🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 7/09/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
✍️ *செப்டம்பர்* 7
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24852.15
பேங்க் நிப்டி : 50576.85
சென்செக்ஸ் : 81183.93
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5505
22 K தங்கம்/ g. : ₹ 6720
வெள்ளி /g : ₹ 92.00
✍️ *தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு*
தமிழ்நாட்டு பள்ளிகளில் அரசின் முன்அனுமதி இல்லாமல் கல்விசாராத எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
✍️ *பைக்கில் லிப்ட் கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்: தப்ப முயன்ற வாலிபர்கள் கால், கை முறிவு*
தஞ்சாவூர்: பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக பைக்கில் அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது தப்பிக்க முயன்றதில் ஆற்று பாலத்தில் பைக்குகள் மோதி கை, காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
✍️ *சென்னை ஐஐடி வழங்கும் 48 வார நிர்வாக எம்பிஏ படிப்பு தொடக்கம்*
சென்னை ஐஐடி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி இணைந்து 48 வார நிர்வாக எம்பிஏ படிப்பை வழங்கவுள்ளது. சென்னை ஐஐடி, தேசிய பாதுகாப்பு கல்லூரியுடன் இணைந்து, உத்திகள் தலைமை மற்றும் பொதுக் கொள்கை என்ற நிர்வாக எம்பிஏ படிப்பை வழங்குகிறது.
✍️ *கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை இரு மடங்கு உயர்வு*
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள் 2 மடங்கு விலை உயர்ந்தது.
✍️ *பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் அக்.21-ல் ஆரம்பம்*
செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 21 முதல் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். செய்முறைத்தேர்வுகள் அக்டோபர் 7ம் தேதி தொடங்கும். செமஸ்டர் விடுமுறை முடிந்து வகுப்புகள் டிசம்பர் 2ம் தேதி தொடங்கும்.
✍️ *ரூ850 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது*
அமெரிக்காவின் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய 3 உலகளாவிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் உற்பத்தி மையங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
✍️ *தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுடன் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை பாயும் என போலீஸ் எச்சரிக்கை*
தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்ய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
✍️ *விக்கிரவாண்டியில் 23ம் தேதி மாநாடு காவல்துறையின் கேள்விகளுக்கு விஜய் கட்சி நிர்வாகி பதில்*
விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் மாநாடுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் தவெக தெரிவித்துள்ளது.
✍️ *நாகை மீனவர்கள் 11 பேர் விடுதலை*
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
✍️ *தங்கம் விலையில் மாற்றம்: ஒரே நாளில் சவரன் ரூ400 உயர்ந்தது*
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760க்கும் விற்கப்பட்டது.
✍️ *மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர்*
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
✍️ *கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது திருப்பதியில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது*
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் நேற்று தொடங்கியது.
✍️ *பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்; இன்று சதுர்த்தி தீர்த்தவாரி*
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
✍️ *அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு*
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 5.20 கோடி ரூபாய் மதிப்புள்ள, நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது.
✍️ *பெண் டி.எஸ்.பி., தாக்கப்பட்ட வழக்கு; தலைமறைவாக இருந்தவர் கைது*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரோடு மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த பெண் டி.எஸ்.பி., தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முருகேசனை ,போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து கை முறிந்தது.
✍️ *சென்னையில் 35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் அடுத்த வாரம் முதல் விற்கிறது மத்திய அரசு*
சென்னையில், மலிவு விலை விற்பனையாக அடுத்த வாரம் முதல், 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயம், நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
✍️ *ககன்யான் திட்டத்தின் 5-வது கட்ட இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.*
✍️ *இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி -4 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது*
✍️ *ஆன்மீகம்*
*விநாயகர் சதுர்த்தி: சிலை பிரதிஷ்டை, பூஜைக்கு உகந்த நேரம்*
விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த வளர்பிறை சதுர்த்தி திதி, இன்று பிற்பகல் 3.38 மணி வரை இருக்கிறது. எனவே விநாயகருக்குச் செய்யவேண்டிய பிரதான பூஜையை காலையிலேயே செய்யவேண்டும். குறிப்பாக, காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டை தொடங்குவது கூடுதல் பலன் தரும்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*