7/8/2024 ஆம் தேதி பேனாமுள் பத்தரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 7/08/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

✍️ *ஆகஸ்ட்*- 07
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5242
22 K தங்கம்/ g. : ₹ 6399
24 K தங்கம்/g   : ₹ 6981
    வெள்ளி    /g   : ₹ 87.40

✍️ *பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: ஜனாதிபதி முகமது சஹாபுதீன் அறிவிப்பு, இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை*

டாக்கா: மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் நேற்று கலைத்துள்ளார். இதன் மூலம் புதிதாக பொதுத்தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரையிலும் இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

✍️ *கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு*

மாயமான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடபட்டுள்ளது.

✍️ *சார்ஜ் போட்டபோது வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்தது: புகைமூட்டத்தால் பயணிகள் அலறல்*

வாணியம்பாடி அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் திடீரென வெடித்ததில் ரயில் பெட்டியில் புகை சூழ்ந்தது. பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

✍️ *இடைப்பாடியில் அதிகாலை பரபரப்பு போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பெரிய ரவுடி ஆவதற்காக வீசியதாக கைதான லாரி கிளீனர் வாக்குமூலம்*

இடைப்பாடி: போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இச்செயலில் ஈடுபட்ட லாரி கிளீனரை 12 மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

✍️ *சட்டரீதியான சிக்கல்கள் தீர்ந்து அனுமதி நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல்: ஆக.15 முதல் இயக்கம்*

நாகப்பட்டினம்: சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்து அனுமதி கிடைத்ததால் நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 15ம்தேதி முதல் மீண்டும் துவங்கப்படுகிறது.

✍️ *கோவையின் 7வது மேயராக ரங்கநாயகி பதவி ஏற்றார்: போட்டியின்றி தேர்வு*

கோவை: கோவை மாநகராட்சி 7வது மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வாகி நேற்று பதவி ஏற்றார்.

✍️ *வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் நிறுவனங்கள் ஜவுளித்துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை*

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் தொடங்குவதற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் `கோயம்புத்தூர்’ என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

✍️ *தமிழக கடலோரத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பு 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்*

சென்னை: தமிழக கடலோரத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *செய்திகளின் உண்மைத்தன்மை அறிய தமிழக அரசு தொடங்கிய புதிய வாட்ஸ்அப் சேனல்*

சென்னை: செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கியுள்ளது.

✍️ *சென்னை,அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை*

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட ஆம்பிட் கம்பெனிக்கு எதிரே உள்ள  கம்பேனி ரோட்டில் ஓரமாக இருக்கும் நடைபாதையை ஆக்கிரமித்து அங்கு மரங்களை வேட்டி வேலி அமைத்து இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

 இந்த ஆக்கிரமிப்பு இடத்திலேயே அந்த கப்பேனி கழிநீரையும் விடுகிறது என்று கூறுகிறார்கள் அப்பகுதியில் பணிபுரியும் பொதுமக்கள் 
இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தால் அங்கு பணிபுரியும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் 
ஒரு தனிப்பட்ட கம்பெனி இப்படி ஆக்கிரமிப்பு செய்து அங்கு இருந்த மரங்களை வெட்டி கழிவு நீர் விடுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதுமாக இருந்து வருகிறது அந்த இடத்தில் மக்களுக்கு பயனுள்ளவாறு பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் 
அப்பகுதியில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான மக்கள்  பேருந்துக்காக ரோட்டிலேயே நிற்கும் அவலநிலையில் இருக்கிறது இதனால் மாலை நேரத்தில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது
அந்த வழியாகத்தான் மாதவரத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மதுரவாயல்  பைபாஸ்க்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆம்பிட் கப்பேனி அருகே தான் நின்று செல்கிறது ஆனால் பேருந்து நிலையம் இல்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

✍️ *ஜீரோ விபத்து நாள்’ இலக்கு வெற்றியடைய மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள்*

சென்னை: ‘ஜீரோ விபத்து நாள்’ இலக்கை அடைய சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் இதழ் வடிவமைப்பு இலவச பயிற்சி வகுப்பு*

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இதழையும் அச்சிட்டு வெளிக்கொண்டு வருவது என்பது தாயின் பிரசவம் போன்றது.

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு முதன்மையான தேவை இதழ் வடிவமைப்பு (DTP) ஒரு இதழ் வடிவமைக்க ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை செலவிட வேண்டும். மேலும் இதழ் வடிவமைப்பாளர் (DTP Designer) தட்டுப்பாடு உள்ளது.

வளர்ந்து வரும் இதழாளர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் இலவச இதழ் வடிவமைப்பு (DTP) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் வடிவமைக்க (DTP) முழுமையான பயிற்சி அளிக்கப்படும்

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இதழ் வடிவமைப்பு (DTP) பயிற்சி பெற்று நமது இதழை வடிவமைத்து கொள்ளலாம்.

இத்துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* பத்திரிகையாளர் நலனை முன்னிறுத்தி பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எங்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களது ஆதரவை தொடர்ந்து நல்கிட வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

✍️ *தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு*

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,200க்கு விற்கப்பட்டது.

✍️ *ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை மிரட்டிய வழக்கில் சிக்கும் பள்ளி தாளாளர்: கடலூர் விரைந்தது தனிப்படை*

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை கைது செய்ய, தனிப்படை போலீசார் கடலூருக்கு விரைந்துள்ளனர்.

✍️ *இதுவரை செல்ல முடியாத அபாயகரமான வயநாடு சன் ரைஸ் பள்ளத்தாக்கில் மீட்பு படையினர் பரிசோதனை: நிலச்சரிவு பலி எண்ணிக்கை 410ஆக உயர்வு*

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்து உள்ளது. ேநற்று 8வது நாளாக உடல்களைத் தேடும் பணி நடந்தது. இதுவரை செல்ல முடியாத அபாயகரமான சூஜிப்பாறை சன்ரைஸ் பள்ளத்தாக்கில் நேற்று ராணுவம், வனத்துறை உள்பட மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் சென்று உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

✍️ *வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்*

வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

✍️ *பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.*

✍️ *கொழும்பு: இலங்கை – இந்தியா மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.*

✍️ *ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் ஸ்பெயினை பந்தாடியது நெதர்லாந்து*

✍️ *பாரிஸ்: ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் பங்கேற்க இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments