புனித நீராடி புத்தாடைகள் அணிந்து கொண்டாட்டம்; புதுமண தம்பதிகள் மாங்கல்ய கயிற்றை மாற்றி வழிபாடு*
✍️ *காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி நிவாரணம் வழங்கினார்*
✍️ *பழநியில் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு கால்கோள் விழா: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்*
✍️ *விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஓட்டல்களின் ‘பார்’களை மூட உத்தரவு: உரிமம் அதிரடி ரத்து*
✍️ *இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவரின் உடல் தகனம் மீனவர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் தொடக்கம் : இந்திய எல்லைக்கே வந்து கப்பலால் மோதினர்; மீட்கப்பட்டு திரும்பிய மீனவர்கள் பரபரப்பு பேட்டி*
✍️ *இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: மீண்டும் தொடங்கியது ஹிஸ்புல்லா*
பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக்கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
✍️ *நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி*
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது
✍️ *சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்து சேவை*
சென்னை நகரில் இன்று முதல் தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளன
✍️ *வீணாக கடலில் கலக்கும் காவிரி நீர் - விவசாயிகள் கவலை*
அதிகப்படியான காவிரி நீர் கிடைத்தும் அதை சேமித்து வைக்காமல், வீணாக கடலில் கலப்பதை பார்க்கும்போது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
✍️ *தொடரில் முன்னேறப்போவது யார்? - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா- இலங்கை இன்று மோதல்*
இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது
✍️ *பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: ஆக்சல்செனை வீழ்த்துவாரா லக்சயா சென்..? - அரையிறுதியில் இன்று மோதல்*
லக்சயா சென் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.
✍️ *பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: ஆக்சல்செனை வீழ்த்துவாரா லக்சயா சென்..? - அரையிறுதியில் இன்று மோதல்*
லக்சயா சென் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
✍️ *டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை*
திண்டுக்கல் - கோவை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
*பாடி பா.கார்த்திக்*