🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 5/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 97
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
✍️ *ஆகஸ்ட்*- 05
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5283
22 K தங்கம்/ g. : ₹ 6449
24 K தங்கம்/g : ₹ 7035
வெள்ளி /g : ₹ 90.80
✍️ *மத்திய கிழக்கில் போர் பதற்றம் இஸ்ரேலை ஈரான் எந்நேரத்திலும் தாக்கும்: அமெரிக்காவின் எச்சரிக்கையால் பரபரப்பு*
காசா: இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
✍️ *தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு*
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
✍️ *சென்னை மாநகரில் ரூ.66 கோடி மதிப்பிலான 100 புதிய பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்*
சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 66.15 கோடி மதிப்பிலான 58 புதிய (பி.எஸ்-6) தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண (பி.எஸ்-6) பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
✍️ *திருச்செந்தூர் கோயிலில் அன்புமணி சிறப்பு யாகம்: துலாபாரத்தில் 780 கிலோ அரிசி வழங்கினார்*
ஆடி அமாவாசை தினமான நேற்று அதிகாலை அன்புமணி, மனைவி சவுமியா ஆகியோர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துலாபாரத்தில் எடைக்கு எடையாகவும், கூடுதலாகவும் சேர்த்து 30 மூட்டையில் 780 கிலோ அரிசியை வழங்கினர். தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் செய்து அன்புமணி வழிபட்டார்.
✍️ *கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் சென்னையில் மாற்று திறனாளிகள் 7ம் தேதி அமைதி பேரணி: மாநிலத் தலைவர் அறிவிப்பு*
சென்னை: கலைஞரின் நினைவு தினத்தையொட்டி வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் அறிவித்துள்ளது.
✍️ *நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் அறிவிப்பு: சைக்கிளில் சென்று தாயிடம் ஆசி பெற்றார்*
மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வழக்கமாக சைக்கிளில்தான் எங்கும் செல்வார். ஆலோசனை கூட்டம் நடந்த ஓட்டலுக்கும் சைக்கிளில்தான் வந்தார். கூட்டம் முடிந்ததும் தனது வீட்டிற்கு சைக்கிளிலேயே சென்று தாய் மரகதத்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
✍️ *சென்னை மண்ணடியில் வாலிபரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை*
சென்னை: சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் நவாஸ்கான் என்பவரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
✍️ *கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியில் வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை: ஆயுதங்களுடன் காரில் வந்து கும்பல் துணிகரம்*
திருச்சி: திருச்சி அருகே கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியில் வைத்திருந்த ரூ.42 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
✍️ *காவிரியில் வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றவர் கட்டையால் அடித்து கல்லூரி மாணவர் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது*
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவரை கட்டையால் அடித்து கொன்ற வழக்கில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
✍️ *சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை: குளுகுளுவென மாறியதால் மக்கள் மகிழ்ச்சி*
சென்னை: சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி எடுத்த நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், குளுமையான நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
✍️ *பண்ருட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதி அதிமுக மகளிரணி நிர்வாகி உள்பட 2 பேர் பரிதாப பலி: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர்கள்*
✍️ *பழவேற்காட்டில் பரிதாபம் பிளாஸ்டிக் பந்து தொண்டையில் சிக்கி 8 மாத குழந்தை பரிதாப பலி: போலீசார் விசாரணை*
✍️ *தூத்துக்குடி அருகே கிணற்றில் விஷவாயு தாக்கி இருவர் பலி*
✍️ *எம்பிபிஎஸ் தேர்வில் மதிப்பெண் குறைவு; புதுச்சேரி மருத்துவ மாணவர் மதுரை லாட்ஜில் தற்கொலை*
✍️ *போலீஸ் குறித்து அநாகரிக பேச்சு சீமானுக்கு எஸ்பி வக்கீல் நோட்டீஸ்*
திருச்சி: போலீஸ் குறித்து அநாகரிகமாக பேசிய சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீஸ் அதிகாரிகள் குறித்து கொச்சைப்படுத்தி ஒருமையில் அநாகரிகமாக பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது.
✍️ *திருட்டு மற்றும் முறைகேட்டை தவிர்க்க கியூஆர் பார்கோடுடன் சமையல் கேஸ் சிலிண்டர்கள்: எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை*
சிலிண்டர்களை கியூஆர் பார் கோடுடன் வழங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கியூ ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே இனி உங்களால் வீட்டு உபயோக சிலிண்டரை வாங்க இயலும். இது சிலிண்டர் திருடுபவர்களை கண்டுபிடிக்க மற்றும் சிலிண்டர் திருட்டை தடுக்க உறுதுணையாக இருக்கும்.
✍️ *மண்ணில் புதைந்தவர்களை கண்டுபிடிக்க நவீன டிரோன்கள் மூலம் ஆய்வு: வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 380ஐ தாண்டியது*
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 380ஐ தாண்டி இருக்கிறது. இதற்கிடையே மீட்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மாயமானவர்களின் உடல்களை தேடும் பணி நவீன ட்ரோன் மூலம் நடத்தப்படுகிறது.
✍️ *இமாச்சல மேக வெடிப்பு பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு; மாயமான 53 பேரை தேடும் பணி தீவிரம்*
சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
✍️ *பைக் சாகசம் செய்தவருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்*
தாம்பரம் அருகே பைக் ரேசில் ஈடுபட்டவருக்கு ரூ.12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
✍️ *போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி ஏட்டு பலி*
போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி பைக் ரேசில் ஈடுபட்டவர், தலைமைக் காவலர் குமரன் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில், தலைமைக் காவலர் குமரன் மற்றும் ரேசில் ஈடுபட்டவர் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர்.இதில், குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக் ரேசில் ஈடுபட்டவர், பாதுகாப்பு ஆடை அனிந்து இருந்ததால் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
✍️ *மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு பாதுகாப்பு*
சென்னை: மகள், மனைவியை கடத்தி கொன்று விடுவோம் என, மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
✍️ *வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு*
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத, 29 உடல்கள் மற்றும் 85 உடல் உறுப்புகளுக்கு, ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
✍️ *தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு*
வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
✍️ *பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்... வீடியோ வெளியிட்டு இளைஞர் எச்சரிக்கை*
பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றுவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.
✍️ *பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று ஆடுகிறார்*
✍️ *டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்*
✍️ *2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு... இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*