16/10/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 16/10/2024

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்

🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 162
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை

✍️  அக்டோபர் 16
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 25057.35
பேங்க் நிப்டி : 51906.00
சென்செக்ஸ் : 81820.12

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5885
22 K தங்கம்/ g. : ₹ 7095
 வெள்ளி    /g   : ₹ 103.00

✍️ *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரண மையம்..*

மழையால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சங்க தலைமை அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  கனமழையை எதிர்க்கொள்ளும் வகையில் தமிழக அரசு தேவையான வசதிகளை சிறப்பாக செய்துள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிடும் நோக்கில் நமது சங்கம் தலைமை அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்றும் மக்கள் நலனில்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

*பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9381157520

✍️ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது சென்னை, மற்றும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✍️ சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசி மீட்பு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

✍️ சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசி மீட்பு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

✍️ சென்னை மழை எதிரொலி.. இன்று ரயில்கள் ரத்து 

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (16-ந்தேதி) சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

✍️ இந்திய வானில் வால் நட்சத்திரம்... 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு அரிய நிகழ்வு

நடப்பு ஆண்டின் செப்டம்பர் 28-ந்தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது. இதனால், பூமியில் இருந்து இதனை நாம் காண முடியும். அடுத்த 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு இதனை நாம் காண முடியாது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

✍️ பேச்சில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர் போராட்டம் வாபஸ்

அமைச்சர் நடத்திய பேச்சை அடுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

✍️ சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வழுப்பெற்றுள்ளது. இது வரும் 17 ம் தேதி அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கிறது.

✍️ பி.எட்., கலந்தாய்வு 21, 22க்கு ஒத்திவைப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேருவதற்காக, நடக்க இருந்த நேரடி கலந்தாய்வு, 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

✍️ சாலைகளில் வெள்ளப் பெருக்கு சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்

கனமழை காரணமாக சென்னை முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியது.

✍️ 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

✍️ மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்துக்கு…தண்ணீர் தேங்கும் பகுதியில் நுழைய வேண்டாம், பார்க்கிங்கில் வாகனம் நிறுத்த அனுமதி கிடையாது

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகளை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

✍️ கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 1500 பேருக்கு சமைக்க அதிநவீன சமையல் கூடங்கள்: அம்மா உணவகத்தில் பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு

கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1000 முதல் 1500 பேர் வரைக்கும் சமைப்பதற்கு அதிநவீன சமையல் கூடமும் தயார்நிலையில் இருக்கின்றது.அம்மா உணவகங்களில் வழக்கம் போல், உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலவசம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✍️ கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

✍️ தொடர் மழை இருந்தாலும் முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

கூறியதாவது:சென்னையில் தொடர் மழை பெய்தாலும், எவ்வித மாற்றமின்றி அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சாலைகளில் பெரும்பாலும் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதிகளவில் மழைநீர் தேங்கிய இடங்களில் மட்டுமே பேருந்துகள் மெதுவாக சென்றன. தாழ்தள பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்பட்டது. மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்துகள் இயக்கம் சீராகவே இருந்தது.

✍️ பழமையான மரம் முறிந்து விழுந்தது

தி.நகர் பர்கிட் சாலையில் பல ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று, கனமழை காரணமாக நேற்று அதிகாலை முறிந்து சாலையின் இடையே விழுந்தது. இதனால் பர்கிட் சாலையில் நேற்று மதியம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

✍️ பேசின்பாலம் ரயில் நிலைய லிப்ட்டில் பெண்கள் உள்பட 9 பேர் சிக்கியதால் பரபரப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சுமார் 9 பேர் லிப்ட்டில் ஏறி லிப்ட்டை ஆன் செய்த போது லிப்ட் பாதி தொலைவில் சென்று நின்றது. இதனால் அனைவரும் கூச்சலிட்டனர். லிப்ட்டில் இருந்த நூர் முகமது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பிறகு வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து லிப்ட் மெக்கானிக் கணபதி என்பவரை வரவழைத்து பத்திரமாக லிப்ட்டில் இருந்த ஒன்பது பேரையும் மீட்டனர்.

✍️ 133 மோட்டார்கள் மூலம் 119 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. மண்டலம் 1 முதல் 15 வரையிலான 119 இடங்களில் 133 மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

✍️ 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்... அரசின் உயர்மட்ட கூட்டத்தில் இன்று ஆலோசனை

விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என்ற அச்சுறுத்தல்கள், லண்டனில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ளன என காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

✍️ முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி

முன்பதிவு செய்யாமல் வரும் அய்யப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுமென கேரள முதல் மந்திரி தெரிவித்தார்.

✍️ சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் மழை

சென்னைக்கு இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.

✍️ இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

✍️ சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என கணித்துள்ளார்.

பேனாமுள் பத்தரிகை செய்திகளுக்காக உங்கள்
 
பாடி பா.கார்த்திக் 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments