🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 5/09/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
✍️ *செப்டம்பர்* 5
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25198.70
பேங்க் நிப்டி : 51400.25
சென்செக்ஸ் : 82352.64
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5464
22 K தங்கம்/ g. : ₹ 6670
வெள்ளி /g : ₹ 90.00
✍️ *பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்களுக்கு 5 ஆண்டு தடை: தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு*
பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
✍️ *வெடிமருந்து பெட்டி தவறி விழுந்ததில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து; தொழிலாளி பலி: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு*
சேலம்: பட்டாசு தொழிற்சாலையில் வெடிமருந்து பெட்டி தவறி விழுந்து வெடித்ததில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
✍️ *வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு 10ம் தேதி வரை மழை நீடிக்கும்*
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
✍️ *குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு*
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
✍️ *விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்*
விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
✍️ *தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
2024-2025ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது.
✍️ *தேசிய மருத்துவப் பதிவேட்டில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பதிவு செய்ய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு*
இந்திய மருத்துவப் பதிவேட்டில் (ஐஎம்ஆர்) பதிவு செய்துள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் என்எம்சியின் என்எம்ஆரில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
✍️ *ரூ.200 கோடி முதலீட்டில் சென்னையில் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ஒப்பந்தம் கையெழுத்து*
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
✍️ *எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்*
எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
✍️ *நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் சென்னை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு*
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளான வரும் 13, 17ம் தேதிகளில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
✍️ *'விஜய்யின் படம் வெற்றி பெறவும், மாநாடு சிறக்கவும் வாழ்த்துகிறோம்' - சீமான்*
விஜய்யின் படம் வெற்றி பெறவும், கட்சியின் மாநாடு சிறக்கவும் வாழ்த்து தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.
✍️ *அமைச்சரை வரவேற்க ரோடு சீரமைப்பு: தடுத்து நிறுத்திய காங்., - எம்.எல்.ஏ.,*
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நேற்று சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
மார்த்தாண்டம் பகுதியில் மிக மோசமாக சேதம் அடைந்திருந்த சாலைகளை நேற்று முன்தினம் இரவில் தற்காலிகமாக சீரமைக்க ஊழியர்கள் முயன்றனர். இதையறிந்த காங்., - எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் அங்கு சென்று அப்பணிகளை தடுத்து நிறுத்தினார்.
✍️ *விஜய் நடித்த 'பிகில்' விவகாரம்: இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ்*
நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்தின் கதை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானதை எதிர்த்த மேல் முறையீடு மனுக்களுக்கு, பட இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *பெட்ரோல் பங்கில் மோசடி வாகன ஓட்டிகள் போலீசில் புகார்*
விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்கில் மோசடி செய்வதாக கூறி, வாகன ஓட்டிகள் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.
✍️ *காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு*
தமிழகத்தில், 20 ஆண்டு முடிவடைந்த காற்றாலை மின் நிலையங்களை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ' பசுமை எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.
✍️ *வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு வாபஸ்*
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
✍️ *அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஸ்டாலின் - ராகுல் உரையாடல்*
முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் இடையிலான சமூக வலைதள உரையாடல், சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றதை போலவே, அரசியல் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.
✍️ *கோவளம் அருகே கோர விபத்து லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி*
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
✍️ *பாரா ஒலிம்பிக்: 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா*
✍️ *பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; இந்திய வீராங்கனை சிம்ரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்*
✍️ *பாரா ஒலிம்பிக் வில்வித்தை இறுதிப்போட்டியில் ஹர்வீந்தர் சிங் வெற்றி*
✍️ *வந்தாச்சி புது பிக்பாஸ் - 8வது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி*
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*