🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 8/08/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
✍️ *ஆகஸ்ட்*- 08
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி* : 24297.50
*பேங்க் நிப்டி* : 50119.00
*சென்செக்ஸ்* : 79468.01
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5184
22 K தங்கம்/ g. : ₹ 6329
24 K தங்கம்/g : ₹ 6905
வெள்ளி /g : ₹ 86.90
✍️ *சென்னை,அம்பத்தூர்,பாடிக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வைக்கு பாடி,87 வது வார்ட்,வன்னியர் தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள E B சிமெண்ட் போஸ்டரை மாற்றிதரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை*
சென்னை,அம்பத்தூர்,
பாடி,வன்னியர் தெரு,23/33 என்ற விலாசம் அருகில் உள்ள மின் ஒயர்கள் தாங்கி நிற்கும் சிமெண்ட் போஸ்டர் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது தற்போது மழை காலம் என்பதால் காத்து பலமாக வீசினாலோ மழை பலமாக வந்தாலோ மின்சாரம் ஒயரை தாங்கி இருக்கும் சிமெண்ட் போஸ்டர் கண்டிப்பாக கீழே விழும் இந்தப் பகுதியில் பள்ளிக்குழைந்தைகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் சென்று வருவதால் இந்த மின்சார ஒயர்களை தாங்கி நிற்கும் சிமெண்ட் போஸ்டர் கீழே விழுந்தால் கண்டிப்பாக உயிர் சேதம் ஏற்படும் சம்பந்தப்பட்ட பாடி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சிமெண்ட் போஸ்டரை மாற்றி தருமாறு அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது
✍️ *ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் தகுதி நீக்கம்: வெறும் 100 கிராம் எடை கூடிவிட்டதாக காரணம் கூறியதால் அதிர்ச்சி*
பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
✍️ *சென்னையில் 17ம் தேதி கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியீடு*
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் சென்னையில் வரும் 17ம் தெதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
✍️ *தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி அமைச்சரவை கூட்டம்*
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 13ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் அதிரடி கைது*
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கொலைக்கு மூளையாக செயல்பட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை தனிப்படை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
✍️ *திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்*
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் சார்பில் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
✍️ *வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு*
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *புதுச்சேரி புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் பதவி ஏற்றார்: முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து*
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
✍️ *நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி*
காத்மண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
✍️ *தங்கம் விலை 2 நாளில் ரூ.1,120 குறைவு*
கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து உள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்கு பின், சவரன் தங்கம் விலை, 51,000 ரூபாய்க்கு கீழ் சென்று உள்ளது.
✍️ *தரைக்காற்றுடன் மழை: 11 வரை தொடரும்*
சென்னை:தமிழகம், புதுச்சேரியில் வரும் 11ம் தேதி வரை, பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
✍️ *கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியல் 'ரிலீஸ்' 15 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து சாதனை*
சென்னை:கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 15 மாணவர்கள் 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு 200 எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.
✍️ *புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; வருகிற 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்*
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
✍️ *3வது போட்டியில் இந்தியா படுதோல்வி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை*
✍️ *இனியும் போராட என்னிடம் வலிமை இல்லை.. ஓய்வு பெறுகிறேன்.. வினேஷ் போகத் உருக்கம்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங கள்
*பாடி பா.கார்த்திக்*