🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 10/09/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
✍️ *செப்டம்பர்* 10
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5472
22 K தங்கம்/ g. : ₹ 6680
வெள்ளி /g : ₹ 90.00
*மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரிகள் பார்வைக்கு அம்பத்தூர்,பாடி,தேவர்நகர் மற்றும் குமரன் நகர் பகுதி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டி எத்தனை முறை கூறினாலும் எத்தனை வருடங்களாக கூறினாலும் நடவடிக்கை எடுக்காத மெட்ரோ வாட்டர் நிர்வாகம்*
*சென்னை,அம்பத்தூர் பாடிக்கு உட்பட்ட மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் அலட்சியத்தால் கிட்டதட்ட பல வருடங்களுக்கு மேல் ரோடு இல்லாமல் தவித்துவரும் சென்னை, அம்பத்தூர்,பாடி,தேவர்நகர்,
குமரன்நகர் பொது மக்கள் எப்போது கேட்டாலும் இப்போது முடிந்து விடும் இப்போது முடிந்துவிடும் என்று கூறி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் இப்போது முடிந்துவிடும் என்று கூறும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள்*
தற்போது ஒரு படி மேலே சென்று பாடி,தேவர்நகர்,காந்தி தெருவிற்குள் செல்ல முடியாமல் சாலையை அடைத்து வைத்திருக்கிறார்கள்
ஒரு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் கூட தெருவுக்குள் செல்ல முடியாத நிலையில் தெருவை அடைத்து வைத்திருக்கிறார்கள்
தற்போது வேலை கூட நடைபெறாமல் இருந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
பல வருடங்களாக பாடி,தேவர்நகரில் இருந்து குமரன் நகர் செல்லும் சாலையை சீர் செய்து தடையில்லாமல் செல்வதற்கு தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.
எத்தனை முறை தகவல் கூறினாலும் செவி கொடுத்து கேட்காமல் பல வருடமாக ரோடே இல்லாமல் உள்ளது.
பலமுறை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் பல வருடங்களாக சீர் செய்யாமல் இருந்து வருவதால் ரோடே இல்லாமல் போக்குவரத்து முடக்கப்பட்டு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறார்கள்.
தற்போது வேலை செய்வதாக கூறி பாடி,தேவர் நகர்,காந்தி தெரு ரோட்டை முழுமையாக அடைத்து யாரும் அந்த தெரு வழியாக செல்லமுடியாத நிலையில் உள்ளது.
சென்ற மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து வேலையும் முடித்துவிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு NOC கொடுத்து விடுவோம்
பிறகு தார் சாலை போடுவார்கள் என்று உறுதி கூறிய மெட்ரோ வாட்டர் அதிகாரி
இது வரை வேலையை முடிக்கவே இல்லை
*மெட்ரோ வாட்டர் நிர்வாகமே ? மெட்ரோ வாட்டர் நிர்வாகமே? அம்பத்தூர், பாடி,குமரன் நகரில் இருந்து தேவர்நகர் செல்லும் வழி பல வருடங்களாக முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்துவருகிறது இந்த பகுதி மக்கள் பிரச்சனையை செவி கொடுத்து கேளு மெட்ரோ வாட்டர் நிர்வாகமே*
சென்னை அம்பத்தூர் பாடி மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் தொடர் பிரச்சினையாக இருந்து வரும் பள்ளத்தை சரி செய்ய வேண்டி மெட்ரோ வாட்டர் உயர் அதிகாரிகள் பார்வைக்கு
எத்தனை முறை மெட்ரோ வாட்டர் அதிகரிகளுக்கு தகவல் சொன்னாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆமை வேகத்திலேயே வேலை நடந்து வருகிறது
சென்னை அம்பத்தூருக்கு உட்பட்ட 88வது வார்ட், பாடி,குமரன் நகரில் இருந்து தேவர் நகர் செல்லும் மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் மற்றும் TVS மெயின் ரோடு முழுக்க பல இடத்தில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்கிறார்கள்
மறுபடியும் பள்ளம் ஏற்படுகிறது சரி செய்கிறார்கள்
திரும்பவும்
பள்ளம் ஏற்படுகிறது
கிட்டத்தட்ட பல வருடங்களாக
மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இதை தான் செய்து வருகிறது
இம்முறை மறுபடியும் தேவர்நகர் கருமாரி அம்மன் கோவில் அருகில் சரி செய்கிறோம் என்று சரி செய்ய ஆரம்பித்தனர் கிட்டதட்ட ஒரு மாதம் ஆகியும் தோண்டிய பள்ளம் சரி செய்யாமல் ஆமை வேகத்தில் வேலை நடைபெறுகிறது ரோட்டை முழுமையாக மூடி
வழியில்லாமல் இருந்துவருகிறது இந்த வழியாக காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து சென்ற போது குடும்பத்தோடு வந்த ஒரு குடும்பம் தோண்டிய பள்ளத்தின் அருகில் விழுந்து நூலிழையில் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றார்கள் ஓவ்வொரு முறையும் இந்தப் பள்ளம் ஏற்படுகிறது இதில் மழை நீர் கலந்து சேறு போல் உள்ளதால் மக்கள் சர்க்கஸ் போல் சறுக்கி செல்கிறார்கள்
அதை எவ்வளவோ பொருள் செலவு செய்து சரி செய்து பள்ளத்தை மூடுகிறார்கள்
மறுமுறையும் சிறிது நாட்களிலேயே பள்ளம் ஏற்படுகிறது அப்பகுதியாக செல்லும் அரசு பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் மறித்து மாற்றுப்பாதையில் திருப்பி விடுகிறார்கள்
நீண்ட வருடமாக ரோடும் போடாமல் இருந்து வருகிறது பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் இங்கு ஏற்படும் தொடர் பள்ளத்தை சரி செய்தால் மட்டுமே அப்பகுதியில் ரோடு போட முடியும் என்றும் அதையும் மீறி ரோடு போட்டால்
மறுபடியும் பள்ளம் ஏற்பட்டு அனைத்து பொருட்செலவோடு ரோடு போட்டது வீணாகிவிடும் என்று கூறுகிறார்கள்
மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஏன் 7 வருடங்களுக்கு மேல் இதனை நிரந்தரமாக சரி செய்ய முடியவில்லை என்று
அப்பகுதி மக்களின் தொடர் வேண்டுகோளாகவே இது மாறிவிட்டது
உடனடியாக சம்பந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.
✍️ *மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: மத்திய அரசு அறிவிப்பு*
விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற பிரத்யேக அடையாள அட்டையை வழங்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயிகள் பதிவு தொடங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஐந்து கோடி விவசாயிகளை பதிவு செய்வதே எங்கள் இலக்கு. இதற்காக ரூ. 2,817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
✍️ *புதுச்சேரி - எழும்பூர் உட்பட 7 ரயில்கள் ரத்து*
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, புதுச்சேரி - எழும்பூர் உட்பட ஏழு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
✍️ *மாணவர்கள் எண்ணிக்கையில் தில்லுமுல்லு; தலைமை ஆசிரியை, பி.இ.ஓ., 'சஸ்பெண்ட்'*
சென்னை: மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவில் பொய்யான தகவலை அளித்து, கல்வித்துறையை ஏமாற்றிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி அதிகாரி ஆகியோர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
✍️ *மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்*
மிலாது நபி, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை நாளும் மாற்றப்பட்டுள்ளது.
✍️ *மனைவியை பிரிந்தார் நடிகர் ஜெயம் ரவி*
பிரபல நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
✍️ *முதியோர் இல்லம் கட்டாயம்*
அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லம் கட்டுவதற்கான பணிகளை 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை அறிவித்துள்ளது.
✍️ *தமிழகத்தில் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு*
தமிழகத்தில் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வரும் 20ம் தேதி முதல் 27ம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடத்த உத்தரவு.
✍️ *6 கொலைகள்; டி.ஜி.பி., விளக்கம்!*
தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற கொலைகள் முன்விரோதம், சொத்து தகராறு காரணமாக நடைபெற்றவை.
ஜாதி, மத மோதல் காரணமாகவோ, வன்முறை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல.
ஒரே நாளில் 6 கொலைகள் நடைபெற்றதாக இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்த நிலையில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் விளக்கம்.
✍️ *வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்*
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
✍️ *சென்னை ஐ.சி.எப்., க்கு வருகிறது 'சிலீப்பர் வந்தே பாரத்' ரயில்*
படுக்கை வசதியுள்ள, 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு பணி முடிந்துள்ளதால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வந்து, விரைவில் பல கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
✍️ *மொழிபெயர்ப்பாளர் கா.செல்லப்பன் மறைவு*
சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரும், பேராசிரியருமான கா.செல்லப்பன், 88; நேற்று காலமானார்.
✍️ *வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது*
தேனி:விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெடி வெடிக்க வேண்டாம் என எச்சரித்த போலீசாரை தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்து கற்களால் தாக்கிய பொம்மையக கவுண்டன்பட்டி பள்ளி ஓடைத் தெரு கபிலன் 22, ஜீவா 20, ஆகிய இருவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
✍️ *மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்று மருமகன் தற்கொலை*
திருப்பூர்: மாமனாரை 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அதே துப்பாக்கியால் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்தபோது மின்சாரம் தாக்கி தம்பதி பலி: மகள் கதறல்*
நாகர்கோவிலில் வீட்டில் கொடிக்கயிற்றில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
✍️ *சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 365 கிலோ தங்கம் அளவீடு பணி*
சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற 365 கிலோ தங்க நகைகளை தரம் பிரித்து எடை போடும் பணி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ தலைமையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.
✍️ *திமுக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு கட்சியின் பவளவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும்: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்*
திமுகவின் பவள விழாவை முன்னிட்டு கட்சியினர் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடியை ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார்.
✍️ *டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்*
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை மறுநாள் முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரயில்வே தகவல்*
சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ம் தேதியும், ஜனவரி 11ம் தேதிக்கு பயணம் செய்ய 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதிக்கு வரும் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ *வீடு, அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நோ-பார்க்கிங் போர்டு வைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு*
கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள நோ பார்கிங் போர்ட், பேரிகார்ட் மற்றும் விளம்பரப்பலகை ஆகியவற்றை அகற்றமாறு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
✍️ *தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரையிறக்கம்*
உத்திரமேரூர் அருகே, எடமச்சி கிராமத்திற்குட்பட்ட விவசாய நிலத்தில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்திய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.
✍️ *ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்*
ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
✍️ *போராட்டங்களை கைவிட்டு டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு*
மேற்கு வங்காளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவித்தனர்.
✍️ *குற்றம் கை, கால்களை கட்டி சாக்குப்பையில் வைத்து வாஷிங் மெஷினில் போட்டு குழந்தை கொடூர கொலை*
விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம்மாள் குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்னை இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் தங்கம்மாளின் வீட்டில் சோதனை செய்த போது 3 வயது குழந்தை சஞ்சீவை அங்குள்ள வாஷிங்மெஷினிலிருந்து சாக்குப்பையில் சடலமாக மீட்டனர்.
✍️ *யூடியூப் பார்த்து ஆபரேஷன் பீகாரில் சிறுவன் பலி: போலி டாக்டர் கைது*
பீகார் : யூடியூப்பை பார்த்து ஆபரேஷன் செய்ததில் சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
✍️ *சினிமா*
👉 '*தி கோட்' படம்: 4 நாட்களில் ரூ. 288 கோடி வசூல் செய்து சாதனை*
👉 *வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்ட்டி' திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்*
✍️ *ஆன்மீகம்*
*விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதன் அறிவியல் காரணம்*
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள்தான் சிலையை கரைப்பார்கள். இதற்கு காரணம் களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆரம்பத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனை அன்றைய தினமே கரைத்தால் ஈரமான களிமண் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிடும் என்பதால்தான் நன்றாக காயும் வரை காத்திருந்து மூன்றாம் நாள் கரைக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டார்கள்.
பேனாமுள் பத்தரிகை செய்திகளுக்காகா உங்கள்
*பாடி பா.கார்த்திக்*