15/9/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்தி
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 15/09/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

✍️ *செப்டம்பர்* 15
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5623
22 K தங்கம்/ g. : ₹ 6865
 வெள்ளி    /g   : ₹ 97.00

✍️ *அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு*

அமெரிக்க பயணத்தை முடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பயணம், தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக அமைந்ததாக அவர் பெருமிதத்துடன் கூறினார். இந்த பயணத்தில் 19 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

✍️ *சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி: மலேசிய தமிழர்கள் 7பேர், டிரைவர் படுகாயம்*

தேவகோட்டை அருகே மலேசிய சுற்றுலாப்பயணிகள் வந்த வேன், கார் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த தந்தை, 2 மகள்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வேனில் வந்தவர்களில் 7பேர் படுகாயமடைந்தனர்.

✍️ *குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 5.81 லட்சம் பேர் எழுதினர்*

தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர்.

✍️ *தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும்*

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ *தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு*

தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 6,865 ரூபாய்க்கும்; சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 54,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 97 ரூபாய்க்கு விற்பனையானது.

✍️ *பருவமழையை எதிர்கொள்ள பல்துறைகளுக்கு அறிவுரை*

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் குறித்து, தலைமை செயலர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், பல்வேறு துறை செயலர்கள், காவல் துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தலைமை செயலர் அறிவுரை வழங்கினார்.

✍️ *ஜம்முவில் 3 என்கவுன்டர் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் வீரமரணம்*

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய 3 என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

✍️ *அசாம் அரசுத்தேர்வு இன்டர்நெட் நிறுத்தம்*

’பொதுத் தேர்வை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

✍️ *கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் காயம்*

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் எஸ்.என். பானர்ஜி சாலை – பிளாச்மேன் சாலை சந்திப்பு அருகே பழைய பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கும் கடை உள்ளது. நேற்று மதியம் பாபி தாஸ்(58) என்பவர் இந்த சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மர்ம பொருள் வெடித்ததில் பாபி தாஸ் காயமடைந்தார்.

✍️ *ஓணம் சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி டிரைவர் பலி*

பாலக்காடு அருகே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

✍️ *மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு*

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, இதே கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த தூத்துக்குடி சிப்காட்டை சேர்ந்த செபாஸ்டின்,பால்ராஜ் ஆகியோர் நள்ளிரவில் செல்போனில் தொடர்பு கொண்டு ‘மது குடிக்கலாம் வர்றீயா?’ என்றும், ஆபாசமாக வரம்பு மீறி பேசியதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை. போலீசார் வழக்கு பதிந்து தூத்துக்குடி சிப்காட்டை சேர்ந்த பேராசிரியர் செபாஸ்டினை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

✍️ *இறக்குமதி வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு: விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி*

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை 22 சதவீதம் உயர்த்தியதையடுத்து எண்ணெய் ரகங்களின் விலை திடீரென லிட்டருக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

✍️ *3வது டி20: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்*

✍️ *டைமண்ட் லீக் இறுதி சுற்று: வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா*

✍️ *இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்; வங்காளதேச அணி வீரர்கள் இன்று சென்னை வருகை*

✍️ *தீப்பந்தம் ஏந்திய போஸ்டர் வெளியீடு விஜய் நடிக்கும் புதிய படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் ரிலீஸ்*

✍️ '*வெறி' பாடலின் லிரிக்கல் வீடியோவை மெய்யழகன் படக்குழு வெளியிட்டுள்ளது.*

✍️ *புரட்டாசி மாத பிரதோஷம் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி*

✍️ *குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.*

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments