🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 17/10/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 163
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
✍️ அக்டோபர் 17
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24971.30
பேங்க் நிப்டி : 51801.05
சென்செக்ஸ் : 81501.36
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5900
22 K தங்கம்/ g. : ₹ 7140
வெள்ளி /g : ₹ 103.00
✍️ குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரை கடக்கிறது
இன்று (17ம் தேதி) காலையில் புதுச்சேரி- தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கும் நெல்லூருக்கும் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
✍️ அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை ஒட்டி அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
✍️ அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்
கனமழை காரணமாக சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டது.
✍️ சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
✍️ சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 211 நச்சு பாம்புகள் மீட்பு
கனமழை காரணமாக நேற்று முன்தினம் மட்டும் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட 211 பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. பெருங்களத்தூர் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
✍️ சென்னையில் ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை
சென்னையில் ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
✍️ கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் குளங்கள் வெட்டும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
✍️ சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
✍️ மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
இன்று முதல் வழக்கம்போல் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
✍️ மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவை: பயணிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
✍️ புதுச்சேரியில் 8 ஆண்டுக்குப்பின் ரேஷன் கடைகள் 21ம் தேதி திறப்பு
தீபாவளிக்கு அறிவித்த 2 கிலோ சக்கரை, 10 கிலோ அரிசி வரும் 21ம் தேதி முதல் நியாவிலை கடைகளை திறந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ரேஷன் கடைகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்
✍️ காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள் 26ம் தேதி ஸ்டிரைக்
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,800 காஸ் ஏஜென்சிகளில் உள்ள சிலிண்டர் டெலிவரி மேன்கள் அடங்கிய அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ சாலைகளில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்றி சாதனை தூய்மை பணியாளர்களை பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: சிற்றுண்டி, உதவிப் பொருட்கள் வழங்கினார்
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையில் தொடர்ந்து இடைவிடாது பணியாற்றி வரும் பெருநகர சென்னை மாநகராட்சி 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பிரட், போர்வை உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
✍️ சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு: 95 சதவீதம் மழைநீரை அகற்றும் பணி நிறைவு
தங்கள் நலனை பொருட்படுத்தாமல் முழுவீச்சில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
✍️ படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் உணவு வழங்க மாநகராட்சி திட்டம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முன்னோட்டம் நேற்று நடைபெற்றது.
✍️ பெரம்பூர், வியாசர்பாடி மேம்பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
✍️ பைக் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்ற பிரபல நடிகரின் லைசென்ஸ் ஒரு மாதத்துக்கு ரத்து
கேரள மாநிலம் கொச்சியில் பைக் மீது மோதிய பிறகும் காரை நிறுத்தாமல் சென்றதாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீ நாத் பாசியின் லைசென்ஸ் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
✍️ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி அறிவிப்பு
ஜனவரி மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம் ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகள் ஜனவரி மாதத்திற்கு பெற அக்டோபர் 24 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்காக தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✍️ காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். விழாவில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
✍️ அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார்
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
✍️ தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் - செல்லூர் ராஜூ விமர்சனம்
தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல தற்போது இணக்கமாகிவிட்டனர் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
✍️ அடுத்த தலைமுறை ராக்கெட் தயாரிக்கிறது 'இஸ்ரோ'
என்.ஜி.எல்.வி., எனும், 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் லாஞ்ச் வெகிகிள்' எனப்படும் ஏவு வாகனத்திற்கு, திரவ ஆக்சிஜன், மீத்தேனை பயன்படுத்தக்கூடிய, 110 டன் உந்துசக்தி தரக்கூடிய இன்ஜினை வடிவமைத்து வருகிறோம்.
✍️ சோழவரத்தில் 30 செ.மீ., மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
✍️ மழை பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்
தமிழகத்தில் நேற்று முன்தினம், 1,293 இடங்களில் நடந்த மருத்துவ முகாம்களில், 78,000 பேர் பயன் பெற்றனர். இதில், 6,005 பேர், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். மழைக் காலம் முடியும் வரை, மழைநீர் தேங்கிய பகுதிகளில், காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுவதை தவிர்க்க, மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கரா்த்திக்*