🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 24/09/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
✍️ *செப்டம்பர்* 24
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25939.05
பேங்க் நிப்டி : 54105.80
சென்செக்ஸ் : 84928.61
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5718
22 K தங்கம்/ g. : ₹ 6980
வெள்ளி /g : ₹ 98.00
✍️ ரூ60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
✍️ போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் பரபரப்பு
திருச்சி: கைதான குற்றவாளி போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது, போலீசார் அவரை இடது முழங்காலில் சுட்டு பிடித்தனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
✍️ தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களை இணைக்கும் வகையில் டிசம்பர் முதல் மீண்டும் மினி பஸ் சேவை
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக பகுதிகளில் டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவை தொடங்குவதற்கு திட்டமிட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
✍️ அரசு பஸ்களில் முன்பதிவுகளை எளிதாக்க புதிய இணையதளம், செயலி தொடக்கம்
தமிழக பொது போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
✍️ வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை
உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
✍️ வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.என எடபாடி கூறினார்.
✍️ அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்: ரயில் சேவை பாதிப்பு
அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
✍️ ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
ஒரு புதிய பொலிவோடு திருவள்ளுவர் கோட்டம் மக்களின் விருப்பமான இடமாக நிச்சயம் காட்சியளிக்கும். காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தப் பணிகள் திட்டமிட்டபடி, ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
✍️ பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
✍️ த.வெ.க., மாநாட்டுக்கு எப்படி வரணும்; தொண்டர்களுக்கு விஜய் விதித்த 8 நிபந்தனை
மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கட்சி தலைமை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக 8 நிபந்தனைகளை கட்சி மேலிடம் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.
✍️ டி.என்.பி.எஸ்.சி.,யில் விடைத்தாள் திருத்த புதிய மென்பொருள் உருவாக்கம்
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த, புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.
✍️ தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 6,980 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
✍️ 'ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு
மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தொழில் நெறி அனுபவத்தை வழங்கும் வகையில், எட்டு வார காலத்தில், 'ஏ.ஐ., - டேட்டா சயின்ஸ்' என்ற புதிய படிப்பை இணைய வழியில் நடத்த, சென்னை ஐ.ஐ.டி., முன்வந்துள்ளது. இதில், சேர பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
✍️ புல்லட் ரயில் தயாரிக்க பி.இ.எம்.எல்., ஒப்பந்தம்
நாட்டின் முதல் புல்லட் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பி.இ.எம்.எல்., நிறுவனம் பெற்றுள்ளது.
✍️ பரதன் போல் காத்திருக்க போவதாக...ஆதிஷி அறிவிப்பு!
டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி நேற்று பொறுப்பேற்றார். ஆனால், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியில் அமர மறுத்து அதை காலியாக வைத்து, அதற்கு அருகில் மற்றொரு நாற்காலியில் அமர்ந்து, தன் பொறுப்புகளை அவர் ஏற்றார். ராமாயண பரதன் போல் பதவியில் இருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
✍️ சிறுவர் - சிறுமியரை வைத்து ஆபாச வீடியோ மொபைல்போனில் பார்த்தாலே தண்டனை சுப்ரீம் கோர்ட் அதிரடி
'குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வதும், பார்ப்பதும், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமே' என, மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
✍️ இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
✍️ இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் - இளைஞர்கள் கைது
அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இரண்டு வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
✍️ அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சாா்பில் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் பரிந்துரை
அடுத்த ஆண்டு ‘ஆஸ்கா்’ விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் இந்தி மொழியில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் அனுப்பப்படுகிறது.
✍️ திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
✍️ நில முறைகேடு விவகாரம்: சித்தராமையா வழக்கில் இன்று தீர்ப்பு
மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
✍️ லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
✍️ போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் தனது பொதுமக்களுடனான சந்திப்பை ரத்து செய்தார்.
✍️ சுயசேவை இயந்திரம் மூலமாக விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் என்ற பாதையில், சுயசேவை இயந்திரம் மூலமாக விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
✍️ காஷ்மீரில் நாளை 2ம் கட்ட தேர்தல்
காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. நாளை 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
✍️ திருப்பதியில் லட்டு பிரசாதம் நெய்யில் கலப்பட விவகாரம்: ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம்; கோயில் முழுவதும் புனிதநீர் தெளித்தனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது. தொடர்ந்து கோயில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*