🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 23/09/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
✍️ *செப்டம்பர்* 23
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுர குமார திசநாயகே
கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
✍️ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
✍️ சனாதன தர்மம் என்பது எளிமையானது.- கவர்னர் ஆர்.என்.ரவி
சனாதன தர்மம் என்பது எளிமையானது. ஆனால் வெளியே தெரியும் போது சிக்கலானதாக தெரிகிறது. ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகின்றோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
✍️ சென்னையில் நாளை முதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்திலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
✍️ திருப்பதியில் இன்று சிறப்பு சாந்தி யாகம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள தங்க கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
✍️ 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா: பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் தகவல்
297 பழங்கால பொருட்களை அமெரிக்கா திருப்பி தருவதாக பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
✍️ கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு
சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழல் பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
✍️ அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடி விட முடியும்: திருமாவளவன்
இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
✍️ வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
✍️ தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 1.5 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
✍️ என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது
தென் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் நேற்று அதிகாலை சேலத்தில் கைது செய்தனர்.
✍️ நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
✍️ கொடுத்த ரூ.11 லட்சம் கடன் வரலையே… கடிதம் எழுதிவிட்டு தம்பதி தற்கொலை
✍️ ஆரணி: பைக் மீது லாரி மோதி நண்பர்கள் 3 பேர் பலி
✍️ ஐ.நா.,வில் சீர்திருத்தத்துக்கு 'குவாட்' தலைவர்கள் உறுதி!: உக்ரைன், காசாவில் அமைதி திரும்பவும் வலியுறுத்தல்
டெலாவர்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்' என, 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் உறுதி தெரிவித்தனர். உக்ரைன் மற்றும் காசாவில் நடைபெறும் போர் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பவும் அவர்கள் வலியுறுத்தினர்.
✍️ அமெரிக்காவில் இந்திய தயாரிப்பு 'சிப்'கள்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
நியூயார்க்: ''மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கு தேவையான, 'செமிகண்-டக்டர்' எனப்படும், 'சிப்' தயாரிப்பில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தயாரிப்பு, 'சிப்'களை அமெரிக்காவில் நீங்கள் காணும் நாள் வெகு துாரத்தில் இல்லை,'' என, பிரதமர் மோடி பேசினார்.
✍️ கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
✍️ 3வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி
✍️ செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*